jaga flash news

Saturday, 29 September 2012

திருமணம் தடை


திருமணம் நட்சத்திரம்
ரோகிணி,மிருகசிரீடம்,மகம்,ஹஸ்தம்,ரேவதி,அனுஷம்,மூலம்,சுவாதி,உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி இந்த நட்சத்திரம் வரும் நாளில் திருமணம் செய்தால்தான் உரிய காலத்தில் குழந்தை பிறப்பு,நீண்ட நாள் நிலைக்கும் மண வாழ்க்கை,இருவருக்கும் ஆயுள் விருத்தி,ஆரோக்கியம் உண்டாகும்
திருமணம் செய்யும் நேரத்தை லக்னத்தில்.......... இருந்தால்
திருமணம் செய்யும் நேரத்தை ஜாதகமாக கணித்து அதில் லக்னத்தில் சுரியன்,சந்திரன் இருந்தால் பெண்ணுக்கு ஆயுள் குறைவு..செவ்வாய் இருந்தால் இருவருக்கும் நாசம்.சனி இருந்தால் வறுமை....ராகு,கேது இருந்தால் குழந்தைகளால் நிம்மதி இன்மை...

புதன் இருந்தால் புகழ்,,,,
குரு இருந்தல் ஆயுள் விருத்தி
சுக்கிரன் இருந்தால் ஆயுள் விருத்தி,வசதி
திருமணம் செய்யும் நேரத்தை லக்னத்தில்
திருமணம் நடக்கும் நேரத்தை ஜாதகமாக கணித்து எதிர்கால பலன்களை அறியலாம்...திருமணத்திற்கு மேச லக்னம்,கடக லக்னம்,சிம்மம்,தனுசு, சிறப்பில்லை..கன்னி லக்னம்,மிதுன லக்னம், துலாம் லக்னம்,சிறப்பு...

மகரம்,கும்பம்,மீனம்,தனுசு இவை சந்தேக குணத்தாலோ அல்லது இருவரில் ஒருவர் யாருக்கும் சந்தேகம் வராதபடி,வேறொரு துணை தொடர்பால் வாழ்வார்கள் என காலப்பிரகாசிகை நுல் தெரிவிக்கிறது
திருமணம்
நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்
.
வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.

திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற


குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ


மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா


அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.

No comments:

Post a Comment