jaga flash news

Wednesday, 24 July 2013

சோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்துக்ள்ளலாம்.

சோதிடம் என்றால என்ன?

சோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே சோதிடம்.

இனி சோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்துக்ள்ளலாம்.


1.1 வாய்பாடுகள்

1 நாள் = 60 நாழிகை = 24 மணி

1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடம்

1 விநாழிகை = 60 தற்பரை = 24 வினாடி


ராசி மண்டலம் = 360 பாகைகள் = 12 ராசிகள்
1 ராசி = 30 பாகைகள்= 2 ¼ நட்சத்திரங்கள்

1 நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்

1 பாதம் = 3 பாகை 20 கலை


1 பாகை = 60 கலை

1 கலை = 60 விகலை


1.2
கிரகங்கள் 9

1. சூரியன்

2 சந்திரன்

3. செவ்வாய்

4. புதன்

5. குரு

6. சுக்கிரன்

7. சனி

8. ராகு

9. கேது



1.3
ராசிகள் 12

1. மேஷம் 

2. ரிஷபம்

3. மிதுனம்

4. கடகம்

5. சிம்மம்

6. கன்னி

7. துலாம்

8. விருச்சிகம்

9. தனுசு

10. மகரம்

11. கும்பம்

12. மீனம்


1.4
நட்சத்திரங்கள் 27

1 அசுவனி

2. பரணி

3. கார்த்திகை

4. ரோகினி 

5. மிருகசீரிஷம்

6. திருவாதிரை

7. புனர்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்த்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்திரட்டாதி

27. ரேவதி.



1.5
ராசிகளும் அவற்றின் அதிபதிகளும்




மேஷத்தின் அதிபதி செவ்வாய்
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்
மிதுனத்தின் அதிபதி புதன்
கடகத்தின் அதிபதி சந்திரன்
சிம்மத்தின் அதிபதி சூரியன்
கன்னியின் அதிபதி புதன்
துலாத்தின் அதிபதி சுக்கிரன்
விருசிகத்தின் அதிபதி செவ்வாய்
தனுசுவின் அதிபதி குரு
மகரம் மற்றும் கும்பத்தின் அதிபதி சனி
மீனத்தின் அதிபதி குரு.


1.6.
கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும்



1.7.
நட்சத்திரத்தின் உட்பிரிவு

ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வரு பாகத்தையும்பாதம்என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப்பிரிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது அசுவனியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் அசுவனி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் அசுவனி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் அசுவனி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் அசுவனி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது பரணியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் பரணி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் பரணி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் பரணி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் பரணி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதே போல மற்ற நட்சத்திரங்களுக்கும் தெரிந்து கொள்க.

1.8
ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும்

ஒரு ராசிக்கு ¼ நட்சத்திரங்கள் என்று முன்னமே தலைப்பு 1.1 – ல் பார்த்ததை நினைவு கொள்ளவும். அதாவது ஒரு ராசிக்கு (2 x 4) + 1 = 9 பாதங்கள்





மேஷ ராசியில் அசுவனியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும், கார்திகையின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

ரிஷப ராசியில் கார்த்திகையின் மீதம் 3 பாதங்களும், ரோகினியின் 4 பாதங்களும், மிருகசீரிடத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

மிதுன ராசியில் மிருகசீரிடத்தின் கடைசி 2 பாதங்களும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசதின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

கடக ராசியில் புனபூசத்தின் கடைசி 1 பாதமும், பூசத்தின் 4 பாதங்களும், ஆயில்யத்தின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

சிம்ம ராசியில் மகத்தின் 4 பாதங்களும், பூரத்தின் 4 பாதங்களும், உத்திரத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

கன்னி ராசியில் உத்திரத்தின் மீதம் 3 பாதங்களும், அஸ்தத்தின் 4 பாதங்களும், சித்திரையின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

துலா ராசியில் சித்திரையின் கடைசி 2 பாதங்களும், சுவாதியின் 4 பாதங்களும், விசாகத்தின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

விருச்சிக ராசியில் விசாகத்தின் கடைசி 3 பாதங்களும், அனுஷத்தின் 4 பாதங்களும், கேட்டையின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

தனுசு ராசியில் மூலத்தின் 4 பாதங்களும், பூராடத்தின் 4 பாதங்களும், உத்திராடத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

மகர ராசியில் உத்திராடத்தின் கடைசி 3 பாதங்களும், திருவோனத்தின் 4 பாதங்களும், அவிட்டத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

கும்ப ராசியில் அவிட்டத்தின் கடைசி 2 பாதங்களும், சதயத்தின் 4 பாதங்களும், பூரட்டாதியின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

மீன ராசியில் பூரட்டாதியின் கடைசி 3 பாதங்களும், உத்திரட்டாதியின் 4 பாதங்களும், ரேவதியின் 4 பாதங்களும்ம் அடங்கும். (1 + 4 + 4 = 9)


1.9 ராசிகளின் வகைகள்

1.9.1. சரம், ஸ்திரம், உபயம் என்ற அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், கடகம், துலாம், மகரம் இந்நான்கும் சர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு மீனம் இந்நான்கும் உபய ராசிகள்.


1.9.2 & 3. ஒற்றை (ஆண்) ராசி, இரட்டை (பெண்) ராசி என்ற அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...


மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும் ஆண் ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளும் பெண் ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.

1.9.4 & 5 மேலும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற அடிப்படையிலும், கிழக்கு, மேற்கு வடக்கு தெற்கு என்ற அடிப்படையிலும் நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்


மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள், நெருப்பு ராசிகள்.
ரிஷபம், கன்னி, மகரம், இம்மூன்றும் தெற்கு ராசிகள், நிலம் ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள், காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்றும் வடக்கு ராசிகள், நீர் ராசிகள்




1.10.
ராசிகளில் கிரக பலம்.

1.10.1. உச்சம், நீச்சம்

 

சூரியன் மேஷத்தில் உச்சம், துலாத்தில் நீச்சம்
சந்திரன் ரிஷபத்தில் உச்சம், விருச்சிகத்தில் நீச்சம்
செவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்சம்
புதன் கண்ணியில் உச்சம், மீனத்தில் நீச்சம்
குரு கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம்
சுக்கிரன் மீனத்தில் உச்சம், கண்ணியில் நீச்சம்
சனி துலாதில் உச்சம், மேஷத்தில் நீச்சம்


 

 1.10.2. ராசிகளில் பகை பெரும் கிரகங்கள்



மேஷத்தில் சந்திரன் பகை
ரிஷபத்தில் சூரியன் பகை
மிதுனத்தில் சூரியன், சந்திரன் பகை
கடகத்தில் சூரியன், புதன், சனி பகை
சிம்மத்தில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி பகை
கண்ணியில் சூரியன் பகை
துலாத்தில் சந்திரன், செவ்வாய் பகை
விருச்சிகத்தில் சூரியன், குரு, சுக்கிரன், சனி பகை
தனுசுவில் இல்லை
மகரத்தில் சூரியன், சந்திரன் பகை
கும்பத்தில் சூரியன், சந்திரன் பகை
மீனத்தில் இல்லை


1.11 திதி
ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம் 
 ஆகும் திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள  
பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள  
பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.



1.12 ராசிகளின் வகைகள்
1.12.1 வறண்ட ராசிகள்
மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வறண்ட ராசிகள்.

1.12.2 முரட்டு ராசிகள்
மேஷம்,விருச்சிகம் ஆகிய ராசிகள் முரட்டு ராசிகள் ஆகும்.

1.12.3 ஊமை ராசிகள்
கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும்.

1.12.4 நான்கு கால் ராசிகள்
மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும்.

1.12.5 இரட்டை ராசிகள்
மிதுனம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும்.



1.13  லக்னம்  
ஒரு ஜாதகத்தில் இடம் பெறும் ராசிக் கட்டத்தில் '' என்றோ, அல்லது 'லக்' என்றோ, அல்லது 'லக்னம்' என்றோ குறிப்பிட்டிருக்கும் ராசியே முதல் வீடாகும். இங்கே கொடுத்திருக்கும் ராசிக் கட்டத்தைப் பாருங்கள். இங்கே 'லக்னம்' என்று குறிப்பிட்டிருக்கும் ராசி மேஷ ராசி. எனவே இதுவே முதல் வீடு. இதிலிருந்து வரிசைக் கிரமமாக எண்ணினோம் என்றால் ரிஷபம் 2வது வீடு. மிதுனம் 3வது வீடு. கடகம் 4வது வீடு. சிம்மம் 5வது வீடு. கன்னி 6வது வீடு. துலாம் 7வது வீடு. விருச்சிகம் 8வது வீடு. தனுசு 9வது வீடு. மகரம் 10வது வீடு. கும்பம் 11வது வீடு. மீனம் 12வது வீடு


மீனம்  12
மேஷம்   1  (லக்னம்)
ரிஷபம்   2
மிதுனம்   3
கும்பம்  11

கடகம் 
 4
மகரம்  10
சிம்மம்   
5
தனுசு    9
விருச்சிகம்   8
துலாம்   7
கன்னி  
6





1.14 கேந்திர, திரி கோண, மறைவு வீடுகள்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.
அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.
லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம். (லக்ஷ்மி ஸ்தானம்)
- 1 , 4 , 7 ,10 - கேந்திர வீடுகள் என்பர். ( விஷ்ணு ஸ்தானம் )
- 3, 6 , 8 , 12 - மறைவு வீடுகள் என்று கூறுவர். அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..
- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.

1
ஆம் வீடு - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது  பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.
2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.
3 ஆம் வீடு - சுமார்.
6 ,8 ,12 - ஆம் வீடுகள் - நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா நல்லது பண்ண முடியாது.







1.15
ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்.... மறைவு வீடுகளில் இருந்தால்... பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... , அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.

1.16 கிரகங்களின் பார்வைகள் :

எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு - 3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.


1.17 காரகன்:(authority)
தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
மனம், தாய்க்குக் காரகன் சந்திரன் 
ஆயுள், தொழில் காரகன் சனி
களத்திர காரகன் சுக்கிரன்
தனம், புத்திர காரகன் குரு
கல்வி, புத்தி காரகன் புதன்
நிலம், ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்


1.18  சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?
ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும். அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.
 
1.19 . லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?
பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்,தசாபுத்தி என்பது ரோடு,கோள்சாரம் என்பது டிரைவர்.லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து ஜாதகனுடைய வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன் பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள் கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.
 
1.20. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?
ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.
 
1.21. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?
ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்
 
1.22. தசா புத்திகள்
ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.
 
தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?
சூரிய தசை - 6 ஆண்டுகள் சந்திர தசை - 10 ஆண்டுகள் செவ்வாய் தசை - 7 ஆண்டுகள் ராகு தசை - 18 ஆண்டுகள் குரு தசை - 16 ஆண்டுகள் சனி தசை - 19 ஆண்டுகள் புதன் தசை - 17 ஆண்டுகள் கேது தசை - 7 ஆண்டுகள் சுக்கிர தசை - 20 ஆண்டுகள்
மொத்தம் 120 ஆண்டுகள்

1.23 அஸ்தமனம்

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும் கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம் 10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

1.24 அஷ்டகவர்கம்
அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின் தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8 ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337
(
யாராக இருந்தாலும் 337 மட்டுமே)
இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை தீமைகளை சுலபமாக அறியலாம்.
இதற்கு பதிவின் சைடுபாரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளைப் பயன்படுத்தவும்.

1.25 .நவாம்சம்
Navamsam is the magnified version of a Rasi Chart
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக்
காட்டுவதுதான் நவாம்சம்.(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)



1.26 சுற்றும் காலம்
ஜோதிடப்பலன்கள்  அறிய  முதலில் ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில்எவ்வளவு காலம்  நிலைத்திருக்கும் என அறிந்துக்கொளவது  அவசியம் முதலாவதாக சந்திரன் ஒன்றுதான் 12 ராசிகளை முப்பது நாட்களில் சுற்றி வருகிறான் அதாவது ஒவ்வொரு ராசியிலும் அவன் 2 ½ நாடகள் தான்  தங்குவான்
அடுத்தபடியாக நாம் சூரியனைச்சொல்லலாம்   .சூரியன், சுக்கிரன், புதன் 12 ராசிகளை ஒரு ஆண்டில் சுற்றிவருகிறான்  
செவ்வாய் கிரகம் 1 ½ ஆண்டுகளில்  12 ராசிகளைக்  கடக்கின்றன .இவை  ஒவ்வொரு ராசியிலும் சுமாராக 45 நாட்கள் தங்கி இருக்கும் ஆனால் சில சம்யம் செவ்வாய்  ஒரு ராசியில் அதிக மாதங்கள் தங்க வாய்ப்புண்டு. சிலசமயம்  ஆறு மாதங்கள் கூட அந்த இடத்திலேயே இருக்கும்
பின் வருவது குரு ,இந்தக்கிரகம்  12  ராசிகளை  12 ஆண்டுகளில் கடக்கிறது ஒரு ராசியில் ஒரு வருடம்  தங்கி இருக்கும் சில சம்யம் வக்ரமாகி  ஒரு சில மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு
மந்தன் என்ற பெயரிலேயே தெரிகிறது சனி மிகவும் மெதுவாக 12 ராசிகளைக் கட்க்கும் என்று ,,,சனி 12 ரசிகளைக்கடக்க முப்பது ஆண்டுகள் பிடிக்கின்றன  இவர் ஒரு ராசியில் 2 1/2 வருடங்கள் தங்குகிறார்
ராகு கேது  18 ஆண்டுகளில்  12 ராசிகளைக் கடக்கின்றன  இவை ஒரு ராசியில் 1 1/2 வருடம்தங்கி இருக்கும் .எல்லா கிரகங்களும் முறைப்படி ராசிகளை வலம் வர இந்த ராகு கேது மட்டும்  ராசிகளை இடது பக்கமாக எதிர்திசையில் செல்கின்றன மேலும் இரண்டும் ஒரே  நேரத்தில் ஒரு ராசியிலிருந்து  மற்றொரு ராசிக்கு செல்கின்றன  மற்ற எல்லா கிரகங்களும் தனித்தனியே நகர ராகு கேது மட்டும் சேர்ந்தே நகருகின்றன  ராகு கேது பெயர்ச்சி என்று இரண்டையும் சேர்த்தே தான் சொல்லுவார்கள் ராகு  கேது ஒருவர்க்கொருவர்  பார்த்த வண்ணம் ஒருவர்க்கொருவர் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பார்கள் உம்...  மேஷ்த்தில் ராகு இருந்தால் அதற்கு 7ம் இடமான துலாத்தில் கேது இருக்கும்  ரிஷ்பத்தில் ராகு இருந்தால் விருச்ச்சிகத்தில்  கேது இருக்கும்


1.27 வக்ரகதி  ..
ராகு கேது  எப்போதுமே இடமிலிருந்து வல்மாக் எல்லா ராசிகளையும் வளைய வரும் anticlockwise .எல்லா கிரகங்களும்  மேஷ்த்திலிருந்து ஆரம்பித்து  ரிஷபம்   மிதுனம் என்று சுற்ற ராகு  கேது  கடகத்திலிருந்து ஆரம்பித்து மிதுனம் ரிஷபம் மேஷம் என்று பின்னுக்கு வந்து சுற்றும் இதே போல்  தான்  நட்சத்திர நிலை.யும்  .எல்லா கிரகங்களும் அசுவனி பரணி கிருத்திகை  ரோஹிணி என்று சுற்றி வர  ராகு கேது  ரோகிணி கிருத்திகை பரணி  அஸ்வினி என்று சஞ்சரிக்கும் ஆனால் சில சந்தர்ப்பங்க்ளில்  செவ்வாய்  புதன்  குரு  சுக்கிரன் சனி என்ற ஐந்து கிரகங்க்ளும்  திடீரென்று பின்னுக்கு வருவதுண்டு இதைத் தான் வக்கிரகதி என்கிறார்கள்  இந்த வக்கிரகதி  தன்மை சில சமயம் வரைதான் நீடிக்கும் பின்  வழக்கம் போல் சுற்ற ஆரம்பித்துவிடும் உதாரணமாக குரு தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குப்போனபின் சில சம்யங்க்ளுக்கு திரும்பவும் தனுர் ராசிக்கே வந்துவிட்டு பின்  திரும்ப மகர  ராசிக்கு செல்லும் ,இதையே குரு வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார் என்பார்கள் சூரிய சந்திரனுக்கு இதுபோல்  வக்ரகதி  கிடையாது

1.28 கிரஹங்கள் பலன் தரும் காலங்கள்

சூரியன், செவ்வாய், கிரஹங்கள் ஆரம்ப காலத்திலேயே பலன்களைக் கொடுப்பார்கள்.
 

சந்திரன், புதன் கிரஹங்கள் அவர்கள் காலம் முழுவதும் பலன்களைக் கொடுப்பார்கள்.
 

குருவும், சுக்ரனும் அவர்கள் காலத்தின் மத்தியில் பலன்களைக் கொடுப்பார்கள்.
 

சனி, ராகு, கேது பிற்காலத்திலேயே பலனைக் கொடுப்பார்கள். 


1.29 கிரஹங்கள் அடுத்த ராசிகளின் பார்வை 
ஒரு ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போது, அதை விட்டுப் போவதற்குமுன்பே அடுத்த ராசிகளைப் பார்ப்பார்கள். கிரஹங்கள், தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுமுன், அந்தந்த அடுத்த ராசியின் குண விசேஷங்களை முன்னதாகவே அடையப்பெற்று, அதற்குத் தகுந்தவாறு அடுத்த ராசியின் பலாபலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அதாவது,
சூரியன் - 5 நாள்
புதன், சுக்ரன் - 7 நாள்
செவ்வாய் - 8 நாள்
குரு - 2 மாதம்
ராகு, கேது - 3 மாதம்
சனி - 6 மாதம்  



1.30 கிரஹங்கள் வலிமை 

உச்சம் - 100% வலிமை
மூலத்திரிகோணம் - 90% வலிமை
சொந்த வீடு - 80% வலிமை
நட்பு வீடுகள் - 60% வலிமை
சம வீடுகள் - 50% வலிமை
பகை வீடுகள் - 40% வலிமை
நீச வீடுகள் - 10% வலிமை
இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்

No comments:

Post a Comment