jaga flash news

Wednesday 24 April 2013

சனீஸ்வரர் வழிபாடு

சனீஸ்வரர் வழிபாடு பெருகி வருகிறது. அவர் பயமுறுத்தும் கடவுள் அல்ல. நியாயஸ்தர்; தவறு செய்வோரை மட்டுமே தண்டிப்பார். அவருக்கு சூடம் ஏற்ற வேண்டாம், எள்ளையும், எண்ணெயையும் ஊற்றி காக்கா மீதிருக்கும் அவரையே காக்கா' பிடிக்க முயல வேண்டாம். அர்ச்சனை செய்வதன் மூலம் உங்கள் குறையைச் சொல்ல வேண்டாம். உண்டியல் போட்டு அவரைச் சரிக்கட்ட முயல வேண்டாம். உங்கள் குறையை நீங்களே அவரிடம் சொல்லுங்கள். அவர் குறை தீர்ப்பார்,"
சனீஸ்வரருக்கு ஒரு கால் ஊனம் என்பது அறிந்த விஷயம். தனக்கு கிடைக்காத சாகாவரம் தனக்கு பிறக்கப்போகும் மகன் இந்திரஜித்திற்காவது கிடைக்க வேண்டும் என ராவணன் விரும்புகிறான். இதற்காக கடும் தவம் செய்கிறான். தேவர்கள் கவலை கொள்கின்றனர். கிரகங்களெல்லாம் ராவணனுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றன. இந்நிலையில், சனியின் பார்வை குழந்தையின் மீது பட வழியே இல்லாமல் போகிறது. நாரதர் சனீஸ்வரனிடம், "எப்பாடு பட்டேனும் குழந்தையை ஒருமுறை பார்த்து விடு," என்கிறார். அதன்படி, குழந்தை பிறக்கவும் சனீஸ்வரன் பார்த்து விடுகிறார். பாடுபட்டு செய்த தவம் வீணாகி விட்டதே என்ற ஆத்திரத்தில் சனியின் காலில் அடித்து ஒடித்தான் ராவணன். இதன்பிறகு சனி நொண்டிக் கொண்டே நடக்க வேண்டியதாயிற்று. அவரது கால் கட்டையானது என்றும் சொல்வர். இதன்படி சனீஸ்வரரின் ஒரு கால் காக வாகனத்தில் இருப்பது போல சிலை வடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment