jaga flash news

Thursday, 8 November 2012

கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே ?

கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே ? 

கேள்வி :

வணக்கம் குருஜி நான் தற்பொழுது சிங்கப்பூரில் வசித்து வருகிறேன் பணி நிமித்தமாக , எனது பூர்விகம் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி , தங்களது வலை பூ அறிமுகம் எனக்கு கடந்த சில
நாட்களாகவே அறிமுகம் , தாங்கள் தரும் தெளிவான ஜாதக பலன்கள் என்னை வியப்படைய செய்கிறது , வாழ்த்துகள் . தற்பொழுது எனக்கு திருமணம் செய்யும் யோகம் உண்டா ? எதிர் வரும் கேது திசையில் கெடுதல் தான் நடக்கும் என இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் சொல்கின்றனர் குறிப்பாக " கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே " என்று எனது வயிற்றில் ஒரு ஜோதிடர் புளியை கரைத்து விட்டிருக்கிறார் , இதனால் எனது மன நிம்மதியே போய்விட்டது கேது திசை எப்படி இருக்குமோ என்ற கவலையிலேயே நாட்கள் செல்கின்றன , ஒருவருக்கு கேது திசை நடந்தால் திருமணம் நடக்காது , திருமண தடை ஏற்ப்படும் என்றும் குழப்புகின்றனர் , மேலும் திருமணம் ஆகியிருந்தால் விவாகரத்து , பிரிவு ஏற்ப்படும் என்று பயமுறுத்துகின்றனர் , தயவு செய்து சரியான ஜோதிட பலன்களை சொல்லுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .

பதில் :

அன்பு நண்பருக்கு வணக்கம் தங்களது ஜாதக அமைப்பிற்கான துல்லியமான பலன்களை தெளிவாக தங்களது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்துள்ளோம் , படித்து தெளிவு பெறுங்கள் , மேலும் " கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே " " ராகு திசை தீமை செய்யும் " " சனி போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை " ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது , பூராடம் நூலாடாது , மூலம் மாமனாருக்கு ஆகாது , போன்ற பழமொழிகள் ஜோதிடர்கள் தனது வாய்ஜாலத்தை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக சொல்லபட்ட ஒரு ரைமிங் வார்த்தைகள் , இதையெல்லாம் நம்பிக்கொண்டு , தங்களது வாழ்க்கையை நீங்கள் கெடுத்து கொள்ள வேண்டாம் .

" கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே " என்பது முற்றிலும் ஜோதிட அறிவு அற்ற ஒரு அரை குறை ஜோதிடர் சொல்லும் வாய் ஜாலம் , மேலும் நடக்கும் கேது திசை எந்த பாவகத்தின் பலனை செய்கிறது , அந்த பாவகம் நல்ல நிலையில் இருக்கிறதா , பாதிக்க பட்டு இருக்கிறதா என்று ஜோதிட கணிதம் பற்றி தெரியாத ஒரு போலி ஜோதிடர் சொல்லும் ஒரு ரைமிங் வார்த்தை , இதையெல்லாம் ரூம் போட்டு யோசித்து சொல்வார்களோ ? இந்த மாதிரி சொல்லும் நபர்களுக்கெல்லாம் சினிமா துறையில் வசனகர்த்த வேலை காலியிருப்பதை தெரிவியுங்கள் அன்பரே .

வாயில் என்ன வருகிறதோ அதை வாக்கு என்று சொல்லிக்கொண்டு திரியும் சில போலி ஜோதிடர்களின் நிலை கடைசியில் , ஒருவேளை உணவிற்கே அல்லாட வேண்டிய சூழல் ஏற்ப்படத்தை கண்ணார கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன் , கிரகங்களின் நிலைகளை துல்லியமாக கணிதம் செய்ய தெரியாமல் , நடக்கும் திசை தரும் பலன்களை உண்மைக்கு மாறாக சொல்லும் போலி ஜோதிடர்களின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியமும் , பாக்கிய ஸ்தானமும் கடுமையாக பாதிக்க படும் என்பதே உண்மை , இதனால் பலன் கேட்க வந்தவரின் கர்ம வினை பதிவினையும் அந்த போலி ஜோதிடனே அனுபவிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

மேலும் தங்களது ஜாதக அமைப்பில் நடக்க இருக்கும் கேது திசை 7 ம் வீடு 7 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலன்களை வாரி வழங்க காத்திருக்கிறது என்பதே உண்மை , தங்களது திருமணமே கேது திசை கேது புத்தியில்தான் சிறப்பாக அமையும் மேலும் லக்கினமும் , களத்திர பாவகமும் சர ராசியாக இருப்பதால் தங்களுக்கு வரும் வாழ்க்கை துணையின் வழியில் தாங்கள் சகல யோகமும் நிச்சயம் இந்த கேது திசையில் பெறுவீர்கள் என்பது உறுதி , எனவே இந்த வாய் ஜால மன்னர்களின் வீண் வார்த்தைகளை நம்பி தேவை இல்லாமல் மனதை குழப்பி கொண்டு இருக்காமல் அடுத்தது என்ன என்பதை பற்றி யோசிக்க ஆரம்பியுங்கள் நண்பரே !

ஒருவருடைய ஜாதக அமைப்பில் நடக்கும் திசை எதுவென்றாலும் , அந்த திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாத பொழுது , ஒரு ஜோதிடனுக்கு இந்த நிலை ஏற்ப்படுகிறது , அதாவது நல்ல கிரகங்கள் எல்லாம் நன்மையை செய்யும் , தீய கிரகங்கள் எல்லாம் தீமையை செய்யும் என்று குத்து மதிப்பாக ஜோதிட பலனை சொல்லி கொண்டு திரியும் நிலை ஏற்ப்படும் , சுக்கிரன் திசை எத்தனை பேருடைய வாழ்க்கையை பதம் பார்த்திருக்கிறது , ராகு கேது வின் திசை எத்தனை பேருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை வாரி வழங்கி இருக்கிறது , குரு திசை எத்தனை பேருடைய வாழ்க்கையில் கபடி விளையாடி இருக்கிறது , சனி திசை எத்தனை பேருடைய வாழ்க்கையில் சகல சம்பந்துக்களையும் தந்து இருக்கிறது என்பதை ஜோதிட கணிதம் மூலம் கண்டறிந்தவன் என்ற முறையில் சொல்கிறோம் , ஜாதக உண்மை பலன்களை தெளிவாக சொல்லும் ஒரு சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள் .

இந்த மாதிரி பழமொழி சொல்லிக்கொண்டு திரியும் போலி ஜோதிடரையும் , ஆக்டிவேசன் டிஆக்டிவேசன் செய்யும் நபர்களிடமும் தலையை கொடுத்து விட்டு , மண்டை காய வேண்டாம் என்று சொல்வதை தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை .

1 comment:

  1. நடைபெறும் திசை : குரு திசை
    கன்னி ராசி : சனி குரு சந்திரன்
    கடக லக்கினம்

    பிறந்த திகதி : 1981-07-08 6.42காலை

    Sri Lanka

    குரு திசை நல்லதா கெட்டதா?

    ReplyDelete