jaga flash news

Wednesday, 22 January 2025

இட்லி என பெயர் காரணம்


தமிழ்நாட்டுக்கு இட்லி வந்த கதை தெரியுமா? அடேங்கப்பா இதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா!

இன்றைக்கு பாஸ்ட் புட் எந்த அளவுக்கு கெத்து காட்டுகிறதோ.. அந்த அளவுக்கு இட்லியும் மாஸ் காட்டி வருகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் உண்மையான துரித உணவே இந்த இடலிதான். 5 நிமிடத்தில் சுட்டு அவித்துவிடலாம். இப்படி எளிமையான உணவான இட்லி, விஜயநகர பேரரசு காலத்தில்தான் தமிழ்நாட்டு வந்துள்ளது.




தட்டு இட்லி, கறி இட்லி, சாம்பார் இட்லி, குக்கர் இட்லி என எத்தனையோ வகையான இட்லிகள் வந்தாலும், பன்(BUN) சைஸில் உள்ள இட்லிதான் எப்போதும் எல்லோராலும் விரும்பப்பட்டு வருகிறது. இந்த இட்லிகள் குறித்து நிறைய கதைகள் இருக்கின்றன. எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் அவருடைய சிறு வயதில் எப்படியெல்லாம் இட்லியை சுட்டார்கள் என்று தனியாக ஒரு குட்டி ஸ்டோரியே எழுதியிருக்கிறார்.


40 ஆண்டுகளுக்கு முன்னர் இட்லி என்பது பண்டிகை கால உணவு. பொங்கல், தீபாவளி வந்தால்தான் இட்லிக்கு அரிசி போடுவார்கள். ஊருக்கு இரண்டு ஆட்டு கல்தான் இருக்கும். எனவே இரவு முழுவதும் கல் இருக்கும் வீடுகளுக்கு முன் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் அரிசியை அரைத்து எடுத்து போவார்களாம். இட்லி வருவதற்கு முன்னரே தமிழர்கள் துவையல்களை கண்டுபிடித்திருந்தார்கள். கையில் கிடைக்கும் எல்லாத்தையும் துவையலாக மாற்றும் வழக்கம் நம்மிடம் இருந்தது. இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் அதுதான் சட்னி.
 
விஜயநகர பேரரசு காலத்தில்தான் இட்லி தமிழ்நாட்டில் வந்தது என்று தொ.பரமசிவன் கூறியதையும் தெரிவித்திருக்கிறார். விஜயநகர பேரரசு காலங்களில் மக்கள் இட்லியை சாப்பிட்டதற்கான ஆதாரங்களாக சில கல்வெட்டுகள் கிடைக்க பெற்றிருக்கின்றன. இதற்கு முன்னர் தமிழகத்தில் இட்லி சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இட்டு அளிப்பதால் இதற்கு இட்லி என பெயர் காரணம் வந்திருக்கலாம் என்றும் கூட சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் மார்ச் 30ம் தேதி சர்வதேச இட்லி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது கடந்த 2015ம் ஆண்டு சென்னையில்தான் முதன் முதலில் தொடங்கி வைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.


No comments:

Post a Comment