jaga flash news

Wednesday, 3 April 2013

பிபிஎஃப் கணக்கு துவங்குவது எப்படி?


ஐசிஐசிஐ வங்கியில் ஆன்லைன் மூலம் பிபிஎஃப் கணக்கு துவங்குவது எப்படி?


How Open Online Ppf Account Icici Bank
சென்னை: பிபிஎஃப் (பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட், பொது வருங்கால வைப்பு நிதி) கணக்கைக் கையாள ஐசிஐசிஐ வங்கிக்கு இந்திய நிதித் துறை அதிகாரம் வழங்கியிருக்கிறது. எனவே பிபிஎஃப் கணக்கை ஐசிஐசிஐ வங்கியில் மிக எளிதாக தொடங்க முடியும்.
தற்போது வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை நெட் பேங்கிங் மூலம் செய்வதையே பலரும் விரும்புகின்றனர். பிபிஎஃப் கணக்கை கையாள மற்றும் பிபிஎஃப் கணக்கின் நிலவரத்தை தெரிந்து கொள்ள ஐசிஐசிஐ வங்கியின் நெட் பேங்கிங் சேவை வழி செய்கிறது.
ஆனால் பிபிஎஃப் கணக்கை புதிதாக தொடங்கும் போது ஐசிஐசிஐ வங்கிக்கு நேரடியாக சென்று தேவையான சான்றுகளை அளிக்க வேண்டும். கணக்கு தொடங்கப்பட்டபின் ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த பிபிஎஃப் கணக்கை ஐசிஐசிஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டுமே தொடங்க முடியும். இந்த கணக்கைத் தொடங்குவதற்கு முன் ஏற்கனவே ஐசிஐசியை வங்கியில் நமக்கு கணக்கு இருக்க வேண்டும்.
பிபிஎஃப் கணக்கைத் தொடங்க தேவையான சான்றுகள்
5 வருடங்களுக்கும் மேலாக ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு:
1. படிவம் எ
2. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
3. பான் கார்டு நகல்
4. இருப்பிடச் சான்று - பாஸ்போர்ட்/மின் கட்டண ரசீது
இந்த புதிய பிபிஎஃப் கணக்கில் ஒரு ஆண்டுக்கு குறைந்த அளவாக ரூ.500 செலுத்தலாம். அதிகபட்சமாக ரூ.100,000 செலுத்தலாம்.
பழைய பிபிஎஃப் கணக்கை ஐசிஐசிஐ வங்கிக்கு எவ்வாறு மாற்றுவது?
மத்திய அரசின் பிபிஎஃப் திட்டத்தின்படி ஒருவர் தனது பிபிஎஃப் கணக்கை வங்கி அல்லது அஞ்சலகத்திலிருந்து வேறொரு வங்கி அல்லது அஞ்சலகத்திற்கு எளிதாக மாற்றலாம். அவ்வாறு மாற்றும் பட்சத்தில் அந்த பிபிஎஃப் கணக்கு தொடர் கணக்காக கருதப்படுகிறது. அதை புதிய கணக்காக கருத முடியாது. எனவே பழைய பிபிஎஃப் கணக்கை ஐசிஐசிஐ வங்கிக்கு மாற்ற வேண்டும் என்றால் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
எந்த வங்கி அல்லது அஞ்சலகத்தில் ஒருவருடைய பிபிஎப் கணக்கு இருக்கிறதோ அங்கு சென்று, தான் ஐசிஐசிஐ வங்கிக்கு தனது பிபிஎஃப் கணக்கை மாற்ற விரும்புவதாகக் கூறி அவர் விண்ணப்பிக்க வேண்டும்.
அவர் கொடுத்த விண்ணப்பத்தின் மீது அந்த வங்கியோ அல்லது அஞ்சலகமோ நடவடிக்கை எடுக்கத் தொடங்கியவுடன், அந்த வங்கியோ அல்லது அஞ்சலகமோ, அவர் அளித்த ஐசிஐசிஐ வங்கியின் கிளைக்கு அவருடைய கணக்கிற்கான உண்மையான சான்றிதழ்களை அனுப்ப வேண்டும். அதாவது அவருடைய பிபிஎஃப் கணக்கு, கணக்கைத் தொடங்குவதற்கான விண்ணப்பப் படிவம், நாமினி படிவம், மற்றும் மாதிரி கையொப்பம் ஆகியவற்றோடு செக் அல்லது டிடி ஆகியவற்றை சேர்த்து அனுப்ப வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி செய்ய வேண்டியது
மேற்சொன்ன சான்றிதழ்களை ஐசிஐசிஐ வங்கி பெற்றவுடன், பிபிஎஃப் கணக்கை மாற்றுபவர், புதிய பிபிஎஃப் கணக்கைத் தொடங்கும் விண்ணப்பப் படிவம் (படிவம் எ), நாமினேஷன் படிவம் (படிவம் இ/ படிவம் எப் - ஒரு வேளை நாமினியில் மாற்றும் இருந்தால்) மற்றும் பழைய பாஸ்புக் ஆகியவற்றை வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதோடு புதிய கேஒய்சி ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். இவை அனைத்தையும் ஐசிஐசிஐ வங்கி அவரிடமிருந்து பெற வேண்டும்.
பிபிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுத்தல்
பிபிஎஃப் கணக்கில் இருந்து ஒருவர் பணத்தை எடுக்க வேண்டுமானால், அவர் கணக்குத் தொடங்கிய 5 ஆண்டுகள் கழித்து அதாவது 5வது நிதியாண்டு முடிந்த பின்பு எப்போது வேண்டுமானாலும் எடுக்க முடியும். ஆனால் 5 ஆண்டுகள் கழித்து அவர் ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.
பாஸ்புக் வழங்கப்பட மாட்டாது
ஐசிஐசிஐ வங்கி பிபிஎஃப் கணக்கை நெட் பேங்கிங் மூலம் கையாள்வதால், வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் வழங்கப்பட மாட்டாது.
எனினும் ஒருவருக்கு பாஸ்புக் தேவைப்பட்டால் ஐசிஐசிஐ வங்கிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர் கைப்பட எழுதிய விண்ணப்பத்தை வங்கிக்கு அனுப்ப வேண்டும்.
பிபிஎஃப் கணக்கின் நன்மைகள்
1. கவர்ச்சிகரமான வட்டி விகிதம்
2. அவ்வாறு பெறும் வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை
3. நீண்ட கால முதலீடு (15 ஆண்டுகள்)
4. குறைவான தொகை (ரூ.500)

No comments:

Post a Comment