சாலமன் மற்றும் வெஜிடேபிள் சாலட்
சாலமன் என்பது ஒரு வகையான மீன். இதில் உடலுக்கு ஏற்ற பல வகையான நன்மைகள் இருக்கின்றன. ஆகவே டயட்டில் இருப்போர்கள் மதிய நேரத்தில் குறைவாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், வெஜிடேபிள் சாலட் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். ஏனெனில் இவற்றில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சத்துக்களான புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதிலும் சாலமன் மீனில் அதிகமான அளவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், இதனை சாப்பிட்டால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் கரைவதோடு, உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன.
ஆகவே சாலமன் மீனை வேக வைத்து ஏதேனும் காய்கறி அல்லது கீரையுடன் சேர்த்து, காரத்திற்கு மிளகுத்தூள், சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் சுத்தமான காய்கறிகளை மட்டும் சாலட் செய்து சாப்பிடலாம். இதில் கூட புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன.
டூனாவும் மற்றொரு வகையான மீன். இதில் அளவுக்கு அதிகமான அளவு புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் பிங்க் கலர் சதைகளை தான், அமெரிக்காவில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். மேலும் டூனாவில் ஒமேகா ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, கே, பொட்டாசியம் மற்றும் அயோடின் அதிகம் உள்ளது. அதிலும் இந்த மீன் இதயத்திற்கு, நரம்பு மண்டலத்திற்கு சிறந்தது மற்றும் கெட்ட எண்ணங்கள் தோன்றாமல் எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும்.
No comments:
Post a Comment