கோபம் பிடிவாதம் அதிக ஆத்திரம் கொண்டவர்களை அடக்கவும்,சாமியாடுபவர்கள் ,பேய் பிடித்து ஆடுபவர்கள் இவர்களை பலவீனமாக்க ,வேகத்தை குறைக்க வைக்க ஒரு வழி இருக்கிறது
புளி கலந்த நாட்டு சர்க்கரை, ஏலம் ,எலுமிச்சை சாறு கலந்து புது பானையில் வைத்து கொடுக்க கோபம் அடங்கும். பிடிவாதம் நீங்கும் .
கோபம் அதிகம் இருக்கும் நேரம் ஒரு லெமன் ஜூஸ் குடிக்கலாம் ..
புளித்தண்ணீரில் நாட்டுச்சர்க்கரை கலந்து பானகம் எனும் பெயரில் கொடுப்பர் இது குளிர்ச்சியை கொடுத்து மனதை லேசாக்க வல்லவை.
புளிசாதம் ,எலுமிச்சை சாதம் கட்டிக்கிட்டு அக்காலத்தில் கோயிலுக்கு போவாங்க..புளி,எலுமிச்சை காமம்,கோபம்,ஆத்திரத்தை அடக்கிவிடும் ஆற்றல் கொண்டது.
அய்யா.....வெ.சாமி அவர்களே...!சிறு குழந்தையில் நான் பருகி இருக்கிறேன்.புளிக்கரைசலில், என் அம்மா, கருப்புக்கட்டி போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். மேலும்,புளியம்பூவை கருப்புக்கட்டி போட்டு இடித்தும் சாப்பிடலாம். மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
ReplyDelete