jaga flash news

Saturday, 29 September 2012

அப்பென்டிசிட்டிஸ் பிரச்னையா? ஆபரேஷன் இல்லாமல் தீர்வு: ஆய்வாளர்கள் அறிமுகம்

அப்பென்டிசிட்டிஸ் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக உள்ள நிலையில் மருந்து மூலம் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சுவீடன், கோதன்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜென்னட் ஹான்சன் தலைமையில் அப்பென்டிசிட்டிஸ் குறித்த ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து ஜென்னட் கூறியதாவது: பெருங்குடலின் கீழ் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறு டியூப் வடிவில் பை போன்ற அமைப்பே அப்பென்டிக்ஸ் எனப்படுகிறது. இதில் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வயிற்று வலி, வாந்தி ஏற்படும். உடனடியாக ஆபரேஷன் மூலம் இப்பகுதியை வெட்டி நீக்கினால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாகவும் முடியும். ஆனால், பலர் ஆபரேஷன் செய்து கொள்ள பயப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். அதற்கு பலனாக வலியில்லா நிரந்தர தீர்வுக்கு வழி காணப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொள்வதை காட்டிலும் ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் தீர்வு காணும் முறையை கண்டறிந்துள்ளோம். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பின்விளைவுகள், பக்க விளைவுகள் இருக்காது. பூரண குணம் உறுதியாகிறது. அறுவை சிகிச்சையை தாங்க முடியாதவர்கள் மற்றும் முதியோர்களுக்கு இம்முறை பெரிய வரப்பிரசாதம். வலியற்ற இந்த முறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. விரைவில் அறிமுகமாக உள்ளது. இவ்வாறு ஜென்னட் கூறினார்.

No comments:

Post a Comment