jaga flash news

Monday, 3 August 2020

அகங்காரத்தை நீக்கும் வழிகள்…

அகங்காரத்தை நீக்கும் வழிகள்…
சிலருடைய வாழ்க்கை மிகவும் கீழான நிலைக்கு வருவதற்கு காரணமே அகங்காரம் என்று சொல்லப்படும் குணம் ஒன்றுதான்.. இந்த அகங்காரம் எங்கே உற்பத்தி ஆகின்றது என்று சோதனை செய்தோமானால் நான்.. மற்றும் என்னுடையது என்ற இரன்டு வார்த்தைகளே மனதில் வரக்காரணம்..கடவுள் இரன்டு முறை சிரிக்கின்றார் என்று சொல்வார்கள.ஒன்று நான் என்று சொல்லும் பொழுது.. இன்னொன்று என்னுடையது என்று சொல்லும் பொழுது.. இதோ இதெல்லாம் பார்க்கறீங்களே இதெல்லாம் நான் வாங்கி போட்டதுங்க..இந்த நிலம்..தோப்பு எல்லாமே என்னோடதுங்க.. அடுத்த நாள் யமன் பாசக்கயிறை வைத்துக் கொண்டு அவரது உயிரை வாங்க தயாராக இருந்தார் என்ற கதை உண்டு..பிறகு வாங்கிபோட்ட நிலம்..தோப்பு.. எதுவுமே கூட வராது..அவர் செய்த பாவ புண்ணியங்களை தவிர.. சரி அப்ப இதை எப்படித்தான் சொல்றது? மனசுல எனக்கு எந்த ஈகோ இல்லாம தான சொன்னேன்?என்கின்றீர்களா..அதுவும் சரிதான்..இந்த அகங்காரம் என்ற ஈயை (E)எப்படி கோ(GO) சொல்வது.. இறைவன் சிவபெருமான் இதற்காக இரண்டு வழிகளை சொல்கின்றார்.. ஒன்று எப்பொழுது உன்னை நான் என்று சொல்கின்றாயோ..நெற்றியின் மத்தியில் மின்னும் ஒரு நட்சத்திரம் போன்ற ஆன்மா என்று உணர்ந்து சொல்லுங்கள் என்கின்றார்.. என்னுடையது என்று சொல்லும் பொழுது என்னுடைய சிவபெருமானுடயது என்ற வார்த்தைகளை மனதில் சேர்க்க சொல்லுகின்றார்.அதாவது நான் இந்த தேகமல்ல ஒரு ஆன்மா..இவை அனைத்தும் என்னுடைய தந்தை ஜோதிவடிவமான பரமாத்மா இறைவன் சிவபெருமானுடயது.. இந்த கர்ம பூமியில் ஆன்மாவாகிய நான் எடுத்து செல்வது பாவ புண்ணியம் மட்டுமே.. இந்த உலகத்திலிருந்து ஒரு தூசியை கூட எடுத்து செல்ல முடியாத நமக்கு நான்..எனது என்ற கர்வம் எதற்கு? எனவே, இறைவன் நம்மை ஒரு டிரஸ்ட்டி என்று புரிந்து கொள்ள சொல்கின்றார் கோவில் சொத்து அனைத்தும் டிரஸ்ட்டியின் கட்டுபாட்டில் இருக்கும் ஆனால் அனைத்தும் இறைவனுடையது..எப்படி..?இப்படிதான் நமது வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்பது இறைவனுடைய விருப்பம்.. இப்படி இருந்தால் நாம் உலகத்தை விட்டு பிரியும்பொழுது நமக்கு எந்த ஒரு பந்தனமும் வராது..இறைவனுடைய நினைவில் உயிர் பிரியும்..இதனால் அசுத்தமான அகங்காரம் அழிந்துவிடும்..சுத்த அகங்காரம் என்பது நான் இறைவனுடைய வழியில்தான் நான் நடப்பேன்..எந்த ஒரு அசுத்தமான எண்ணத்திற்கும் ஆட்படமாட்டேன்.. எவ்வளவு தடைகள் வந்தாலும் இறை வழியிலிருந்து அவருக்காக இருக்கும் விரதத்திலிருந்து விலகி செல்லமாட்டேன் இதெல்லாமே சுத்த அகங்காரம்..எனவே ஒரு நாளில் பல தடவை நான் என்று சொல்லும் பொழுதெல்லாம் நான் ஒரு ஆன்மா என்று நினைத்து சொல்லுங்கள்.. உங்கள் முன்னாள் யாரவது நான் என்று சொன்னால் இவர் ஒரு ஆன்மா என்று நெற்றியின் மத்தியில் பாருங்கள். என்னுடையது என்று வரும் பொழுது என்னுடைய தந்தை ஜோதிவடிவமான பரமாத்மா சிவபெருமானுடயது என்று நினையுங்கள்.உங்கள் முன்னாள் யாராவது என்னுடையது என்றால் ஜோதிவடிவமான தந்தை சிவபெருமானுடயது என்று உடனே மனதில் கொண்டு வாருங்கள்..மனித வாழ்க்கையில் பாஸாகி விடுவீர்கள்.. வாழ்த்துக்கள்..அகங்காரம் அழிந்து ஆணவம் அற்ற நிலைக்கு செல்ல சிவபெருமானால் கற்றுத்தரப்பட்ட ராஜயோகத்தை பிரம்மாகுமாரிகள் நிலையத்தில் இலவசமாக கற்று பயனடைவீர்.. வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment