jaga flash news

Saturday 10 December 2016

மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?

மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?
🌿 கோயில்களில் திருவிழா நடைபெறும் காலங்களில் அதிகளவில் மக்கள் ஒன்று கூடுவர். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மாவிலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.
🌿 விழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.
🌿 விழாக்களின் போதும் சுபநிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். அவ்வாறு ஒன்று கூடுவதனால் காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சு+ழல் பாதிப்படைகிறது.
🌿 காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன. நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டீரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.
🌿 மாவிலைகள் புரோஹிஸ்பிடின் என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் புரோஹிஸ்பிடின் வாயு அழிக்கிறது. மாவிலைத் தோரணம் சுற்றுச்சு+ழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.
🌿 மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்களத்தையும் குறிப்பதாகும். கோயில்கள் மற்றும் வீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
🌿 மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர்தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்களம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். வீட்டிலுள்ள நுழைவு வாயிலும் மங்களகரமாகத் தோன்றும். அலங்காரத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.....!

No comments:

Post a Comment