jaga flash news

Monday 15 April 2013

தங்கத்தின் விலை 20% சரிவு.. இப்போது வாங்காலமா?


தங்கத்தின் விலை 20% சரிவு.. இப்போது வாங்காலமா?


Should You Buy Gold After The 20 Fall
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தற்போது 20% குறைந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் மிக உச்சியில் இருந்த தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.11% குறைந்திருக்கிறது.
உலகச் சந்தையினைத் தொடர்ந்து இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
தற்போது இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.28,000க்கு குறைந்திருக்கிறது. மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தங்கம் வாங்கலாமா?
உலக சந்தையில் தங்கத்தின் விலைக் குறையும் போது, இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என்பதை, இந்தியாவில் தங்கம் வாங்குபவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலக அளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என்றால் அதற்கு காரணம் அமெரிக்காவில் இருக்கும் முதலீட்டாளர்கள் ஆவர். தற்போது அமெரிக்காவில், பங்கு வர்த்தகத்தில் அதிகம் பேர் முதலீடு செய்வதால், தங்கத்தில் அவர்கள் செய்யும் முதலீடு மிக வெகுவாக குறைந்து வருகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெகிழ்வு தன்மையின் காரணமாக, பலரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதனால் தங்கத்தின் மீது பலருக்கும் இருந்த மோகம் தற்போது படிப்படியாகக் குறைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் அமெரிக்காவில் தங்கத்தில் முதலீடு செய்து வந்தவர்களில், பலர் தங்கத்தை விட்டுவிட்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கின்றனர். அதனால் தங்கத்தின் எதிர்காலம் சற்று மங்கலாக இருக்கும் என்றே தெரிகிறது.
மேலும் மில்லியன் கணக்கான முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு பாதுகாப்பு எல்லை என்று நினைக்கின்றனர். அதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சிறிது காலம் காத்திருக்கலாம். ஆனாலும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர இன்னும் போராடி வருகின்றன. குறிப்பாக சைப்ரஸ் நாடு தனது பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர, அந்த நாட்டிற்கு அளவுக்கதிகமான அளவு பணம் தேவைப்படுகிறது.
அதோடு கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும், பொருளாதார சரிவிலிருந்து மீள போராடி வருகின்றன. மேலும் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தம், வரும் காலங்களில் அமெரிக்காவை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று நம்பப்படுகிறது. அதனால் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் வட கொரிய பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால் இன்னும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே இன்னும் சிறிது காலம் கழித்து அதாவது தங்கத்தின் விலை இன்னும் சற்று குறைந்த பிறகு, தங்கத்தை வாங்குவது சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

No comments:

Post a Comment