jaga flash news

Monday, 27 January 2025

குதிகால் வலி


இரவு தூங்கும் முன் 4 ஓமவல்லி இலை... சாகும் வரை குதிகால் வலி வராது!
குதிகால் வலியை நிரந்தரமாக எப்படி தீர்ப்பது என்பதற்கான வீட்டு வைத்திய முறையை இதில் பார்க்கலாம். இதை பின்பற்றுவதன் மூலம் குதிகால் வலி குணமடைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 

வயது பேதமின்றி இன்றைய சூழலில் பலரும் குதிகால் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக எத்தனையோ மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் தீர்வு கிடைப்பதில்லை என சிலர் கூறுவதை கேட்டிருக்கிறோம். அந்த வகையில் வீட்டு வைத்தியம் மூலமாக இதற்கு எப்படி தீர்வு காண்பது என காணலாம்.

இதற்காக 4 ஓமவல்லி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், டூத் பேஸ்ட் சிறிதளவு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். முதலில் ஓமவல்லி இலைகளை நன்றாக இடித்து சாறுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், மஞ்சள் தூள் மற்றும் டூத் பேஸ்டை சேர்த்து கலக்க வேண்டும். இப்படி கலக்கும் போது சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக இந்தக் கலவையுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இதனை இரவு தூங்குவதற்கு முன்னதாக குதிகாலில் வலி இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு படுக்கலாம். இப்படி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து செய்தால் குதிகால் வலி முற்றிலும் நீங்கி விடும்.

 




 


No comments:

Post a Comment