jaga flash news

Wednesday 21 October 2020

அஷ்ட சூரணம்:-

அஷ்ட சூரணம்:-

அஷ்ட  சூரணம் தயாரிக்கும் முறை ;-


மிளகு                       -     100 கிராம் 

சீரகம்                       -     100 கிராம்

சுக்கு                        -     100 கிராம்

திப்பிலி                     -     100 கிராம்

கட்டி பெருங்காயம்     -     100 கிராம்

இந்துப்பு                    -     80 கிராம்

ஒமம்                          -     100 கிராம்

கருஞ்சீரகம்                -     100 கிராம்


சுக்கு : கடையில் வாங்கிய சுக்கின் மீது வெற்றிலை தாம்பூலத்திற்கு பயன்படுத்தும் சுண்ணாம்பை ஈரமாக தடவி ஒருநாள் நிழலில் உலர விட்டு கத்தியால் மேல் தோலை சுரண்டி வைத்து விடவும். இந்த தோல் நீக்கிய சுக்குவை சற்று இடித்து பின்பு வானலியில் போட்டு வறுத்து பின்பு பொடித்து வைத்துக்கொள்ளவும். ( சுக்கை எதற்கு பயன்படுத்தினாலும் இந்த முறையில் அதன் தோலை நீக்கி விட்டு பயன்படுத்தவும். ஏனெனில் சுக்கின் தோலானது சற்று நச்சுத்தன்மை வாய்ந்தது )  


இந்துப்பு : இந்துப்பை சற்று உடைத்துவிட்டு கடாயில் போட்டு இலேசாக வறுத்து எடுத்து ஆறவைத்து பின்பு மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ளவும். 


கட்டிப்பெருங்காயம் : கட்டிப்பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து பின்பு கடாயில் போட்டு அது பூரித்து வரும் வரை வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். 


மிளகு, சீரகம், திப்பிலி, ஓமம், கருஞ்சீரகம் இவற்றை தனித்தனியாக கடாயில் போட்டு இலேசாக வறுத்து ஆறவைக்கவும். பின்பு இவற்றை தனித்தனியாக வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.


இந்த அனைத்து பொடிகளையும் வாய்ப்புறம் அகலமான பாத்திரத்தில் போட்டு ஒன்றோடொன்று நன்றாக கலக்கும்படி செய்ய வேண்டும்.

பின்பு மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு சலித்து கரகரப்பான துகள்களை பிரித்து எடுத்து மீண்டும் மிக்சியில் போட்டு பொடித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் மொத்தமாக வைத்து பத்திரப்படுத்தவும்.

அஷ்டம் என்றால் எட்டு என்று அர்த்தம்

எட்டு வகையான கடைச்சரக்குகளை சேர்த்து தயாரிப்பதால் இதன் பெயர் அஷ்ட வர்க சூரணம் அல்லது அட்டச்சூரணம்.

கடுமையான, எளிதில் ஜீரணமாகா உணவு பண்டங்களின் மீது இந்த சூரணத்தை இலேசாக தூவி சாப்பிடலாம். அல்லது சாப்பாடு சாப்பிட்டு முடித்த பிறகும் அரை டம்ளர் வெந்நீரில் இச்சூரணத்தை நன்கு கலக்க விட்டு பிறகு அருந்தலாம். தொடர் ஏப்பம், புளி ஏப்பம் நீங்கும் .

No comments:

Post a Comment