எப்போது திருமணம் நடக்கும்?
பிறப்பு ஜாதகத்தில், திருமண வீட்டை எந்த விதமான பாபகிரகங்களும் பார்க்காமல், சம்மந்தப்படாமல் இருந்தால், இளம் வயதில் திருமணம் நடக்கும்
. சூரியன், கேது, சனி, செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களும் ஏழாம் வீட்டோடு எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இருந்தால், விரைவில் திருமணம் நடக்கும்.
ஜாதகப்படி, 5 ஆம் வீடு, 7 ஆம் வீடு மற்றும் 9 ஆம் வீடு ஆகிய மூன்றுவீடுகளும் (அல்லது இதில் உள்ள கிரகங்களும்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருந்தால், இளம் வயதில் திருமணம் நடக்கும்
.ஒருவருக்குத் திருமணம் நடைபெறும் காலம் இப்படி வரையறுக்கலாம்
.1. ஏழாம் இடத்தில் உள்ள கிரகத்தின் தசாபுத்தியில்
2. ஏழாம் பாவத்தை பார்க்கும் கிரகத்தின் புத்தியில்
3. சுக்கிரனின் நட்சத்திராதிபதியின் புத்தியில்
4. லக்னாதிபதி இருக்கும் நவாம் சாதிபதியின் புத்தியில்
5. ராகு தசா புத்தி அந்தரத்தில் இவற்றில் அந்த வயதுக்குரிய காலம் வந்தால், நிச்சயம் திருமணம் நடக்கும். ,
No comments:
Post a Comment