jaga flash news

Saturday 10 December 2016

திருமணம் தடைபடுகின்றதா ?தடை நீங்கிட பரிகாரம்:

திருமணம் தடைபடுகின்றதா ?தடை நீங்கிட பரிகாரம்:
திருமணத்தடை , களத்திர தோஷம் நீங்கிட மிக சிறந்த பரிகார ஸ்தலமாக திருப்பைஞ்சீலி விளங்குகிறது .
இங்கு சப்த கன்னியர்கள் கல்வாழையாக தோன்றி உள்ளதாக ஐதீகம்.
ஒரு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுகிழமையில் திருச்சி டோல்கேட்டில் இருந்து நகர பேருந்து மூலமாக திருப்பைஞ்சீலி சென்று அங்குள்ள ஸ்ரீநீலிவனேஸ்வரர் கோவிலில் கல்வாழை பரிகாரம் செய்து விட்டு அங்குள்ள
ஸ்ரீ எமதர்மராஜருக்கு ஜாதகர் பெயரில் அர்ச்சனை செய்து ஜாதகருக்கு விபூதி இடவும்.
(இந்த ஸ்ரீ எமதர்மராஜர் சந்நிதிக்கு ஜாதகர் வரக்கூடாது.)
இங்கு கல்வாழை பரிகாரம் செய்தபின் தரப்படும் தேங்காய் பழங்களை கோவில் பசுவிற்கு தந்து விடவும்.
இந்த கோவிலிருந்து (இறைவனின் பேரருளைத் தவிர) எதையும் வீட்டிற்கு கொண்டு செல்வது கூடாது.
இங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று பத்து தயிர் சாதம் வாங்கி ஜாதகர் கையினால் தானம் தந்த பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்லவேண்டும்.
ஸ்ரீரங்கநாதரை 7 முறை வலம் வந்தபின் கோவிலில் இருக்கும் ஸ்ரீ ராமானுஜர் சந்நிதியில் ஜாதகர் பெயரில் அர்ச்சனை செய்யவேண்டும்.
பின்னர் மாலை 4 மணிக்குமேல் அருகில் உள்ள திருவானைக்காவல்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு ஸ்வாமி
ஸ்ரீஜலகண்டேஸ்வரர் , அம்பாள் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ,
ஸ்ரீசனைஸ்வரர், ஸ்ரீசெவ்வாய் பகவான் ஆகியோருக்கு தனித்தனியாக
அர்ச்சனைகள் செய்து மனமார வேண்டிக்கொண்டு வீடு திரும்பவும்.
இதனை ஒரே நாளில் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால்
விரைவில் திருமணம் நடைபெற இறையருள் துணை புரியும்.

2 comments: