jaga flash news

Friday, 19 December 2014

ஜோதிடத்தில் அறம்,பொருள்,இன்பம்,வீடு

1,5,9 இம்மூன்று வீடுகளும் தர்மதிரிகோண வீடுகளாகும். தர்மம் என்றால் அறம் என்று அர்த்தமாகும்.
2,6,10 இம் மூன்று வீடுகளும் அர்த்த திரிகோண வீடுகளாகும். இவ்வீடுகள் பொருள், செல்வத்தைக் குறிக்குமிடமாகும்.
3,7,11 இம்மூன்று காம திரிகோண வீடுகளாகும். இவ்வீடுகளைக் கொண்டு இன்பம், சிற்றின்பம் இவைகளைக் காணலாம்.
4,8,12 இம்மூன்று வீடுகளும் மோட்ச திரிகோண வீடுகளாகும். மோட்சம் என்பது வீடுபேற்றைக் குறிக்கும்.
இலக்கினத்திற்கு 12 ம் வீடு, இந்த பிறப்பின் வீடுபேற்றை (மோட்சம்) அறியுமிடமாகும்.
ஐந்தாமிடத்திற்கு 12ம் வீடு, அதாவது 4ம் வீடு, இனி வரப்போகும் பிறப்பிற்கு வீடுபேற்றை அறியுமிடமாகும்.
ஒன்தாமிடத்திற்கு 12 ம் வீடு, அதாவது 8ம் வீடு, போன பிறப்பிற்கான வீடுபேற்றை அறியுமிடமாகும்.

No comments:

Post a Comment