jaga flash news

Thursday, 18 December 2014

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயுவான அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் தான் இவைகள்.
 
ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 
 
இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன.
 
நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது.
 
கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை.
 
மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்
 
வீட்டில் மரம், செடி, கொடிகளை அமைப்பதற்கும் வாஸ்து முறைகள் உள்ளன. 
 
ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்க வேண்டும்.
 
ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்ப்பது சிறப்பானது.
 
ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்கக்கூடாது.

No comments:

Post a Comment