jaga flash news

Monday 24 September 2012

இறைவனை வணங்கும் முறைத் தெரியுமா???

இறைவனை வணங்கும் முறைத் தெரியுமா???


இறைவனை வணங்கும்போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கும் வகையில் வணங்கக்கூடாது. கைகளை தாமரை மொட்டுப் போல் குவித்து வைத்தே வணங்க வேண்டும். அப்போது விக்ரகத்திலிருந்து ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அவை பஞ்சபூத சக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேகமாகப் பரவும். அப்போது புத்துணர்ச்சி ஏற்படும்.பூமி சக்தி சுண்டு விரல் மூலமாகவும், தண்ணீர் சக்தி மோதிர விரல் மூலமாகவும், அக்னி சக்தி நடுவிரல் மூலமாகவும், வாயு சக்தி ஆட்காட்டி விரல் மூலமாகவும், ஆகாய சக்தி பெருவிரல் மூலமாகவும் நம்மை வந்தடைகிறது. இத்தகைய புத்துணர்ச்சியுடன் செய்யும் செயல்கள் வெற்றி பெறும் என்றும்; இதுவே இறையருள் என்றும் நம் முன்னோர்கள் சொல்லி  வைத்தார்கள்

1 comment: