jaga flash news

Monday 26 February 2024

சரியான பக்குவத்தில் சிக்கனை சாப்பிட வேண்டும்



கோழிக்கறி எடுக்குறீங்களா?கிச்சனில் சிக்கனை கழுவுறீங்களா? உடனே இதை படிங்க..இந்த 10தவறுகளை செய்யாதீங்க
குறைந்த விலையில், அதிக புரோட்டீன் நிறைந்த உணவு சிக்கன்தான்.. அத்துடன், பல்வேறு ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.. குறிப்பாக, வைட்டமின் B12 நிரம்பி உள்ளது.. இத்தனை சத்துக்களும் வீணாகாமல் நமக்கு கிடைக்க வேண்டுமானால், சிக்கனை சரியானதாக பார்த்து வாங்கி, சரியான முறையில் சுத்தம் செய்து, சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட வேண்டி உள்ளது.




கோழிக்கறி, சாம்பல் நிறத்தில் இருந்தால் அதை வாங்க கூடாது.. எப்போதுமே சிக்கனின் சதைப்பகுதி பிங் நிறத்தில் இருக்க வேண்டும்.. அதுதான், ஃபிரெஷான சிக்கன் என்று அர்த்தம். சிக்கன் வெட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரைக்குள் ரத்த உறைவு இருந்தால் துர்நாற்றம் இர
கோழிக்கறி சமையல்: கோழிக்கறியை கழுவும்போதும், நல்ல சிக்கனா? பழைய சிக்கனா? என்று தெரிந்துவிடும்.. கழுவும்போது துர்நாற்றம் வந்தாலே, அது பழைய கோழிக்கறிதான்.. கோழிக்கறியின் மேல்புறம் பச்சை கலரிலோ அல்லது கருப்பு கலரிலோ இருந்தால், அதுவும் பழைய சிக்கன்தான். அல்லது நோய்வாய்ப்பட்ட கோழியாகவும் இருக்கலாம்.

எப்போதுமே சிக்கனை ஏற்கனவே கட் செய்து, ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்டிருந்தால் அதை வாங்க வேண்டாம்.. அந்த கோழியை எப்போது அறுத்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது..

எப்படி வாங்க வேண்டும்: சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக் செய்யப்பட்ட சிக்கனையும் தவிர்க்கலாம்.. அப்படியே வாங்குவதாக இருந்தாலும், அந்த பாக்கெட்டில் உள்ள தேதியை கவனிக்க வேண்டும். அந்த பேக்கிங்கை பிரிக்கும்போது, அந்த கவரின் அடியில் தண்ணீர் வடிந்திருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.. தண்ணீர் வடிந்து, கவரின் அடியில் தேங்கி கிடந்தால் அது பழைய சிக்கன்..


கோழிக்கறியைவிட, அதன் எலும்புகளிலும் சத்து உள்ளது என்பதால், போன்லெஸ் சிக்கன் என்பதை தவிர்த்து, எலும்புடன், தோலுடன் கேட்டு வாங்க வேண்டும். கோழிக்கறியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, கோழியை வெளியில் மிருதுவாகவும் உள்ளே மென்மையாகவும் மாற்றுவதற்கு தோல்கள் உதவுகின்றன.

பாக்டீரியாக்கள்: அதேபோல, கோழிக்கறியில் காம்பிலோபாக்டர் campylobacter, மற்றும் சால்மொனெல்லா (salmonella) போன்ற பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே, கோழிக்கறியை வாங்கி வந்துமே தண்ணீரில் ஊறவைக்ககூடாது. காரணம், தண்ணீர் பட்டதுமே, சிக்கனுக்குள்ளிருக்கும் இந்த கிருமிகள் மேலே அதிகமாக வர துவங்கிவிடுமாம்.


அதேபோல, சமையலறையில் வைத்து சிக்கனை கழுவக்கூடாது. இதனால், இந்த கிருமிகள் சிங்க் தொட்டிகளிலும், கிச்சன் வைத்திருக்கும் பொருட்களிலும், நம்முடைய டிரஸ்களிலும் பரவுமாம். மற்ற உணவு பொருட்களில் படிந்து, அதை நாம் சாப்பிட நேரிடும்போது உபாதைகள் அதிகரித்துவிடும்.


அதனால், வீட்டு பால்கனியிலோ அல்லது வீட்டுக்கு வெளியே வைத்துதான் கோழிக்கறியை கழுவ வேண்டும். சிக்கனை வாங்கி வந்ததுமே அதைக் கழுவக் கூடாது என்றும், தண்ணீரில் ஊற வைக்கக்கூடாது என்றும் சுகாதார அமைப்பே எச்சரிக்கிறது.

சிக்கன் : அதேபோல, சமைக்கும்போது, மஞ்சள் தூளை சேர்க்காமல், கோழிக்கறியை கழுவும்போதே மஞ்சள் தூளை தேய்த்து கழுவ வேண்டுமாம். குர்குமீன் என்ற பொருள் மஞ்சளில் உள்ளதால், சிக்கனில் உள்ள கிருமிகளை இது முழுவதுமாக அழித்துவிடும். அந்தவகையில் கிருமிநாசினி போல மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.

கோழிக்கறியை கழுவியதுமே சமைத்துவிடக்கூடாது. இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எலுமிச்சம் சாறு, கல் உப்பு சிறிது சேர்த்து அரை மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். சிக்கன் 65 செய்வதற்கு இந்த முறையைதான் நாம் பயன்படுத்துகிறோம் என்றாலும், கோழிவறுவல், கோழி குழம்பு, கிரேவி செய்வதற்கும் இதே முறையை தான் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் குழம்பின் ருசியும் அதிகரிக்கும்.


கோழிக்கறி: அதேசமயம், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் மட்டுமே பயன்படுத்தி கழுவுவதால், பேக்டீரியாக்கள் கொல்லப்படுவதில்லையாம்.. சிலசமயம், மாமிசம் கெட்டு போகும் வாய்ப்புகளும் அதிகமாம்.

எனவே, மஞ்சள் தூள் சேர்த்து கழுவி முடித்ததும், குறைந்த வெப்ப அளவிலான கொதி நீரில் சிக்கனை போட்டு சிக்கனை அலசி சுத்தம் செய்தால், வெப்ப நீரிலும் கிருமிகள் அழிந்து விடும்.. தேவைப்பட்டால், இந்த சுடுநீரில் எலுமிச்சம் சாறு அல்லது வினிகர் கலந்து கொள்ளலாம்.

சத்துக்கள்: அதேபோல, ஃபிரஷ் கோழிக்கறி வேக வெறும் 20 நிமிடங்களே போதுமாம். அதற்கு மேல் கொதிக்கவிடக்கூடாது என்கிறார்கள்.


கோழிக்கறியை வேகவிடும்போது, மூடிபோட்டு வேகவிட வேண்டும்.. இதனால், கோழித்தோல் இறைச்சியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, கோழியை வெளியில் மிருதுவாகவும் உள்ளே மென்மையாகவும் மாற்றும்.குறைந்த விலையில், அதிக புரோட்டீன் நிறைந்த உணவு சிக்கன்தான் என்பதால், இந்த சத்துக்களை எளிதில் வீணாக்க வேண்டாம்.


1 comment:

  1. சிக்கன் சாப்பிடுகிற கக்கா பையன். வாயிலே வாந்தி வருது வாசிக்கும்போதே.

    ReplyDelete