ஹேர் டையில் உள்ள வேதிப்பொருட்கள் – பக்க விளைவுகள்
செயற்கைச் சாயங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கியமாக, அம்மோனியா, சோடியம் பைகார்பனேட், லெட் அசிட்டேட், ஹைட்ரஜன் பெராக்ஸைடு இவற்றுடன், ‘டைஅமினோட்டோலீன்’ மற்றும் ‘டைஅமினோபென்ஸின்’ என்ற இரண்டு ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதில் இருக்கும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ‘கார்சினோஜென்’ என்ற பொருளால் பாதிப்பு அதிகம். தொடர்ந்து ரசாயனம் கலந்த ஹேர்டையைப் பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம். சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய், ஹைப்பர் சென்சிட்விட்டி போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

இயற்கை ஹேர் டை
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
இளநரையைத் தவிர்க்க…
சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியம். எல்லா வகையான நட்ஸ் வகைகளையும், இரவே ஊறவைத்து, மறுநாள் சாப்பிடவேண்டும். அவற்றில் வைட்டமின் இ இருப்பதால், சருமத்துக்கும் முடிக்கும் மிகவும் நல்லது. தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும். முளைக்கட்டிய பயறு, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்கள், காய்கறிகள், பழங்கள் அதிகமாகச் சாப்பிடவேண்டும்.
ஹெட் மசாஜ்
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை இளஞ்சூடாகக் காய்ச்சி, இரு கைவிரல்களாலும் எண்ணெயைத் தொட்டு, முடியின் வேர்க்கால்களில் படுவது போலச் சிறுசிறு வட்டங்களாகத் தேய்க்கவும். விரல்களால் தலையின் எல்லாப் பகுதிகளையும் லேசாக அழுத்திவிடவும். இதனால், தலையின் எல்லாப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். முடி நன்றாக வளர்வதுடன் நரைப்பதும் தள்ளிப் போகும்.

சோற்றுக் கற்றாழை
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தனியே எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும். அல்லது, கற்றாழை ஜெல்லை தலையில் தடவி, சிறிது நேரம் ஊறியதும் சீயக்காய்த்தூள் போட்டு அலசவும்.

செய்யவேண்டியவை
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment