குரு பலம் ! இருந்தால் மட்டும் தான் திருமணம் அமையுமா
கேள்வி :
பாரம்பரிய ஜோதிடத்தில் ஒருவரது சுய ஜாதகத்தில் , சந்திர ராசியில் இருந்து குரு பகவான் கோட்சார ரீதியாக 2 , 5 , 7 , 9 , 11 ராசிகளில் , சஞ்சாரம் செய்யும் பொழுது மட்டும் குரு பலம் இருக்கும் அந்த காலங்களில் மட்டும் திருமணம் நடக்கும், அப்படி நடந்தால் ஜாதகருக்கு யோகமான வாழ்க்கை அமையும் என்ற கருத்து நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது இது உண்மையா ?
இதை தவிர குரு பகவான் கோட்சார ரீதியாக சந்திர ராசிக்கு மற்ற இடங்களில் இருக்கும் பொழுது திருமணம் செய்தால் அதிக கஷ்டம் வரும் , திருமண வாழ்க்கை நிலைக்காது , கணவன் மனைவி ஒற்றுமை இருக்காது என்பதெல்லாம் உண்மைய தங்களின் விளக்கம் தேவை ?
பதில் :
இது முற்றிலும் தவறான கருத்து , மற்றும் பொதுவான கருத்து,
காரணம் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு திசை , புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவை நன்றாக இருக்கும், களத்திர வீட்டு பலனையோ அல்லது களத்திர வீட்டுக்கு கோட்சார கிரகங்கள் 100 சதவிகித நன்மையோ தந்து நடத்துமாயின் அந்த காலங்களே, ஜாதகருக்கு திருமணத்திற்கு மிக சிறந்த யோக காலமாக இருக்க முடியும்.
மேலும் திருமண வாழ்விற்கும் குரு பகவானுக்கும் சம்பந்த ஏற்ப்பட ஒன்று குரு பகவான் களத்திர ஸ்தான அதிபதியாக இருந்தால் மட்டுமே களத்திர பாவத்திற்கு நன்மை தீமையான பலனை தர இயலும் .
குரு பகவானுக்கும் , திருமண வாழ்க்கைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை மற்ற கிரகங்கள் போல் அவர் ஒரு கிரகம் மட்டுமே , மிதுன, கன்னி இலக்கண ஜாதகருக்கு உண்மையில் குருபகவான், தனது வீட்டுக்கு மறைவு நிலை பெரும் பொழுதே மிக சிறந்த இல்லற வாழ்க்கை அமையும் என்பது சம்பந்தபட்ட இலக்கணத்தை சேர்ந்தவர்களின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொண்டு பார்த்தால் நிச்சயம் புரியும் .
ஜாதகர் எந்த லக்கினம் ஆனாலும் , அந்த லக்கினத்திற்கு களத்திர பாவக வீட்டுக்கு உண்டான பலன் நடப்பு திசைகளில் நடைபெறுமாயின் நிச்சயம் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் இதில் சந்தேகமே இல்லை .
ஒருவேளை நடப்பு திசை களத்திற வீட்டுக்கு உண்டான பலனை நடத்தாமலோ , அல்லது களத்திர வீட்டுக்குண்டான பலனை தீமையான அமைப்பில் நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது
, சந்திர ராசியில் இருந்து குரு பகவான் கோட்சார ரீதியாக
2 , 5 , 7 , 9 , 11 ராசிகளில் , சஞ்சாரம் செய்கிறார் என்று திருமண வாழ்க்கையை அமைத்துகொண்டால் நிச்சயம் இல்லற வாழ்க்கை
100 சதவிகிதம் பாதிக்க பட வாய்ப்பு அதிகம் .
குரு பகவான் கோட்சார ரீதியாக 2 , 5 , 7 , 9 , 11 ராசிகளில் இல்லாமல், சுய ஜாதக அமைப்பில்களத்திர வீடு 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் பொழுது திருமண வாழ்க்கை அமையுமாயின் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே இருக்கும் இதில் சந்தேகமே இல்லை .
ஒரு ஜாதக அமைப்பில் திருமணம் யோகத்தை,
இலக்கணத்தையும் களத்திர வீட்டையும் அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டுமோ தவிர சந்திரன் இருக்கும், ராசியை வைத்து அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்வது நலம்.
ஒரு ஜாதகத்தில் லக்கினமே 100 சதவிகித நன்மை தீமை பலனை நிர்ணயம் செய்கிறது , சந்திரனுக்கு இதில் ௧ சதவிகிதம் கூட சம்பந்தம் இல்லவே இல்லை என்பதே சரியானது , உண்மையானது
அய்யா.. வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அடியேன் சிவ ஜான்ஸி கண்ணனின் ஒரு கேள்வி...
ReplyDeleteமகப்பேறு பாக்கியத்தையும், மணவாழ்க்கையையும் அமைத்துத் தருபவர் குரு. என தங்கள் பதிவின் மூலம் கற்றுக் கொண்டவை. ஆனால், குரு 5−ஆம் பாவத்தில் அமர்ந்தால் , புத்திர பாக்கியமில்லை என்று கூறுகிறார்கள். இக்கேள்விக்கான தங்களின் கருத்தை அடியேனது வாட்ஸ்அப் (91 9994704606) மூலம் தெரிவியுங்கள் அய்யா.
முதன் முதலாக, தங்களிடம் சந்தேகம் கேட்டுள்ளேன். அவசியம் பதில் தெரிவிப்பீர்களா அய்யா..!
Delete