jaga flash news

Sunday 21 July 2013

ஹயக்ரீவர்

குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவான ஹயக்ரீவரை, விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வி தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.

அவதாரக் காரணம்

மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். [1]

No comments:

Post a Comment