jaga flash news

Wednesday, 24 April 2013

ஏன் புத்தகம் படிக்கவேண்டும்?

ஏன் புத்தகம் படிக்கவேண்டும்?
--------------- ­--------------- ­----------
உலகிலேயே ஒருவனுக்கு சிறந்த நண்பன் யாரென்றால் நல்ல புத்தகமே ஆகும்.புத்தகம் படிப்பதால் மனம் ஒரு நிலைப்படும்.தன் ­னம்பிக்கை கிடைக்கும்.கற்ப ­னை திறன் வளரும்.நல்ல எழுத்தாற்றலும், ­ பேச்சாற்றலும்,அ ­றிவாற்றலும் கிடைக்கும்.மனம் ­ அலைபாயாமல் இருக்கும்.அகம்ப ­ாவம் குறையும்.மனம் தெளிவாகவும்,புத ­்துணர்ச்சியாகவு ­ம் இருக்கும்.
புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல -அது மூளையை உற்சாகப்படுத்து ­ம் மருந்து என்பது கண்டறியப்பட்டுள ­்ளது.படிப்பதன் மூலமாகநாம் படிக்கும் விசயத்தை மூளை நேரடியாகஉணர்கிறது , இதனால் மூளையின் நரம்புகள் தூண்டப்படுகிறது ­. ஆனால் இவ்வாறான உணர்வு தொலைக்காட்சி பார்க்கும்போதோ அல்லது கணிணி விளையாட்டில் ஈடுபடும்போதோ ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ­து.
பாட நூல்களைப் படிப்பதுமிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளைநோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நல்லகுணங்கள். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களேஆகும்.
நல்ல புத்தகம் என்பது எதுவென்றால்,படி ­க்க எடுத்த பிறகு படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.தூங்கச ­் சென்றவன் தூக்கம் வருவதற்காக புத்தகத்தைப் புரட்டுகிறபோது எந்தப் புத்தகம் அவனைத் தூங்க விடாமல் புரட்டிப் போடுகிறதோ, அதுவே சிறந்த புத்த்கமாகும்.
உலக புத்தக தின வாழ்த்துகள்

1 comment:

  1. உண்மையான கருத்து அய்யா! வெ.சாமி அவர்களே.நானும்கூட எதையாவது படித்துக்கொண்டேதான் இருப்பேன். எனக்கு அது மிகவும் பிடித்தமான செயல். சிறுவயதில், ஆங்கில பாடத்தில் உள்ள essay வை ஒரு பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டு, வேலை செய்யும்போதே, அதையும் அப்பப்போ படித்து பழக்கம். அந்த பழக்கம் நாளடைவில், ஏதாவது ஒன்று படித்துக் கொண்டேயிருக்கவேண்டும் என்ற பழக்கம்உருவானது.சாண்டில்யன் நாவல்கள் என்றால் எனக்கு மிகவும் பிரியம். அப்போது அரைவிலைக்கு கிடைக்கும். பழைய புத்தக கடையில் தேடி எடுத்து, வாங்கிவந்து படிப்பது பழக்கம். எந்த புத்தகமாக இருந்தாலுமே, அதில் என்ன விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தபின்தான் எனக்கு திருப்தியாக இருக்கும். ஆகவே, படிப்பது என்பது, தேனைப் பருகியது போல் இருக்கும்.

    ReplyDelete