jaga flash news

Friday 26 December 2014

லக்கினம், ஏழாம் இடம் சில பொதுவான விதிகள்



லக்கினம், ஏழாம் இடம் சில பொதுவான விதிகள்
சனி ஏழாம் வீட்டில்...............
* ஒருவர் ஜாதகத்தில் சனி ஏழாம் வீட்டில் இருந்து அந்த ஏழாம் வீடு மகரமாகவோ அல்லது கும்பமாகவோ அல்லது துலாமாகவோ இல்லாமல் இருந்து , ஏழாம் வீட்டுக்கு சுப கிரகத்தின் பார்வை இல்லாமல் இருந்தால் அந்த மனிதன் விகாரமாக தோற்றம் அளிப்பான். மேலும் அருவருக்க தக்க காரியம் செய்வான். அந்த மனிதனுக்கு திருமணமே தாமதமாக தான் ஆகும். சிலருக்கு வயோதிக பெண்ணுடன் தொடர்பு ஏற்படும். ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
*எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
*ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு.
அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
*சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
*ஏழில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் மனைவி அழகானவள், கவர்சிகுனம் இருக்கும், ஆடை அலங்கார விருப்பம் உள்ளவள், கலை ஆர்வம் இருக்கும், இன்பத்தை அதிகம் விரும்புவாள்,ஜாதகனுக்கு கட்டிடம், வாகனம் மூலம் பணம் கிட்டும், ஆடம்பர
தொழில் மூலம் செல்வம் கிட்டும்
* ஏழில் குரு நல்ல நிலையில் இருந்தால் மனைவி நல்ல குணம் கொண்டவள், தெய்வ நம்பிக்க உள்ளவள், பொறுப்புடன் நடப்பாள், போதனை குணம் இருக்கும்,மனைவியிடம் நிதி நிர்வாகம் இருக்கும் ஏழில் சந்திரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.ஏழில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் மனைவி அழகான முகம் கொண்டவள், சஞ்சல மனம் உடையவள், தாய்மை குணம் கொண்டவள். ஜாதகருக்கு தூர வணிகம் ஏற்படலாம், நீர்வழி லாபம்
கிட்டலாம், கொஞ்சம் காமத்தை, சபலத்தை சந்திரன் கொடுப்பார்இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.
* ஏழில் புதன் இருந்தால் மனைவி புத்திசாலி, தந்திரசாலி, இளமையான தோற்றம், கலகலப்பானவள், நகைசுவை குணம் கொண்டவள், வியாபார விருத்தி, எழுத்துத்துறை
மூலம் செல்வ சுகம் ஏற்படலாம்
*ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவி கலகம் செய்பவள், முன்கோபம் இருக்கும், ஆணவம்,நல்ல உடல், அகங்காரம் குணம் இருக்கும்,மனபினக்கு ஏற்படலாம், மனைவி
உடலில் வசியம் இருக்காது
*ஒரு ஆணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழில் இருந்தால் வரும் மனைவிக்கு கவர்சிகரமான மார்பு இருக்கும், குரு எடுப்பான மார்பை கொடுக்கும், சுக்கிரன் பெரிதான மார்பை கொடுக்கும் ,சனி நலிவடைந்த மார்பை கொடுக்கும்
*ஏழில் சூரியன் இருந்தால் மனைவி நிர்வாகம் திறமை,அதிகாரம்,கோபம்,குணம் கொண்டவள், புகழ் உடையவள்,இரக்ககுணம் கொண்டவள், தியாக மனப்பான்மை உள்ளவள்,
ஆனால் மன முறிவு, மறுமணம், வியாபார முடக்கம் ஆகலாம்,
*ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ
அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.
*ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7வது வீடு 8 வது வீடு இவற்றில் ஒன்றில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகிக்கு சூரியன் களத்திர தோஷத்தைத் தருகிறது.
*செவ்வாய் ,சனி ஏழில் இருந்தால் ,மனைவி பிற ஆடவரை விருப்பம் கொள்வாள், நற்கோள் பார்த்தல் அது நடக்காது .
*7ல்ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்து இருந்தால் – திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.
*திருமண வாழ்க்கையில் ராகு-கேதுவின்பங்கு மிக முக்கியமானதாகும்.
............................................................................................................................
ஜாதகத்தில் லக்னத்தில் ராகுஇருந்தால் ஏழில் கேது இருக்கும். இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், எட்டில் கேது இருக்கும். இந்த அமைப்பு ராகு-கேது
தோஷம் அல்லது சர்ப்ப தோஷம்என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள
ஜாதகங்களை அதேபோன்ற அமைப்புஉள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும். ஏழில் ராகு இருந்தால் மனைவி பொய் பேசுவாள், வஞ்சக குணம் இருக்கும், ரகசிய நடவடிக்கை இருக்கும், புதிரான திருமணமாக நடக்கும், வினோத காமம். ஏழில் ராகு அல்லது கேது இருந்தால் மனதில் தீய எண்ணம் ஏற்பட்டு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அதனால் பிரிவும் ஏற்படுகிறது. இது திருமணத்திற்க்கு முன்பு தான் பல தடைகளை ஏற்படுத்துகிறது.
*ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால்
மனைவிக்கு நோய் உண்டாகும்
**அடுத்தபடியாக லக்கினத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். லக்கினத்தில் கிரகங்கள் அமர்ந்துக்கொண்டு ஏழாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள் வைக்கும் ஆப்பு இருக்கிறதே இது எல்லாத்தையும் விட கொடுமை இந்த மனிதனை திருமண வாழ்க்கையில் ஏன் தான் கடவுள் இந்த அடி அடிக்கிறாறோ தெரியவில்லை.பொதுவாக லக்கினத்தில் தீயகிரகங்கள் அமர்ந்தால் தான் திருமண வாழ்க்கையில் பிரச்சினை அதிகம் ஏற்படுகின்றது.
*லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள
*லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக்
கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
*அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்தால் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.

No comments:

Post a Comment