jaga flash news

Thursday 18 April 2013

டாக்டர் ராதாகிருஷ்ணன்


டாக்டர் ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5, 1888-ல் திருத்தணியில் பிறந்தார். அப்பா, வீராசாமி. அம்மா, சித்தம்மா. இவரது தாய்மொழி தெலுங்கு. மிகவும் வறுமையான குடும்பம். கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம்உந்தித்தள்ளியது ­. புத்தகம் வாங்கப் பணம் இல்லாமல், இவரின் உறவுக்காரர் பயன்படுத்திய புத்தகங்களை இரவல் பெற்றுப் படித்தார்.
வேலூர் ஊரிசு கல்லூரியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றார். பேராசிரியர்ஏ.ஜி.ஹெக்கின் வழிகாட்டுதலின்ப ­டி சிறப்பாகப் படிப்பை முடித்தவர், தன்னுடைய எம்.ஏ. தத்துவப் பாடத்தின் புராஜெக்ட்டை புத்தகமாக வெளியிட்டார். இதன் மூலம் தத்துவவாதிகள் உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 20.
சிவகாமு அம்மா எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ­ ஒரு சமயம் வறுமை தாங்க முடியாமல், கல்லூரியில்தான் பெற்ற பதக்கங்களை அடகுவைத்து செலவுகளைச் சமாளித்து இருக்கிறார்.
சில ஆண்டுகள் கழித்து, மைசூர் பல்கலைக்கழகத்தி ­ல் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் எனப் பெயர் பெற்றார்.
1931-ல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தி ­ன் துணைவேந்தர் பதவியில் நியமிக்கப்பட்டா ­ர். 1939-ல் உ.பி.யில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தி ­ன் துணைவேந்தர் ஆனார். பல்கலைக்கழக மாணவர்கள் ‘வெள்ளையனே நீ’ இயக்கத்தில் ஈடுபட்டதால், கவர்னர் மாரிஸ் ஹல்லேட் பல்கலைக்கழகத்தை ­ப் போர் மருத்துவமனையாக மாற்ற முயற்சித்தார். ராதாகிருஷ்ணன், வைஸ்ராயைச் சந்தித்து அதனைத் தடுத்தார். பின்னர், அரசு நிதி உதவிதராது என அறிவித்ததும் தெருத்தெருவாகச் ­ சென்று நிதி திரட்டி, பல்கலைக்கழகத்தை ­த் தொடர்ந்து நடத்தினார்.
ஆங்கிலேய அரசாங்கம் வழங்கிய சர் பட்டத்தைத்துறந்தார். தன்னை முனைவர் என்று அழைத்தாலே போதும் எனப் பெருமிதத்தோடு சொன்னார். விடுதலை பெறுவதற்கு முன்னரே யுனெஸ்கோவுக்கான ­ இந்தியப் பிரதிநிதி ஆனார். இந்தியா விடுதலை பெற்றதும் கல்வி ஆணையத்தலைவர் ஆனார். கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பல்வேறு யோசனைகளை இவரின் குழு வழங்கியது.
1952-ல் இருந்து இரண்டு முறை துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டா ­ர். 1962-ல் ஜனாதிபதி ஆனார். அப்போது தனது சம்பளமான 10,000 ரூபாயில் 2,500 ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டு மீதியைப் பிரதமரின் நிவாரண நிதிக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
ஜனாதிபதி ஆனதும் இவரைச்சந்தித்த இவருடைய மாணவர்கள் சிலர், இவரது பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். ‘என்னுடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் மகிழ்வேன்’ என்றார். அதன்படி, 1962-ல் உதயமானது ஆசிரியர் தினம். செப்டம்பர் 5, 2012… ஆசிரியர் தினத்துக்கு இது பொன் விழா ஆண்டு.
இவருக்கும் அப்துல் கலாமுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் ஆசிரியர்களாக இருந்து குடியரசுத் தலைவர் அரியணையில் ஏறியவர்கள். எந்த அரசியல் கட்சியையும் சாராமல், அனைத்துத் தரப்பினராலும் குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ளப்ப ­ட்டவர்கள்.
1954-ல் பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பாரதரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார ­். ஏப்ரல் 17, 1975 அன்று ராதாகிருஷ்ணன் மறைந்தார்.
இன்று - ஏப்.17: டாக்டர்ராதாகிருஷ்ணன் நினைவு தினம்.

No comments:

Post a Comment