jaga flash news

Thursday 4 July 2013

சித்தரகசியப் பாடல் சந்தான பாக்கியம்

மகாலட்சுமிக்கு உகந்த நாளான வரலட்சுமி விரத நாளில் சந்தான லட்சுமியை (கையில் குழந்தையைத் தாங்கி இருப்பவள்) விசேசமாகப் படத்துடன் வணங்குங்கள். வசதி படைத்தவர்கள் சந்தான லட்சுமி மூல மந்திரத்தால் அக்னி வழிபாடும் செய்யலாம். 108 தடவை ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் சந்தான லட்சுமியை நம என்று ஜெபித்து விட்டு, வணங்கவும். வெறும் சாதத்தில் நெய் பருப்பிட்டு படைத்தபின் காக்கைக்கு ஒரு உருண்டை சாதம் வைத்து காக்கையை (முன்னோராக நினைத்து) பித்ருக்களாக எண்ணி வணங்கவும். 

அடுத்ததாக மாதவிலக்கு வந்து குளித்து விட்ட பின் அடுத்த நாள் காலை குளித்து விட்டு ஒரு மாங்கொத்தை எடுத்துப் பெண் தலையை மும்முறை சுற்றிவிட்டு வீட்டு நடுவாசலில் புதைத்து விடவும். அன்று முதல் 3 நாட்களுக்குத் தலை குளித்தபிறகு, அகில் கட்டையை பொடி செய்து பால்சாம்பிராணி தூளுடள் கலந்து, தணலில் சிறிது சிறிதாகப் போட்டு உடலைத் துணியால் மூடிக்கொண்டு ஜலதோஷத்திற்கு வேவு பிடிப்பது போல உடலில் புகையை வாங்கிக் கொள்ளவும். 

இதனால் உடலில் உள்ள துர்நீர், துர்சக்திகள் வெளிவந்து மலட்டுத் தன்மை நீங்கிக் கர்ப்பம் தரித்து அழகான குழந்தை பிறக்கும். இச்செய்தி புலிப்பாணி முனிவரின் சித்தரகசியப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment