jaga flash news

Saturday, 22 September 2012

மூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க

மூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க
.

27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்திலும் பிறந்தவர்களுக்கு இல்லாத வகையில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தோஷங்கள் அதிகம் என்று சொல்வார்கள். பொதுவாக, மூல நட்சத்திரம் உள்ளவர்களால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் அவ்வளவு சிறப்பு ஏற்படாது.
மேலும் மூல நட்சத்திரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் அதிர்ஷ்ட வாய்ப்பை இழப்பார்கள். மூல நட்சத்திரக்காரர்கள் காலை வேளையில் பிறந்தால் அவர்களுடன் பழகுபவர்களுக்கு கஷ்டம் வரலாம்.
மாலை வேளையில் பிறந்தால் அவரின் தாய் பிறந்த வீட்டிற்குக் கஷ்டம் வரும். இதுபோன்ற தோஷங்கள் இருப்பதால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திருமணம் ஒரு தடையாக மாறி விடுகிறது. பரிகாரம் வாயிலாக மேற்கண்ட தோஷத்தைச் சரி செய்யலாம் என்று அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள்.
பரிகாரங்கள் விவரம் வருமாறு:-
1. சிவன் கோவில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் உள்ள மண் ஒரு கைப்பிடி.
2. யானை மிதித்த இடத்து மண் ஒரு கைப்பிடி.
3. பசுவின் கால் பட்ட இடத்து மண் ஒருகைப்பிடி.
4. புற்று மண் ஒரு கைப்பிடி.
5. வயல்வெளியில் உள்ள நண்டு வளையின் புற்றுமண் ஒருகைப்பிடி.
6. கண்மாயில் உள்ள மண் ஒரு கைப்பிடி.
7. கடற்கரை மண் ஒரு கைப்பிடி.
மேற்கண்ட ஏழு வகையான மண்ணை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். மூல நட்சத்திரத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மேற்படி மண்ணை உடல் முழுக்கத் தடவி 45 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகி பரிகாரம் செய்த 90 நாட்களுக்குள் திருமணம் சுபமாக நடக்கும்.

1 comment:

  1. intha parikaram kalyana vathukku ullavarkalukku mattuma illai kulanthaikalukku seithal sila pathippukal kuraiuma

    ReplyDelete