jaga flash news

Tuesday 13 February 2024

பிரதோஷம் சோமசூத்ர பிரதட்சணம் சிறப்புகள்

-பிரதோஷம் சோமசூத்ர பிரதட்சணம் சிறப்புகள்
Sani Pradosham: சிவ வழிபாட்டில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது சிவராத்திரி, பிரதோஷம். அர்த்தநாரி பிரதோஷம், சனி மஹா பிரதோஷம் என்பது என்ன -பிரதோஷத்தின் போது சோமசூத்ர பிரதட்சணம் செய்வது எப்படி பார்ப்போம்...

சோமசூத்ர பிரதட்சணம்
நந்தி பகவானையும், சிவ பெருமானையும் வழிபட மிக விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது பிரதோஷம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியில் பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நந்தி பகவானுக்கும், சிவனுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கும். இந்த நேரத்தை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.


பிரதோஷ நேரத்தைல் நாம் சோமசூத்ர பிரதட்சணம் செய்தால் அநேக அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்பது முன்னோர் வாக்கு.



செல்வத்தை ஈர்க்கும் சூச்சம புதன்கிழமை பிரதோஷம்



பிரதோஷ சோமசூத்ர பிரதட்சணம் செய்வது எப்படி?
முதலில் சிவன் கோயிலில் வெளியில் உள்ள நந்தி பகவானை வணங்கி நேராக உள்ளே சென்று சிவ பெருமானுக்கு இடப்புறமாக (Anti Clockwise) இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அதே வழியாக திரும்ப வந்து (Clockwise), இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது அபிஷேக தீர்த்தம் வெளியேறக்கூடிய சோமசூத்ரம் எனும் கோமுகி வரை வந்து வணங்கி மீண்டும், வந்த வழியே சண்டிகேஸ்வரர் சன்னதி வரை வந்து வணங்க வேண்டும். மீண்டும் சோமசூத்ரம் வரை சென்று வணங்கி விட்டு, மீண்டும் சண்டிகேஸ்வரரை தரிசித்துவிட்டு, சிவபெருமானை நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.

இப்படி மூன்று, ஐந்து, 11 என ப்ரதட்ஷிணம் செய்து சிவபெருமானையும், நந்தியையும் வழிபட்டு வந்தால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்களுக்கு இறைவனின் அரு. ஆயிரம் மடங்கு அதிகமாக கிடைக்கும்.

பிரதோஷத்தின் போது சிவன் கோயிலில் எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்... முழுவிபரம் இதோ



பிரதோஷ காலம் தீங்கு விளைவிக்கும் நேரமா?
பிரதோஷம் என்பது வட மொழியில் தீங்கு விளைவிக்கக்கூடிய நேரம் என்று பொருள்.
இந்த தீங்கு விளைவிக்கக்கூடிய நேரத்தில் தான் சிவபெருமான், பிரபஞ்ச உயிர்களை காக்கும் பொருட்டு விஷம் அருந்தி நீலகண்டன் ஆனார். இதனால் இந்த நேரத்தில் நாம் சிவனை வழிபடுவதால் நம் பிரச்னைகள் தீர்ந்து நல் வழி பிறக்கும்.

பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய, உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்... பாடி பரவசமடையுங்கள்

சனி மஹா பிரதோஷம்
சனிக்கிழமைகளில் பிரதோஷம் அமைவது மிக விசேஷமாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சனி மகா பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. சனி பிரதோஷ தினத்தில் ஐந்து வருடம் சிவாலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அர்த்தநாரி பிரதோஷம் :
மிகவும் சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷங்கள் அடுத்தடுத்து இரண்டு முறை அனுசரித்தால் அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.

அதாவது சிவனும், சக்தியும் இரண்டறக்கலந்து அர்த்தநாரீஸ்வரராக இருப்பதால், இந்த இரண்டு பிரதோஷங்களில் வழிபட பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். மேலும் திருமண கூடுவருவதில்ல் இருந்த தடைகள் விலகி, விரைவாக திருமணம் கை கூடும். முன்பு கை விட்டுப் போன, இழந்த செல்வங்கள் வந்து சேரும்.
 

No comments:

Post a Comment