jaga flash news

Sunday, 1 May 2016

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?
1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.
2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
6.உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
7.உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.
8.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
9.மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
Ghee-and-Honey
11.காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.
12.அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
14.தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது

1 comment:

 1. அழகான மருத்துவக் குறிப்பு என்றுகூட சொல்லலாம். அருமை. ஆனால் இதை கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. என் போன்ற 1960 வருடத்திலோ, அதற்கு முன்போ, உள்ள காலத்திலுள்ளவர்களுக்கு மட்டுமே இந்த அருமை தெரியும். நம் பிள்ளைகளுக்கு பெண் பார்த்தாலும், தற்போது இப்படி விபரம் தெரிந்த பெண் கிடைக்க வாய்ப்பில்லை. ஆஸ்பத்திரிக்கு சென்று ஆங்கில மருந்துகள், எவ்வளவு விலை கொடுத்துனாலும் வாங்கி சாப்பிடுவார் கள். அந்த டாகடர் கூறியதை கவனமாக கேட்டு நடப்பார்கள். ஆனால் நாம் கூறுவதை, செவி கொடுக்க மாட்
  டார்கள்.வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கம் கூட காலப்போக்கில் குறைந்து விட்டது.

  ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ,
  உவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, கசப்பு சம அளவு, உணவில் சேர்த்தாலே நோய் அணுகாது. முதலில் நோய்க்கு காரணமே, நம் வீட்டை சுத்தமாக வைக்காததே. நோய், நோய் என்று அடித்துக் கொள்கிறோமே ஏன்?

  அந்த காலத்து சாப்பாடு, வாழைப்பூ, வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், தடியங்காய், கீரைகள், பாகற்காய்,பச்சைமிளகாய்,வெண்டைக்காய்,தக்காளி,சுத்தமான பால், தயிர், நெய் என்று தட்ப வெப்பத்திற்கேற்ப இளநீர் என்று சுத்தமாக கழுவி,சமைத்
  துச் சாப்பிட்டுப் பாருங்கள், நோய் வரவே வராது. முதலாவதாக, நாம் சமைக்க ஆரம்பிக்கும் முன், சுத்தமாக குளித்து, நம் கை கால்களில் அழுக்கு இல்லாமல், சுத்தமான தண்ணீரில், சுத்தமான பாத்திரத்தில், காய்கனிகளை, தண்ணீரில் கழுவி, சமைத்து, சாப்பிடுபவர்களும், சாப்பிடும் முன் கை,கால், முகங்களை அலம்பி, பசித்துப் புசித்தால், என்றும் ஆரோக்கியமே. இன்னும் அதிகமாக எழுதிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, சமைக்க ஆரம்பிக்கும் போதோ, சமைத்த சாப்பாட்டை பரிமாறும்போதோ, ஒரு நிமிடம்,நம் பகவானை நினைத்து பறிமாறுங்கள். அதுவே சுகம். அதுவே நலம்.


  ReplyDelete