jaga flash news

Tuesday, 6 February 2024

ராசி Vs ரோஜாப்பூ

ஜோதிடத்தின் படி, காதலன் காதலிக்கு ராசிப்படி ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், அது அந்த காதலர்களுக்கு இடையே அன்பையும், பிணைப்பையும் அதிகரித்து, காதலில் வெற்றி காணச் செய்யும். உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் மற்றும் உங்கள் காதல் வெற்றி அடைய விரும்பினால், உங்கள் காதலியின் ராசிக்கேற்ற நிற ரோஜாப்பூக்களைக் கொடுங்கள். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நிற ரோஜாவை கொடுக்க வேண்டும் என்பதைக் காண்போம்

மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய். இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏனெனில் செவ்வாய்க்கு உரிய நிறம் சிவப்பு. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், அது வாழ்வில் அன்பை பராமரிக்கும். ஒருவேளை நீங்கள் இந்த ராசிக்காரர்களிடம் காதலை முன்மொழிய நினைத்தால், சிவப்பு நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், நேர்மறையான பதிலைப் பெறலாம்.
ரிஷபம் மற்றும் துலாம்
துலாம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் காதல் மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் இயற்கையாகவே அதிக காதலுணர்வைக் கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்களிடம் காதலை முன்மொழிய நினைத்தால், அவர்களுக்கு பிங்க் நிற ரோஜாப்பூக்களைக் கொடுக்கலாம்.
மிதுனம் மற்றும் கன்னி

கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்களின் அதிபதி புதன். இந்த ராசியை சேர்ந்தவர்களிடம் காதலை தெரிவிக்க நினைத்தால், பச்சை நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்து தெரிவியுங்கள். இதனால் அவர்களின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைப்பதோடு, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும். கடகம் கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனுக்கு உரிய நிறம் வெள்ளை. எனவே இந்த கடக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ளை நிற ரோஜாவை கொடுத்து, காதலை முன்மொழிந்தால், நேர்மறையான பதிலைப் பெறலாம். வெள்ளை ரோஜாக்கள் நித்திய அன்பையும் இதயத்தின் உண்மையையும் குறிக்கின்றன.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். ஆகவே சிம்ம ராசியைச் சேர்ந்தவர்களிடம் காதலை முன்மொழிய நினைத்தால், அவர்களுக்கு லாவெண்டர் நிற ரோஜாப் பூக்களைக் கொடுத்து காதலை வெளிப்படுத்துங்கள். இதனால் சிம்ம ராசிக்காரர்களை மகிழ்வித்து, அவர்களின் அன்பைப் பெறலாம். ஒவ்வொரு நிற
தனுசு மற்றும் மீனம்

தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானுக்கு உரிய நிறம் மஞ்சள். ஆகவே இவ்விரு ராசிக்காரர்களிடம் காதலை வெளிப்படுத்த நினைத்தால், மஞ்சள் நிற ரோஜாப் பூக்களைக் கொடுத்து வெளிப்படுத்துங்கள். மஞ்சள் நிறமானது மகிழ்ச்சி மற்றும் நட்பின் சின்னம். எனவே இந்த நிற ரோஜாப்பூக்களைக் கொடுப்பதால் அன்பு அதிகரிக்கும் மற்றும் நேர்மறையான பதிலையும் பெற வாய்ப்புள்ளது.

மகரம் மற்றும் கும்பம்

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், அது அன்பில் ஆழத்தைக் கொண்டு வரும். மேலும் சிவப்பு நிற ரோஜாவை இந்த ராசிக்காரர்களுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.

1 comment:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete