குளியலறையில் பக்கெட்டை இப்படி திருப்பி வைங்க.. பாத்ரூமில் இந்த பொருள் இருந்தாலே பணக்கஷ்டம் வராத
சென்னை: நம்முடைய வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை சரியான வகையில், சரியான திசையில் வைத்திருந்தாலே, குடும்பத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்க்கலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். பூஜையறை, சமையலறை, படுக்கையறை, கழிவறைகள் என ஒவ்வொரு அறைகளுக்கும் ஒவ்வொரு வாஸ்து சொல்லப்பட்டுள்ளது. அந்தவகையில், குளியலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் நிறம் குறித்தும் வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.
எப்போதுமே கழிப்பறை இருக்கையானது, மேற்கு அல்லது வடமேற்கில் இருக்க வேண்டும்... குளியலறையும் வீட்டின் வடக்கு அல்லது வடமேற்கு மூலையில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் குளியலறையை அமைக்க கூடாது.. அதாவது, சமையலறைக்கு எதிரே அல்லது அதற்கு அடுத்ததாக குளியலறை வரக்கூடாது..
. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்"
பாத்ரூமில், ஸ்விட்ச் போர்டு, கீசர், எக்ஸாஸ்டிங் ஃபேன் போன்ற மின்சாதன பொருட்களை தென்கிழக்கு திசையில் வைக்கலாம்.
குளியலறை எப்படி பராமரிக்க வேண்டும்
குளியலறையை சிலர் வாரத்திற்கு ஒருநாள், 2 நாள் கழுவிவிடுவார்கள்.. அப்படி இருக்கக்கூடாது.. தினமும் பாத்ரூமை கழுவிவிடுவதால், பணத்தட்டுப்பாடு வீட்டிற்குள் ஏற்படாமல் இருக்கும்.
கழிவுகள் குளியலறையில் சேராமல் இருந்தாலே குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் தழைக்கும்.. அதேபோல குளியலறை சுவர்களும், டைல்ஸ்களும், நீல நிறத்தில் இருப்பது சிறப்பு வாய்ந்தது.
நீலநிறம், பச்சை கலர் நல்லது
பாத்ரூமில் பக்கெட்டுகள், மக்குகளையும் நீலநிறத்தில் உபயோகிப்பது நல்லது. அல்லது பச்சை நிற வாளிகள், மக்குகளை பயன்படுத்தலாம். டைல்ஸ்களையும் பச்சை நிறத்தில் பதிக்கலாம். ஆனால், கருப்பு நிறத்தை மட்டும் குளியலறைக்குள் எந்த ரூபத்திலும் பயன்படுத்தக்கூடாது என்பார்கள்.
பக்கெட், வாளிகளை காலியாக வைத்திருக்காமல் நீர் நிறைந்திருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. ஒருவேளை குழாயில் தண்ணீர் வராத சூழலில் பக்கெட்டுகளை கவிழ்த்து வைக்கலாம்.. எப்போதும் பாத்ரூம் கதவுக்கு முன்னால் கண்ணாடியை வைக்கக் கூடாது.. வடக்கு அல்லது கிழக்கு சுவரில் கண்ணாடியை பொருத்துவது நல்லது..
குளியலறையின் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும்.. ஒருசிலர் காற்றோட்டத்துக்காக திறந்து வைப்பார்கள்.. குளியலறையின் கதவு திறந்திருந்தால், நெகட்டிவ் எனர்ஜி வீட்டிற்குள் ஊடுருவிவிடும்.. எனவே குளியலறை ஜன்னல்களை திறந்துவைத்துவிட்டு, கதவினை மூடி வைத்திருக்க வேண்டும்.
தோஷம் தரும் செயல்கள்
இந்நிலையில், போபாலை சேர்ந்த ஜோதிடர் வாஸ்து ஆலோசகர் பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில் குளியலறை தொடர்பான சில வாஸ்து குறிப்புகளைப் பற்றியும் விரிவாகவே கூறியிருந்தார். அதன் சுருக்கம்தான் இது:
"குளியலறை எப்போதுமே ஈரமாக வைத்திருக்கக்கூடாது.. அப்படியிருந்தால் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுத்துவிடும்.. இது நிதி நெருக்கடியில் கொண்டுவந்து விட்டுவிடும்.. எனவே, வாஸ்து தோஷத்தை குறைக்க வேண்டுமானால், பாத்ரூமை பயன்படுத்திய பிறகு, நன்றாக உலர விட வேண்டும்.. இதனால் வாஸ்து தோஷம் ஏற்படாது..
குளியலறை, கழிப்பறை
இதேபோல, வீட்டில் இடத்தை மிச்சப்படுத்த ஒரே இடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை கட்டினால், அதுவும் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுத்துவிடும்.. இது உங்கள் வாழ்க்கையில் உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.. ஒருவேளை, ஒரே இடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை இருக்க வேண்டுமானால், இரண்டிற்கும் இடையே ஸ்கிரீன் போல போட்டுவிட வேண்டும்.
எப்போதுமே குளியலறையில் படிகாரம் வைப்பது நல்லது.. காரணம், குளியலறை தொடர்பான வாஸ்து தோஷத்தை இந்த படிகாரம் நீக்கும்.. அதேபோல, பூச்சிகளின் தாக்கத்தை குறைக்கவும், குளியலறையில் படிகாரத்தை வைக்கலாம். ஆனால், படிகாரத்தை யாரும் பார்க்காத இடத்தில் வைக்க வேண்டும்.
பயன்தரும் படிகாரம்
இந்த படிகாரத்தை வீட்டில் வைப்பதினால் வாஸ்து தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறைவதுடன் மகிழ்ச்சியும், அமைதியுடன் செல்வமும் அதிகரிக்கும்..
கழிவறையில் மட்டுமல்ல, தூங்குவதற்கு முன்பு, ஒரு சிறிய கருப்பு துணியில் படிகாரத்தை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் எதுவும் நெருங்காது
பயமில்லாமல் நிம்மதியாகவும் தூங்க முடியும். வீட்டில் துடைக்க பயன்படுத்தும் நீரிலும், குளிக்கும் நீரிலும் படிகாரத்தை சேர்க்கலாம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
This comment has been removed by the author.
ReplyDelete