jaga flash news

Wednesday 1 July 2020

**#கொரானா Vs #வேப்பமரம்**

**#கொரானா  Vs  #வேப்பமரம்**

வேப்ப மரத்தின் மகிமையை நம் முன்னோர்கள்  நன்கு அறிவர். அதனால்  தான் அவர்கள் எந்த நோய் தொ ற்று தடுக்கவும் வேப்பம் மரத்தின் இலைகளை பயன்படுத்தின்னர் .

வேப்பமரத்தின் இலை ,கொப்பு, பழங்கள்  ஆகியவற்றில்   நூறுக்கும் மேற்பட்ட இரசாயன கலவைகள் (Chemical compounds)  இருக்கின்றன. அந்த இரசாயன கலவைகள் பல விதமான  நோய்களுக்கும்  பயன்படும்  என்று 3000 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

வேப்ப இலைகள் சர்க்கரை நோய் , ரத்த அழுத்தம் , சின்ன அம்மை , பெரிய அம்மை , மலேரியா , டெங்கு , ஹெர்பெஸ் , எய்ட்ஸ்  போன்ற வைரஸ்களை தடுக்க பயன்படும் என்று நிறைய ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

மூலக்கூறு நறுக்குதல் (#Molecular_Docking) என்ற முறையைத் மூலம் வைரஸ்க்கு   எதிரான மருந்துகளை நாம் கண்டுபிடிக்கலாம். எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு அந்த முறையின் மூலம் மருந்துகளை கண்டுபிடித்து உள்ளனர். 

மூலக்கூறு நறுக்குதல் (Molecular Docking) முறையில்  வேப்பம் மரத்தின் இலைகளில் உள்ள 20கும் இரசாயன கலைவைகளுக்கு  நிறைய, கொரோனா  வைரஸ்யை  தடுக்கும் ஆற்றல் உடையது  என்று தெரிய வருகிறது ,அதிலும்  சில  இரசாயன கலவைகள் remdesivir  போன்ற  மருந்துகளை  விட  நன்றாக  தடுப்பு  ஆற்றல் உடையது  என்றது  தெரிய வருகிறது 

 - https://indiarxiv.org/pyqx4/ (My  research paper)

கொரோனா  வைரஸ் நம்  உடலை  தாக்கும்  போது  நமது  உடம்பு  அதை  எதிர்க்க கொரோனா வைரஸ் பாதித்த செல்களை தாக்கும் , அப்பொழுது தெரியாமல் நமது   உடம்பில்  உள்ள  ஆரோக்கியாமன செல்களையும்  தாக்கும் அதனால்  தான் நிறைய உயிரிழப்புகள்  ஏற்படுகின்றன  . இதை  தடுக்க இம்முனோமோடுலதோர்கள் ("#Immunomodulator")  உடம்பில்  செலுத்த  படுக்கின்றன, சில ஆய்வுக் கட்டுரைகள் வேப்ப இலைகள் இம்முனோமோடுலதோர் ஆகவும்  செயல் படும் என்று கூறுகின்றன.

இதனால்  வேப்ப  இலைகளில் உள்ள இரசாயன கலவைகள் கொரோனா  வைரஸ்யை   தடுக்கும்  ஆற்றல்  கூடியவை  என்று  நமக்கு  தெரிய வருகிறது.இதன்  பற்றி  ஆராய்ச்சியாளர்கள் மேலும்  ஆராய்ச்சி  செய்ய  வேண்டும்,  ஏன்  என்றால்  நம்  வேப்ப  இலைகள்   கொரோனா  வைரஸ்யை  தடுக்க கூடும் என்று  இந்த ஆய்வுக் கட்டுரைகள்  நிரூபிக்கின்றன

நோய்  எதிர்ப்பு  சக்தியை  அதிகரிக்க  2-4 வேப்ப  இலைகளை உண்ண  வேண்டும். இது  தின்தோறும் உன்ன வேண்டாம் , 2-3  நாட்களூக்கு ஓரு முறை உண்டால்  போதும். வேப்பம் கொழுந்து கிடைத்தால்  அதையே  உண்ணவும்.

காய்ச்சல் , சளி  இருந்தால்   தினந்தோறும்  2-4 வேப்ப  இலைகளை உண்ணுங்கள் அது போகும் வரை.


No comments:

Post a Comment