jaga flash news

Sunday 19 July 2020

செவ்வாழை...

பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்களில் அதிகளவு சத்துள்ளது செவ்வாழைதான்.


உடம்பை வலுவாக்கும் காயகல்பம்!
மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்படி செவ்வாழையை அளவாகச் சாப்பிடலாம். ஏனென்றால், இதிலிருக்கிற ஊட்டச்சத்துகள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிற தன்மையைக் கொண்டுள்ளன. இது ஆய்வு மூலமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
செவ்வாழை சாப்பிடுவதற்கு உகந்த நேரம்!
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

செவ்வாழையில் இருக்கிற பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

கண் பிரச்னைகளைத் தடுக்கும்!
செவ்வாழையில் நியூட்டின் (Nutein), ஸியான்தினின் (zeaxanthin), பீட்டா கரோட்டின், வைட்டமின் `ஏ’ ஆகிய சத்துக்கள் அதிகம். இவை கண்களின் செல்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சரி செய்யக்கூடியவை. வேலை, படிப்பு எனப் பெரியவர்களில் ஆரம்பித்து குழந்தைகள்வரை இன்றைக்கு கம்ப்யூட்டரையும் செல்போனையும் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்ப்பதால் உடனடியாக வருகிற பிரச்னைகளான கண்கள் சிவந்துபோதல், கண்களில் எரிச்சல், நீர் வடிதல் போன்றவை தடுக்கப்படவும், வயதின் காரணமாகக் கண்களின் உள் அடுக்குகளில் இருக்கிற தசைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தடுக்கப்படவும் காலை ஒன்று, மாலை ஒன்று என நாளொன்றுக்கு இரண்டு செவ்வாழைப் பழங்கள் சாப்பிட வேண்டும். உடல் சூட்டினால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் செவ்வாழைப்பழத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கண்களின் மேலே வைத்தால் அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்.

ஒரு நாளின் முதல் உணவு!
காலையில் முதல் உணவாக ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் கூழாக மென்று சாப்பிட்டால் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளில் 60 சதவிகிதம் கிடைத்துவிடும். அதன்பிறகு நாம் சாப்பிடுகிற உணவு, சத்தில் குறை இருந்தாலும் உடல் சமாளித்துவிடும். காலையில், முதல் உணவாக செவ்வாழையைச் சாப்பிட்டால் அதிலிருக்கிற மொத்த சத்தையும் உடல் கிரகித்துக்கொள்ளும். சூரியன் உதித்த நேரத்தில் இருந்து 7 மணி நேரம் வரை முழு செரிமானம் நடக்கும். அதன் பிறகு செரிமானம் நடைபெறுவது குறைந்துவிடும். அதனால்தான், காலையில் முதல் உணவாக செவ்வாழைப்பழத்தை சாப்பிடச் சொல்கிறேன்.

எலும்பு மஜ்ஜையை பலப்படுத்தும்!
முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.

செவ்வாழைப்பழத்தில் இருக்கிற சத்துகள் எலும்பு மஜ்ஜையை பலப்படுத்தி, புதிய ரத்த அணுக்களை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். எந்தவொரு புதிய கிருமி மனித உடலுக்குள் வந்தாலும் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால் தப்பித்துவிடலாமே...

சித்த மருத்துவர் செல்வ சண்முகம்சித்த மருத்துவர் செல்வ சண்முகம்
நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்!
நரம்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் காலை 6 மணிக்கு ஒரு செவ்வாழைப்பழம் என 48 நாள்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட கைகால் நடுக்கம், கைகால் மரத்துப்போதல் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பலவீனங்கள் சரியாகும். நரம்பினுடைய கடைசிப்பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்பினால் கைகளில் அனல்படுவதுபோல ஓர் உணர்வு ஏற்படும். இந்தப் பிரச்னையை சரிசெய்யக்கூடிய சத்துகளும் செவ்வாழைப்பழத்தில் இருக்கின்றன. .

கறுப்பான தலைமுடி, சுருக்கமில்லாத சருமம், தெளிவான கண் பார்வை என செவ்வாழைப்பழம் சாப்பிடுபவர்களை இளமையாக வைக்கும்.’’

செவ்வாழைப்பழ அப்பம்!
செவ்வாழைப்பழ அப்பம்செவ்வாழைப்பழ அப்பம்
Also read:
`மேங்கோ குல்ஃபி' சச்சின்,`கீற்று மாங்காய்' தீபிகா... பிரபலங்களின் மாம்பழ லவ்!
100 கிராம் வெல்லத்தை இடித்து, அரை கப் தண்ணீரில் போட்டு, அடுப்பில் வையுங்கள். வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, ஒரு செவ்வாழைப்பழம், ஒரு சிட்டிகை ஏலத்தூள், ஒரு சிட்டிகை உப்புத்தூள் போட்டுப் பிசையுங்கள். வாணலியில் நெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு அப்பங்களாகக் கிள்ளிப் போட்டு இருபுறமும் சிவக்க விடுங்கள்.

செவ்வாழை ஓட்ஸ் ஸ்மூத்தி
அனிதா பிரகாஷ்அனிதா பிரகாஷ்
Also read:
பலா பலன்களும் 4 ரெசிப்பிகளும்!
ஒரு கப் ஓட்ஸ், 2 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை இரண்டையும் மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்துவிட்டு, அதனுடன் நன்கு பழுத்த ஒரு செவ்வாழைப்பழம், காய்ச்சிய பால் அரை கப் சேர்த்து இன்னொரு முறை அரையுங்கள். இதை ஒரு கிண்ணத்தில் போட்டு மேலே மெலிதாக நறுக்கிய நட்ஸ் தூவி அப்படியே சா

No comments:

Post a Comment