jaga flash news

Thursday, 21 August 2025

கடிகாரம் வாஸ்து


கடிகாரங்களை இங்கே மாட்டி வைக்காதீங்க.. கடிகாரத்தை பரிசாக தரக்கூடாதா?   கடிகாரம் வாஸ்து
வீட்டில் பயன்படுத்தக்கூடிய வழக்கமான பொருட்களை சரியாகவும், முறையாகவும் வைத்திருந்தாலே தேவையற்ற சிக்கலை குடும்பத்தில் தவிர்த்துவிடலாம். அந்தவகையில் சுவர் கடிகாரம் மிக முக்கியமானது. தவறான திசை, தவறான இடம், தவறான கடிகாரம் போன்றவற்றினால் எழக்கூடிய பிரச்சனைகள் ஏராளம். இதுகுறித்து வாஸ்துவில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது. வீட்டின் நிதி சிக்கல் தீர வேண்டுமானால் கடிகாரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம். அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.


கடிகாரங்களை வடக்கு பக்கமுள்ள சுவற்றில் மாட்டி வைக்க வேண்டும். அந்த கடிகாரம் தெற்கு பார்த்தவாறு இருந்தால், வீட்டில் பொருளாதார சிக்கல் ஏற்படாது.. அதிம், வடக்கு பக்கத்தில் வட்ட வடிவமுள்ள கடிகாரங்கள் மாட்டினால் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்குமாம். ஏனென்றால், குபேரருக்கு உரிய திசை இதுவென்பதால், நிதி நிலைமை வளமாக இருக்கும்.



ஒருவேளை வடக்கு திசையில் கடிகாரம் வைக்க முடியாமல் போனால், கிழக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கலாம்.. அதாவது மேற்கு திசையை பார்த்தவாறு கடிகாரம் இருக்க வேண்டும்.. இப்படி வைத்தாலும் செல்வம் தடையின்றி குடும்பத்திற்குள் வரும்.. ஏனென்றால், குபேரனை உள்ளடக்கிய இந்திரனின் திசை இதுவாகும்.


சத்தம் எழுப்பும் கடிகாரங்கள்
1 மணி நேரத்திற்கு ஒருமுறை மணி அடித்து சத்தம் எழுப்பும் கடிகாரமாக இருந்தால் கிழக்கு திசையில் மாட்டி வைக்கலாம்.

வடக்கு, கிழக்கு திசையில் முடியாமற்போனால், வடகிழக்கு திசையிலும் வைக்கலாம். இங்கு நேர்மறை ஆற்றல் பரவும்.. ஆனால், தெற்கு திசையில் மட்டும் கடிகாரத்தை மாட்டக்கூடாது.


தெற்கு எம தர்மனின் திசை என்பதால், இத்திசையில் கடிகாரத்தை மாட்டுவது, நம்முடைய ஆயுட்காலத்தை எம தர்மன் குறைக்க ஏதுவாகும். எனவே இத்திசையில் கடிகாரங்கள் மாட்டுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்..

பரிசாக கடிகாரங்களை தரலாமா
தென்பகுதியில் மட்டுமல்ல, படுக்கை அறையில் கடிகாரம் மாட்டி வைக்கக்கூடாது.. நிலைக்கதவுக்கு மேல் புறமும் கடிகாரத்தை மாட்டக்கூடாது.. வாசலுக்கு வெளிப்புறமும் கடிகாரத்தை மாட்டி வைக்கக்கூடாது.. பால்கனி சுவரிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது.


உங்களைவிட குறைந்த வயதுடையவர்களுக்கு கடிகாரத்தை பரிசாக தரலாம்.. ஆனால், உங்களைவிட அதிக வயதானவர்களுக்கு கடிகாரத்தை பரிசாக தந்துவிடக்கூடாது.


நீலம், கருப்பு, ஆரஞ்சு நிற கடிகாரங்களை பயன்படுத்தக்கூடாது.. மஞ்சள், பச்சை அல்லது வெளிர் பழுப்பு நிற கடிகாரத்தை வாங்கலாம்.. வெள்ளை, மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறங்களில் கடிகாரங்கள் இருக்குமானால் நேர்மறையான சக்திகளை வீட்டிற்குள் ஈர்க்க செய்யும்.

எப்போதுமே கடிகாரங்கள் அழுக்காக, தெளிவற்று இருக்கக்கூடாது.. கடிகாரங்கள் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.. பழுதான கடிகாரங்கள், பேட்டரியில்லாத கடிகாரங்கள், விரிசல் விழுந்த கடிகாரங்களை வீட்டில் வைத்திருக்ககூடாது.

கிழக்கு திசை - ஆரோக்கியம்
நேரத்தை அதிகப்படுத்தி வைக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் குறைவான நேரத்தை வைக்கக்கூடாது.. சரியான நேரத்தில் கடிகாரத்தை இயங்கவிட வேண்டும்.

கிழக்கு திசையில் கடிகாரத்தை வைப்பதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பார்கள்.. ஏனென்றால், கிழக்குத் திசை என்பது சொர்க்கத்தின் அதிபதி இந்திரனின் திசை. இந்திரன் தேவாதி தேவன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் இந்திரனுக்குள் அடக்கம் என்கின்றன புராணங்கள். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்க வேண்டும் என்றால் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும்.

வடக்கு சுவரில் கடிகாரம்
இப்படி கிழக்குப்பக்க சுவற்றில் நீங்கள் மாட்டும் கடிகாரம், பிரவுன் கலர் அதாவது மரச்சாமான்களின் வண்ணத்தில் இருந்தால் மிகவும் நல்லது. வீட்டில் இடம் இருக்கிறது என்பதற்காக எல்லா இடங்களிலும் கடிகாரங்களை மாட்டி வைக்கக்கூடாது..

ஒருவேளை நீங்கள் வடக்கு நோக்கிய சுவரில் ஒரு கடிகாரத்தை மாட்டினால் அந்தச் சுவருக்கு நீலம் அல்லது வானம் நீல வண்ணம் பூசலாம். ஏனென்றால், அந்த திசை நீர் திசையை குறிக்கிறது.. அங்கு கடிகாரத்தை மாட்டி வைக்கும்போது, நேர்மறை ஆற்றல் பெருகும்..

படுக்கையறையில் சுவர் கடிகாரத்தை மாட்டக்கூடாது என்பார்கள்.. அப்படியே மாட்டி வைக்க வேண்டிய தேவை இருந்தால், வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மட்டுமே நிறுவ வேண்டும்.


No comments:

Post a Comment