மகா பாரதபோர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு-ஊரறியா ஓரரிய தகவல்
காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரன் ஆகியோர் போரில் மடிந்த தனது மகன்க ளையும் உறவினர்களையும் பார்க்க
துடியாய்த் துடிக்கிறார்கள். வியாச மஹரிஷி இத்துடிப்பை அறிந்து ஒரு நாள் எல்லோரையும் கங்கை நதிக்கு வரச்சொல்கிறார். பஞ்ச பாண்டவர்கள், அரச குடும்பத்தினர், மாமுனிவர்கள், ஊர் மக் கள் எல்லோரும் அதிசயத்தைக்காண பெரும்கூட்டம் கூடவே, வியாசர் ஒவ்வொருவர் பெயராகச் சொல்லி அழைக்கிறார். துரோணர், பீஷ்மர் தலைமையில் மிகப்பெரிய போர்வீரர் கூட் டம் (துரியோதனன் மற்றும் அவனை சார்ந்தவர்கள், பாண்டவர்கள் பக்கம் இறந்தவர்கள் உட்பட) பெரும் சப்தத்துடன் கங்கை நதியில் இருந்து எழுந் து வருகின்றனர். ஆயிரக்கணக்கில் யுத்தத்தில் இறந்த வீரர் அனைவரும் நதிககு மேலே காட்சி தருகின்றனர். எல்லோரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டனர். இரவு முழு வதும் குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமாக உரையாடு கின்றனர். பழைய பகைமை எல்லாம் மாயமாய் மறைந் தோடிவிட்டன.
இந்த உரையாடல் முடிவதற்குள், வியாசர் ஒரு அறிவிப்பை வெளியிடுகி றார். யார்யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவ ர்கள் எல்லோரும் இறந்தவர்கள் திரும்பி செல்லும்போது அவர்களுடன் போகலாம் என்று அறிவிக்கிறார். உடனே பல க்ஷத்ரிய குலப்பெண்கள், முன்னர் இறந்த தங்களு டைய கணவர்களோடு சேர்ந்து மேலுலகம் சென்றனர். மாண்டவர்களின் உருவங்கள் கங்கை நதிக்குள் சென்று மறையும்போது உறவினர்களும் அவர்களுடன் சென்றதாக மஹாபாரதம் கூறுகிறது. இது எல்லாம் போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது
No comments:
Post a Comment