jaga flash news

Monday, 5 February 2024

கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறந்த பிரத்யும்னன் கதை

 கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறந்த பிரத்யும்னன் கதை

கதா காலட்சேபம் செய்பவர்கள் கிருஷ்ணர் ருக்மணி கல்யாணத்துடன் நிறைவு செய்வார்கள் .திருமணம் எவ்வாறு நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு வம்சவிருத்தி எவ்வாறு உண்டானது என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம!??

விதர்ப்ப தேசத்தை பீஷ்மகன் என்பவன் ஆட்சி செய்து வந்தான் .அவனுக்கு ருக்மி என்ற மகனும் ருக்மணி என்ற மகளும் இருந்தனர்.ருக்மணியும் கிருஷ்ணரும் காதல் கொண்டனர் .ஆனால் இது ருக்மணியின் சகோதரன் ருக்மிக்கு பிடிக்காத காரணத்தால் தன் தங்கையை சிசுபாலனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து தந்தையிடமும் சம்மதம் வாங்கி விட்டார். மேலும் எல்லா நாட்டிற்கும் திருமண ஓலை அனுப்பினான் .ஜராசந்தன் பவுண்டரகன் முதலியோரையும் அழைத்தான். ஆனால் திருமணத்தன்று கிருஷ்ணர் ருக்மணியை கவர்ந்து சென்றார்.வழியில் ருக்மி அவருடன் போரிட ருக்மியை வீழ்த்தி கிருஷ்ணன் துவாரகை சென்று ருக்மணியை திருமணம் செய்து கொண்டார் .இது வரை அனைவரும் அறிந்ததே இனி.

சிறிது காலத்தில் மன்மதனை ஒத்த அழகுடன் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் ருக்மணி. அவனுக்கு பிரத்யும்னன் என்று பெயரிட்டனர். அக்காலத்தில் சம்பாசுரன் என்னும் ஒரு அசுரன் இருந்தான். அவனுக்கு கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறக்கும் மகனால் தான் சாவு என்று ஒரு வரம் உள்ளதை அறிந்து ருக்மணிக்கு பிறந்த பிரத்யும்னனை மாய வடிவில் துவாரகைக்குச் சென்று யாரும் அறியாமல் ஆறே நாளான பிறந்த சிசுவை தூக்கி வந்து கடலில் எறிந்து விட்டு ஓடிவிட்டான். கடலில் எறிந்த பிரத்யும்னனை மீனொன்று விழுங்கியது.

அவர்கள் வலையில் சிக்கியது. அவர்கள் அந்த மீனை சம்பராசுரன் அரண்மனைக்கு சாப்பாட்டுக்காக கொண்டுவந்தனர். அப்போது அங்கு சமையல் வேலையில் ஈடுபட்ட மாயாவதி என்ற பெண் ஒவ்வொரு மீனாக நறுக்கும் பொழுது ஒரு மீனின் வயிற்றில் அங்கும் இங்கும் அசையவே அதை பக்குவமாக அறுத்து அதற்குள் உயிரோடு இருக்கும் பிரத்யும்னனை கண்டு ஆச்சரியப் பட்டாள்.

குழந்தை எவ்வாறு மீனின் வயிற்றுக்குள் வந்தது என்று அவள் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாரத மகரிஷி அவள் முன் தோன்றி இந்த குழந்தை கிருஷ்ணரின் குழந்தை .இவனுக்கு பிரத்யும்னன் என்று பெயர். சம்பாசுரனுக்கு எமனாக இவன் வந்திருக்கிறான். ஆகவே இவனை பத்திரமாக வளர்த்து வா என்று கூறி விட்டு மறைந்தார்.

மாயாவதியும் நாரதர் கூறியதைக் கேட்ட திலிருந்து பிரத்யும்னனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள் .ஒரு நாள்  பிரத்யும்னன் பருவ வயதை அடைந்தவுடன் அவனிடம் பிரத்யும்னா நீ கிருஷ்ணரின் பிள்ளை. உன் தாயார் ருக்மணி. இருவரும் துவாரகையில் இருக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொன்னாள்.உடனே தன்னை பெற்றோரிடமிருந்து பிரித்த சம்பாசுரன் மேல் ஆத்திரம் கொண்டு அவனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றான்.

வெற்றியுடன் திரும்பிய பிரதயும்னன் தன்னை வளர்த்த மாயாவதியை அழைத்துக் கொண்டு ஆகாயமார்க்கமாக துவாரகையை அடைந்தார். துவாரகையில் கிருஷ்ணரின் சாயலில் இருந்த பிரத்யும்னனைக் கண்டதும் யாதவர்கள் கிருஷ்ணர் என்றே எண்ணி மகிழ்ந்தனர்.

ருக்மணிக்கு அவனைக் கண்டதும் தாய்மை உணர்வு பொங்கியது .நாரதரும் கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு துவாரகை வந்து சேர்ந்தார் .நீண்ட நாட்களாக காணாமல் போன தன் பிள்ளை திரும்ப கிடைத்ததை எண்ணி ருக்மணி எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டாள்.

இதுவே திருமணத்திற்குப் பிறகு அவர்கள் வம்சவிருத்தி ஆகி பிரத்தியும்னன் பிறந்து வளர்ந்த வரை உள்ள கதை .

7 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். கிருஷ்ணர் ருக்மிணி கதை அருமை. அடியேன் இக்கதையை எழுதி அனுப்புகிறேன்.

    ReplyDelete
  2. கிருஷ்ணர் & ருக்மிணி திருமணம் :

    ருக்மிணியை, சிசுபாலனுக்கு மணம் செய்விப்பது என்று ஏற்கெனவே முடிவாகியிருந்தது.

    எனவே அவ்வாறு நிகழா வண்ணம், கிருஷ்ணர் , அவளைக் கடத்திச் செல்ல வேண்டுமென்று, ருக்மிணி ஆலோசனை கூறுகிறாள்.

    *உம்மை என் கணவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். எனவே, என்னை நீர் உமது மனைவியாக ஏற்றுக் கொள்ளும்.*

    *நான் உமக்கு உரியவள். "சிங்கம் அனுபவிக்க வேண்டியதை, நரி எடுத்துச் செல்வது கேலிக் கூத்தாகும்."

    * எனவே, "சிசுபாலன்" என்னை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, நீர் என்னைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்.

    *பலராமரின் சகோதரரான கிருஷ்ணரே ! தயவுசெய்து இங்கு வந்து என்னை மணமுடித்து, சிசுபாலனைப் போன்றவர்கள் என்னைத் தொடாமல் பார்த்துக் கொள்ளும் என்று இவ்வாறு ஆலோசனைக் கடிதத்தில் கூறினாள்.

    * ஒரு பெண்ணை கடத்திச் சென்று திருமணம் புரிவது, ரா௯ஷஸத் திருமணம்.

    *ருக்மிணிக்கும், சிசுபாலனுக்கும் திருமணம் மறுநாள் நடக்க இருந்ததால், கிருஷ்ணர் மாறுவேடத்தில் வந்து, தன்னை கடத்திச் சென்று, சிசுபாலன் கோஷ்டியினருடன் போர் செய்ய வேண்டுமென்று அவள் எழுதியிருந்தாள்.

    *காரணம், கிருஷ்ணரை யாரும் வெல்ல முடியாது; அவர் வெற்றி பெறுவார் என்று அறிந்திருந்ததால், ருக்மிணி அவ்வாறு அறிவித்தாள்.

    இதன்பொருட்டே ருக்மிணி கிருஷ்ணரை "அஜிதா" என்று அழைத்தாள்.

    * மேலும், அரண்மனையினுள் சண்டை நடந்தால், அவளின் குடும்பத்தினர் கொல்லப்பட நேர்வதைப் பற்றிக் கிருஷ்ணர் கவலைப்பட வேண்டாம் என்றும் ருக்மிணி கூறினாள்.
    * அதேசமயம், பிறருக்கு முடிந்தவரை அபாயம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி, கிருஷ்ணருக்கு சூசகமாக தெரிவித்தாள்.

    *இந்நிலையில், திருமணத்திற்கு முன், "துர்கா தேவியின்" ஆலயத்துக்குச் செல்வது அவர்களின் குடும்ப வழக்கம் என்பதனையும் ருக்மிணி தெரிவித்தாள்.

    * பெரும்பாலும் ௯ஷத்திரியர்கள் தீவிர வைஷ்ணவர்கள். விஷ்ணுவை, ராதா கிருஷ்ணராகவோ, ல௯்ஷமி நாராயணராகவோ வழிபடுபவர்கள் என்றாலும், இக உலக நலன்களுக்காக துர்க்கையை அவர்கள் வழிபடுவது வழக்கம்.

    *ருக்மிணி இச்செய்தியை தெரிவிக்க காரணம் என்னவென்றால், அநாவசியமாக உறவினர்கள் கொல்லப் படுவதைத் தவிர்க்கவே, துர்க்கையின் ஆலயத்துக்குச் சென்று வரும்போது, அவளைக் கடத்திச் செல்வது எளிதாய் இருக்கும் என இவ்வாறு ருக்மிணி ஆலோசனைக் கூறினாள்.

    *ருக்மிணி உமக்காக அனுப்பியுள்ள ரகசியச் செய்தியை உம் முன் நான் வைக்கிறேன். நீர் ஆலோசித்து, ஆவன செய்வீராக. நீர் ஏதாவது செய்வதாக இருந்தால் உடனே செய்ய வேண்டும், காலதாமதம் வேண்டாம், என்றார் இச்செய்தியைக் கொண்டு வந்த பிராமணர்.

    * ருக்மிணி அனுப்பிய செய்தியை அறிந்த கிருஷ்ணர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் அந்தணரிடம் (பிராமணர்) கூறினார்... ருக்மிணி என்னைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாய் இருக்கிறாள். நான் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், நானும் அவளைக் கரம்பற்ற விரும்புகிறேன்.

    * பிஷ்மகனின் மகளைப் பற்றி என் மனம் எப்போதும் எண்ணிக் கொண்டிருக்கிறது.

    * என்னிடம் கொண்ட விரோதம் காரணமாக, ருக்மிணியின் சகோதரன், அவளை சிசுபாலனுக்கு மணம் முடிக்க நிச்சயித்திருக்கிறான், என்பதை நான் அறிவேன்.

    * ஆதலால், "சாதாரண விறகைத் தக்க வகையில் பயன்படுத்தி, நெருப்பை அதிலிருந்து உண்டாக்குவது போல, இந்த அசுர அரச குமாரர்களைக் கையாண்டு அவர்களின் மத்தியிலிருந்து நெருப்பைப் போல், ருக்மிணியைக் கொண்டு வருவேன் எனக் கூறி, விவாகத்திற்காகக் குறிப்பிட்டுள்ள நாளை அறிந்த கிருஷ்ணர், உடனே புறப்பட ஆயத்தங் கொண்டு, சாரதியான "தாருகனை" அழைத்து, ரதத்தை ஆயத்தப்படுத்து, "விதர்பா" செல்ல வேண்டும் என கட்டளையிட்டார்.

    * கட்டளையைப் பெற்ற தாருகன், கிருஷ்ணருக்குப் பிரியமான 4 − குதிரைகளை ரதத்தில் பூட்டினான்.

    * இக் குதிரைகளின் பெயரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    *(குறிப்பு : இக்குதிரைகளின் பெயர்களும், வர்ணனையும் "பத்ம புராணத்தில்" குறிப்பிடப்பட்டுள்ளன.)

    *முதல் குதிரை "சைவ்யா" − பச்சை நிறம்.
    *2−வது குதிரை "ஸுக்ரவா" − பனிக் கட்டி நிறம்.
    *3−வது குதிரை "மேகபுஷ்பா" − புதிய மேகத்தின் நிறம்
    *4−வது குதிரை "பலாஹகா" − சாம்பல் நிறம்.

    *இக் குதிரைகள் பூட்டப்பட்டு, துவாரகையிலிருந்து ரதம் புறப்படத் தயாரானது. கிருஷ்ணர், அந்த அந்தணரை, ரதத்தில் தனது பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.

    *ஒரு இரவு நேரத்தில் "விதர்ப நாட்டை" அடைந்தார்கள். (கவனிக்க : துவாரகை இந்தியாவின் மேற்குப் பகுதியிலும், விதர்பா வடக்குப் பகுதியிலும் உள்ளன. இவற்றிற்கு இடையேயான தூரம் 1000−மைல்களுக்கு குறையாமல் இருக்கும்.)

    * குதிரைகள் வேகமாகச் சென்றதால், அவர்கள் சேர வேண்டிய இடமான "குண்டிகா" நகரத்தை, ஒரு இரவு நேரத்தில், அதாவது, 12−மணி நேரத்தில் அடைந்தார்கள்.





    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ருக்மிணியை சிசுபாலனுக்குத் தர, பீஷ்மகன் அரசனுக்கு விருப்பமில்லை.. இத் திருமண ஏற்பாட்டைச் செய்த, தனது மூத்த மகன் (ருக்மி) மீது உள்ள பிரியத்தால் அதற்கு இசைந்தான்.

    அங்கே, குண்டினாவின் வீதிகளில் வண்ண வண்ணக் கொடிகளையும், தோரணங்களையும் கட்டியிருந்தார்கள். திருமணம் களை கட்டி இருந்தது. நகரம் முழுவதும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்மிருந்தன.

    அரசனின் மகளான "ருக்மிணி" அபூர்வ அழகுடன் விளங்கினாள்.

    சாம, ரிக், யஜூர் வேதம் ஆகியவற்றிலிருந்து புரோகிதர்கள் ருக்மிணியின் பாதுகாப்புக்காக மந்திரங்களை ஓதினார்கள்.

    கிரஹ தோஷம் நீங்க, அதர்வ வேதத்திலிருந்து மந்திரங்கள் எடுத்தோதி, நைவேத்தியம் சமர்ப்பித்தார்கள்.

    சிசுபாலனின் தந்தையாகிய *தமகோஷர்* தம் குடும்பத்தினரின் நலனைக் கருதிப் பல வேள்விகள் நடத்தினார்.

    தம என்றால் கட்டுப்படுத்துதல் என்று பொருள். கோஷ என்றால், புகழ் வாய்ந்தவர் என்று பொருள்.

    இத் தமகோஷர், ஒழுங்கற்ற குடிமக்களைக் கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதில் புகழ் பெற்றவர். அதாவது, குடிமக்களிடையே ஒழுங்கை நிலை நாட்டுவதில் அவர் வல்லவர்.

    தமகோஷரைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேல் இருந்தார்கள்.

    அவர்களுள்... *பிரசித்தி பெற்ற மன்னர்களும், ஜராசந்தன், தந்தவக்ரன், விதூரதன், பெளண்டிரகன்* போன்ற பிரமுகர்களும் திருமணத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

    அனைவருக்கும் தங்குவதற்ககான இட வசதிகளையும் செய்திருந்தார்கள்..

    இவ்வாறிருக்க.. சிசுபாலனுடன், ருக்மிணியைத் திருமணம் செய்விப்பது, அதுவும், மூத்த சகோதரனான ருக்மியின் ஏற்பாட்டின்படி நடக்கிறது என்பது, ஊரறிந்த ரகசியம். *ருக்மிணி, கிருஷ்ணருக்கு ஓலை அனுப்பியதாகவும் வதந்திகள் உலவின.*

    *கிருஷ்ணர், ஒரு பிராமணரை மட்டும் துணையாகக் கொண்டு, குண்டினா நகரத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார் என்ற செய்தி, தனது மூத்த சகோதரனான *பலராமனுக்கு* செய்தி கிடைத்தது.

    அதே நேரம், சிசுபாலன் பெரும் படையுடன் அங்கு வந்திருப்பதையும் பலராமர் அறிந்தார்.

    கிருஷ்ணரை அவர்கள் தாக்குவர் என்று எதிர்பார்த்து, பலராமர் ரதங்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைகள் அடங்கிய பல சேனாவியுகங்களுக்குத் தலைமை தாங்கி, குண்டினாபுரத்தை அடைந்தார்.

    இதற்குள், அரண்மனையின் அந்தபுரத்தில் *ருக்மிணி,* கிருஷ்ணரின் வரவை எதிர்நோக்கி இருந்தாள் ஆவலுடன்.

    திருமண நாளுக்கு இன்னும் ஒரு இரவே உள்ளது. இதுவரை யாரும் வரவில்லையே என மனக்குழப்பத்தில் இருந்தாள் நம்பிக்கை இழந்தவளாக.


    *பரமசிவனின் மனைவி பத்தினி துர்கா தேவி, அவளின் புருஷனின் விருப்பப்படி, தன்னைச் சோதிக்கிறாள் என்று ருக்மிணி நினைத்து வருந்தினாள்.

    இங்கு ஒன்று குறிப்பிட விரும்புகிறேன் .

    *சிவபெருமான் ருத்திரன் என்றும், அவரின் மனைவி ருத்திராணி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.*

    ருத்திரனும், ருத்திராணியும், பிறரை இன்னல்களுக்கு உட்படுத்தி அழ வைப்பதில் பிரியம் உடையவர்கள்.

    துர்கை, ஹிமாலய கிரியின் மகள். ஆதலால், கிரிஜா எனப்படுகிறாள்.

    இமய மலை எப்போதும் பனியால் மூடப்பட்டு, கொடூரமாகத் தென்படும். கிரிஜாவும் அதுபோல் குறுகிய மனதை உடையவள் என்று ருக்மிணி கருதினாள்.

    ருக்மிணி, கிருஷ்ணரைக் காணும் ஆவலில் இவ்வாறாக கருதினாள்.

    ReplyDelete
  5. கிருஷ்ணரைக் கணவராக அடைய வேண்டுமென்று, கோபியர்கள், *காத்யாயனி* தேவியை வணங்கினார்கள். பிரார்த்தித்தார்கள்.

    அதுபோல, கிருஷ்ணரை அடைவதற்காக ருக்மிணி தேவர்களை நினைத்தாள்.

    இவ்வாறு கவலையுற்றிருந்த ருக்மிணி, தூது சென்றிருந்த பிராமணர் திரும்பி வருவதைக் கண்டாள்.

    பரமாத்மாவான கிருஷ்ணர் , ருக்மிணியின் கவலையை அறிந்தார். எனவே, தாம் வந்திருப்பதைத் தெரிவிக்க, அந்தணரை அரண்மனைக்குள் அனுப்பினார்.

    அதன்படி யதுகுல குமாரனான கிருஷ்ணர் வந்து விட்டார் என்றும், நிச்சயமாகத் தாம் ருக்மிணியை கடத்திச் செல்வதாகக் கிருஷ்ணர், உறுதி கூறியிருப்பதையும், அந்தணர் குறிப்பிட்டார்.

    இவ்வாறிருக்க... *கிருஷ்ணரும், பலராமரும் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட *பீஷ்மக ராஜன்*, தன் மகளின் திருமணத்தைக் காண அவர்கள் வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.

    ருக்மிணி இங்கு தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு, மெய்க் காப்பாளர்கள் புடைசூழ, துர்கா தேவியான அம்பிகையின் ஆலயத்துக்குச் செல்வதற்காக அரண்மனையிலிருந்து வெளிவந்தாள். அவள் ஆலயத்துக்குச் சென்றபோது, சிந்தனையில் ஆழ்ந்து, மெளனமாகச் சென்றாள்.

    அவளினௌ அன்னையும், தோழாயும் உடனிருந்தார்கள்.

    ருக்மிணி துர்கா தேவியிடம் வேண்டினாள். அன்புள்ள துர்கா தேவி, உமக்கும், உமது குழந்தைகளுக்கும், நான் என் பணிவான வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

    இங்கு ஒரு சிறு விளக்கம் துர்கா தேவி பற்றி கூற விரும்புகிறேன்..!

    *(துர்கா தேவிக்கு , கீர்த்திமிகு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் இரண்டு பெண்கள். அதாவது, அதிர்ஷ்டத்தின் தேவதையான இலக்குமி(லட்சுமி). கல்வியின் தேவதையான சரஸ்வதி. இரண்டு குமாரர்கள் ...கணேசர் மற்றும் கார்த்திகேயன். இவர்கள் தேவதைகளாகவும், தேவர்களாகவும் கருதப்படுகிறார்கள். )

    ருக்மிணி, கிருஷ்ணர் தனக்குக் கணவராக அமைய வேண்டுமென்றும், துர்கா தேவி அதற்கு அருள் புரிந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்தாள்.

    கிருஷ்ணர் வந்து தன்னை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவள் மனதில் பதிந்திருந்தது.

    அந்த நேரமும் வந்தது. *அரச குமாரர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், கிருஷ்ணர், ருக்மிணியை திருடிக் கொடியை உடைய தம் ரதத்தில் ஏற்றிக் கொண்டு, நரிகளின் மத்தியிலிருந்து, சிங்கம் மானைத் தூக்கிச் செல்வதுபோல், எநதவித அச்சமும் இன்றி, மெதுவாக ரதத்தைச் செலுத்திச் சென்றார்.

    *கிருஷ்ணரிடம் பலமுறை தோல்வி அடைந்திருந்த *ஜராசந்தன்* கர்ஜிக்கலானான்.

    சிசுபாலனுக்கோ, ருக்மிணியை மணம் செய்து கொள்ள முடியாமல், கிருஷ்ணர் அவளை, அபகரித்துச் சென்றது, பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

    எனவே, மனமுடைந்தவர்களாக ரும்மியும், சிசுபாலனும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

    மனம் கொதித்துப்போன ருக்மி, கிருஷ்ணருக்குச் சரியான பாடம் கற்பிப்பதெனத் தீர்மானித்தான்.

    அதன்படி, கிருஷ்ணரைப் பின் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களுடனும், மற்றும் யானைப் படை, குதிரைப் படை,"ரதங்கள்,?நிறைந்த படைகளோடு, கிருஷ்ணரைப் பின் தொடர்ந்து, துவாரகையை நோக்கிப் படையெடுத்துச் சென்றான்..

    தனது கெளரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக, மற்ற அரச குமாரர்களிடம், *ருக்மிணியை, சிசுபாலனுக்கு மணம் முடிப்பதில், நீங்கள் எனக்கு உதவவில்லை.

    ஆனால், ருக்மிணியைக் கடத்திச் செல்வதை, நான் அனுமதிக்கப் போவதில்லை.

    எனவே, கிருஷ்ணரோடு போரிட்டு, என் சகோதரியை, அவரின் பிடியிலிருந்து மீட்காமல், *நான் என் தலைநகரான குண்டினாவுக்குத் திரும்புவது இல்லை என்று உங்களின் முன் பிரமாணம் எடுத்துக் கொள்கிறேன்* என்று கூறி கிருஷ்ணரின் ரதத்தை பின் தொடர்ந்தான்.

    ReplyDelete
  6. ருக்மி, விரைவாகச் சென்று கிருஷ்ணரை அணுகி, அவரின் மூன் நின்று , நில், என்னுடன் போர் செய்ய வா எனக் கூறினான்.

    கிருஷ்ணர் போரிட்டார். போரில் ருக்மி தோற்றான். ருக்மியைக் கொல்ல வேண்டாம் சுப வேளையில் என ருக்மிணி கிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து வேண்டினாள்.

    இருப்பினும் அவனுக்குச் சிறியதொரு தண்டனை விதிக்க விரும்பி, அவனைத் துணியால் கட்டி, அவனின் மீசையையும், தாடியையும், முடியையும், ஆங்காங்கே ஒரிரு இடங்களை மட்டும் விட்டுவிட்டு கத்தரித்து அனுப்பினார்.

    ருக்மி, தனது தங்கையான ருக்மிணியை விடுவிப்பதாக அவன் செய்த சபதத்தை நிறைவேற்றாமல், தலைநகரான *குண்டினாவுக்கு* அவன் திரும்ப முடியவில்லை.

    எனவே, கோபமடைந்து, "போஜகடம்" என்ற கிராமத்தில் குடிசை அமைத்துக் கொண்டு, எஞ்சிய வாழ்நாட்களை, அந்த ஆஸ்ரமத்தில் கழித்தான்.

    *கிருஷ்ணர், ருக்மிணியின் திருமணம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நண்பர்களான, குரு மற்றும் பாண்டவ அரசர்களின் பிரதிநிதிகளாகிய, திருதராஷ்டிரன், பஞ்ச பாண்டவர்கள், துருபதன், ஸந்தர்தனன் ஆகியோர் வந்திருந்தனர்.

    ருக்மிணியின் தந்தையாகிய *பீஷ்மக ராஜனும் வந்திருந்தான்.

    கிருஷ்ணரையும், ருக்மிணியையும் ஒருங்கே கண்டு பரவசமடைந்தார்கள்.

    உன்னதமான பகவானும், ஐஸ்வர்யங்களின் தேவதையான இலக்குமியும் திருமணத்தில் இணைந்ததைக் கண்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

    இவ்வாறாக இருவரின் திருமணம் நிறைவேறியது. கிருஷ்ணர் அரச குமாரர்களை வென்று, ருக்மிணியைத் துவாரகைக்கு எடுத்துச் செல்கிறார்.



    ருக்மி, விரைவாகச் சென்று கிருஷ்ணரை அணுகி, அவரின் மூன் நின்று , நில், என்னுடன் போர் செய்ய வா எனக் கூறினான்.

    கிருஷ்ணர் போரிட்டார். போரில் ருக்மி தோற்றான். ருக்மியைக் கொல்ல வேண்டாம் சுப வேளையில் என ருக்மிணி கிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து வேண்டினாள்.

    இருப்பினும் அவனுக்குச் சிறியதொரு தண்டனை விதிக்க விரும்பி, அவனைத் துணியால் கட்டி, அவனின் மீசையையும், தாடியையும், முடியையும், ஆங்காங்கே ஒரிரு இடங்களை மட்டும் விட்டுவிட்டு கத்தரித்து அனுப்பினார்.

    ருக்மி, தனது தங்கையான ருக்மிணியை விடுவிப்பதாக அவன் செய்த சபதத்தை நிறைவேற்றாமல், தலைநகரான *குண்டினாவுக்கு* அவன் திரும்ப முடியவில்லை.

    எனவே, கோபமடைந்து, "போஜகடம்" என்ற கிராமத்தில் குடிசை அமைத்துக் கொண்டு, எஞ்சிய வாழ்நாட்களை, அந்த ஆஸ்ரமத்தில் கழித்தான்.

    *கிருஷ்ணர், ருக்மிணியின் திருமணம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நண்பர்களான, குரு மற்றும் பாண்டவ அரசர்களின் பிரதிநிதிகளாகிய, திருதராஷ்டிரன், பஞ்ச பாண்டவர்கள், துருபதன், ஸந்தர்தனன் ஆகியோர் வந்திருந்தனர்.

    ருக்மிணியின் தந்தையாகிய *பீஷ்மக ராஜனும் வந்திருந்தான்.

    கிருஷ்ணரையும், ருக்மிணியையும் ஒருங்கே கண்டு பரவசமடைந்தார்கள்.

    உன்னதமான பகவானும், ஐஸ்வர்யங்களின் தேவதையான இலக்குமியும் திருமணத்தில் இணைந்ததைக் கண்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

    இவ்வாறாக இருவரின் திருமணம் நிறைவேறியது. கிருஷ்ணர் அரச குமாரர்களை வென்று, ருக்மிணியைத் துவாரகைக்கு எடுத்துச் செல்கிறார்.













    ReplyDelete
  7. Wed. 10, Apl. 2024 at 9.53 pm.

    *பிரத்யும்னன் பிறக்கிறான் :*

    * பகவான் வாசுதேவரின் நேர் அம்சமான "மன்மதன்"... "முன்பு "பரமசிவனின்" கோபத்துக்கு ஆளாகிச் சாம்பலாக எரிக்கப்பட்டவன்.

    * ருக்மிணியின் கர்ப்பத்தில், கிருஷ்ணருக்கு மகனாகப் பிறந்தான்.

    * இந்த காமதேவனான மன்மதன், தேவர்களுள் ஒருவன். உள்ளங்களில் காம உணர்வுகளை எழச் செய்பவன். முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரின் பலதரப்பட்ட அம்சங்கள் உள்ளன.

    * காமதேவனாகிய மன்மதன் பின்னர் ருக்மிணியின் கர்ப்பத்தில் பிறந்தபோது அவனும் பிரக்யும்னன் என்று அழைக்கப்பட்டான். ஆனால், அவன் விஷ்ணு அம்சத்தைச் சார்ந்த பிரத்யும்னன் ஆகமாட்டான்.

    * அவன் ஜீவ தத்துவம் எனும் அம்சத்தைச் சார்ந்தவன். ஆனால் விசேஷ பலம் பெற்ற தேவர்களுள் ஒருவன்.

    * எனவே, சிவனின் கோபத்தால் மன்மதன் எரித்துச் சாம்பலாக்கப் பட்டபோது, அவன் வாசுதேவரின் உடலில் ஐக்கியமாகி, மீண்டும் உருவம் பெறுவதற்காக, கிருஷ்ணருக்கு மகனாகப் பிறந்தான்.

    இந்த பிரத்யும்னனால் கொல்லப்பட வேண்டுமென்று விதிக்கப்பட்ட "சம்பரன்" என்ற ஒரு அசுரன் இருந்தான்.

    சம்பரன், தனக்கு இவ்வாறு விதிக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தான். எனவே, பிரத்யும்னன் பிறந்ததை அறிந்ததும் அவன் ஒரு பெண்ணின் வடிவத்தை மேற்கொண்டு, குழந்தையாகிய பிரத்யும்னனை அவன் பிறந்து 10−நாட்களுக்குள் தூக்கிச் சென்று, கடலில் எறிந்து விட்டான். கடலினுள் எறியப்பட்ட பிரத்யுனனை ஒரு "பெரிய மீன்" விழுங்கியது.

    இந்த மீன் ஒரு மீனவனின் வலையில் அகப்பட்டு, சம்பரனிடமே விற்கப்பட்டது.

    * சம்பரனின் சமையலறையில், "மாயாவதி" ஊன்ற பெயருடைய ஒரு வேலைக்காரி இருந்தாள்.

    இந்த வேலைக்காரி முன்பு, மன்மதனின் மனைவியாய் இருந்த ரதி ஆவாள்.

    சம்பரனுக்கு அந்த மீன் பரிசாக அளிக்கப்பட்டதும், அவனின் சமையல்காரன் அதைக் கொண்டு, சுவையான உணவு தயாரிக்கத் திட்டமிட்டான்.

    அதன்படி, சமையல்காரன் மீனை வெட்டத் துவங்கியபோது, அதன் வயிற்றில், ஒரு அழகிய குழந்தை இருக்கக் கண்டு, அதை, வேலைக்காரி மாயாவதியிடம் கொடுத்தான். அப் பெண், இவ்வளவு அழகான மனிதக் குழந்தை, மீனின் வயிற்றினுள் எப்படி வந்தது என்று எண்ணி, ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், "நாரதமுனி" அவள் முன் தோன்றி, பிரத்யும்னனின் பிறப்பை விளக்கிக் கூறினார். தான் முன்பு, ரதியாய் இருந்ததையும் அவள் அறிவாள்.

    * சிவபெருமானின் கோபத்தால் சாம்பலாக்கப்பட்ட, தன் கணவனாகிய "மன்மதன்" மீண்டும் உருப்பெற்று வருவான் என்று அவள் எதிர் பார்த்திருந்தாள்.

    * சம்பரனின் சமையல் அறையில் பொறுப்பேற்றிருந்த மாயாவதியிடம் குழந்தை, அதிசயிக்கத்தக்க வகையில், விரைவாக வளர்ச்சியடைந்து, மிகவும் குறுகிய காலத்தில், ஒரு அழகிய இளைஞனாக உருப்பெற்றான்.

    *பிரத்யும்னன் தோற்றத்தில், கிருஷ்ணரைப் போலவே இருந்தான்.

    இதுவே, பிரத்யும்னன் பிறந்த கதை.

    Sivajansi.

    ReplyDelete