jaga flash news

Thursday 25 December 2014

லக்னமும் ஏழாமிடமும்

லகனமும் ஏழாமிடமும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடலைப் பழைய திரைப்படத்தில் கேட்டிருக்கலாம். இது மனைவிக்கு மட்டுமல்ல கணவனுக்கும் பொருந்தும்.
கணவனும் மனைவியும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் அன்றே அழகாகக் கூறியுள்ளார்.
கணவனைப் பற்றிக் கூற வரும் அவர், இல்லறத்தான் என்பவன் தனது பெற்றோர், மனைவி, மக்கள் ஆகியோருக்கும் அவர்களின் நல்
வாழ்க்கைக்கும் என்றும் துணையாக இருப்பவனாக இருக்க
வேண்டும் என்கிறார்.
" இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை"
மனைவியானவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் நல்லதோர் இலக்கணம் கூறுகிறார் அவர்.
கற்பு நெறி தவறாமல் தன்னைக் காத்துக்கொண்டு தன்னைக் கரம் பிடித்து மனைவியாக ஏற்றுக் கொண்ட கணவனைக் கண் போல் காத்து மதித்து நடக்கும் குற்றமற்றவளே பெண் என்கிறார்.
"தற்காத்துத் தற்கொண்டாள் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"
கற்பு என்பதற்கு இக்காலத்தில் பலரும் பல விதமான கருத்து, விளக்கங்களை அளிக்கின்றனர். ஆனால் அன்றே அழகான விளக்கத்தை அளித்துள்ளார் தொல்காப்பியர்.
"மறை வெளிப்படுதலும் தமரில் பெறுதலும்
இவை முதலாகிய இயல்நெடி பிழையாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே"
தொல்காப்பியத்தில் கற்பு
எனக் கூறப்படுவதெல்லாம்
இல்லறத்தையே குறிக்கும் என்பார் சுப்பு ரெட்டியார்.
இல்லறம் என்பது மணம் புரிந்த ஆணும் பெண்ணும் கூடியும் ஊடியும் இன்புற்று பொருள், நன் மக்கட் செல்வம் பெற்று சிறக்கும் இன்ப நிலை, பொருள் ஈட்டி அறம் செய்து உயரும் நிலை, பற்றுகளிலிருந்து இருவரும் விடுபட்டு உயிர்களுக்குத் தொண்டு செய்யும் அறநிலை ஆகிய மூன்று நிலைகளிலும் சிறக்கும் மாண்புடையது.
சங்க இலக்கியங்களில் இல்லறம் எனும் சொல்லாட்சி காணப்படவில்லை. மனை போன்ற சொற்களே காணப்படுகின்றன. வள்ளுவர், இல்வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறார்.அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் மனையறம் எனக் குறிப்பிடுகின்றன.
பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலம்தான் இல்லறம் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்துகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க இல்லறத்தில் சேர்ந்து ஈடுபடக்கூடிய இருவரின் தன்மை குறித்து ஆதி காலத்தில் எழுந்த வருஷாதி சோதிட நூல் கூறுவதைக் காணலாம்.
ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் லக்னத்துக்கு ஏழாமிடம் களத்திர ஸ்தானத்தைக் குறிக்கும். லக்னம் என்பது ஜாதகரின் பலம், குணத்தைக் கூறும். ஏழாம் இடம் அவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணையைப் பற்றி எடுத்துரைக்கும்.
இந்த இரு ஸ்தானங்களும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உடையவை ஆகும்.
நீள் வட்ட வடிவில் பன்னிரெண்டு ராசிகளும் அமைந்துள்ளதால் லக்னமும் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடமும் 180 டிகிரி
தூரத்தில் ஒரே நேர் கோட்டில் உள்ளன. இவ்விரு ஸ்தானங்களும் இருக்கும் நிலையை ஒரு வான வில்லுக்கு ஒப்பிடலாம். இது எவ்வாறு உண்டாகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.
இருப்பினும் அறியாத சிலருக்காக
மீண்டும் காணலாம்.
கதிரவனின் ஒளியானது முப்பட்டகம் போன்று மழைத் துளியின் உட்சென்று திரும்புகின்றபோது வானவில் தோன்றுகிறது. இது காலை அல்லது மாலையில்தான் தோன்றும்.
வேறு விதமாகச் சொல்வதென்றால காலையில் கிழக்கில் உதய லக்னத்தில் ஆதவன் இருக்கும்போது அதற்கு ஏழாமிடமான மேற்குத் திக்கில் அத்தமன லக்னத்தில் வானவில் உண்டாகும்.
இதேபோல் மேற்குத் திக்கில் உள்ள அத்தமன லக்னத்தில் ஆதவன் இருக்கும்போது அதற்கு நேரெதிர் ஸ்தானமான உதய லக்னத்தில் வானவில் உண்டாகும்.
சற்று விளக்கமாகக் கூறுவதென்றால் ஆதவனிடம் இருந்து வருகின்ற பிரகாசமான ஒளியைப் பெறுவதினாலேயே அதற்கு ஏழாம் இடம் பல வண்ணங்கள் கொண்ட வான வில்லாகத் திகழ்கிறது.
லக்னம் என்பது ஒருவரைக் குறித்தும் ஏழாம் இடம் என்பது அவரது வாழ்க்கைத் துணை குறித்தும் கூறும் இடமல்லவா. பாசம் பரிவு, இரக்கம் இணக்கம் ஆகியவை அந்த ஒருவரிடமிருந்து கிடைத்தால்தான் அவரது வாழ்க்கைத் துணை இன்பமாக இருக்க முடியும்.
அது போல அவரது வாழ்க்கைத் துணையிடமிருந்து இது அவருக்கு கிடைத்தால்தான் அவரும் மகிழ்ச்சியைப் பெற முடியும்
இந்த வான வில்லில் உள்ள ஏழு நிறங்களும் நிழல் கிரகங்களான ராகு, கேது இரண்டும் நீங்கலாக மற்றை ஏழு கிரகங்களைக் குறிக்கின்றன.
இந்த பிரபஞ்சத்தில் பரவியிருக்கும் ஏழு விதமான சக்திகளை, சலனங்களை இந்த ஏழு கிரகங்களும் குறிக்கின்றன.
களத்திர ஸ்தானம் எனக் கூறப்படும் ஏழாம் இடத்தில் அல்லது லக்னத்தில் பாபக் கிரகங்களான மங்களன், மந்தன், ராகு, கேது இல்லாமல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை இன்பமாக அமையும்.

No comments:

Post a Comment