jaga flash news

Friday, 19 December 2014

ஏழாமிடத்தில்,சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன,குருசுக்கிரன,கேது,இராகு,சனி,

இலக்கினம் என்கிற “ஜாதகர்க்கு” ஏழாமிடம் ஜாதகரின் “மனைவியைக்” குறிக்கும் என்று முன்பே கண்டுள்ளோம்.
இந்த ஏழாமிடத்தில் சூரியன் இருந்தால், ஜாதகர் மணமுடிக்கும் பெண் ஆதிக்க உணர்வுள்ளவளாகவும், சுறுசுறுப்பு மிகுந்தவளாகவும், பிடிவாதம் மிக்கவளாகவும் இருப்பாள்.
இலக்கினத்துக்கு ஏழில் சந்திரன் இருக்க வரக்கூடிய வாழ்க்கைத்துணை எப்படியிருக்கும் என்றால், இரண்டு வகையான நிலைகொண்ட கிரகமான சந்திரன் வளர்பிறையில் நல்ல கிரகமாகவும், தேய்பிறையில் பாவத்தன்மைக் கொண்ட கிரகமாகவும் இருக்கிறார். அதனால், ஜாதகரின் வாழ்க்கை முறையும் மனக்குழப்பமும், சஞ்சலமும் உள்ளவராய் இருப்பார். உடனே அதிலிருந்து தெளிவும் அடைவார். இவர்க்கு அடிக்கடி எண்ணங்கள் அலைமோதிக் கொண்டே இருக்கும்.
ஏழாமிடத்தினில் செவ்வாய் இருக்க, வாய்க்கும் வாழ்க்கைத் துணை அவசரப்படுபவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும், கோபப் படுபவராகவும் இருப்பார்.
ஏழினில் புதனிருக்க வாய்க்கும் வாழ்க்கைத்துணை அதீத புத்திசாலியாகவும், எல்லாம் தனக்குத் தெரியும் என்கிற இறுமாப்புக் கொண்டவராகவும் இருப்பார்.
ஏழில் குருவிருக்க, வாய்க்கும் வாழ்க்கைத் துணை சிந்தனை தெளிவுடையவர், ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவர். நேர்மையானவர். தூய்மையானவர். அப்பழுக்கற்ற ஒழுக்கம் உதையவராக இருப்பார்.
ஏழில் சுக்கிரனிருக்க, வாய்க்கும் மனைவி அழகானவ்ர். ஆடம்பரப்பிரியை. எப்போதும் பணத்தை கையாள்வதில் குறியாக இருப்பார். தன்னைக் கவர்ச்சியாக்க் காட்டிக் கொள்ள முயல்வார்.
ஏழில் சனியிருக்க வாய்க்கும் வாழ்க்கைத் துணைவர் எந்த வேலையையும் செய்யும் மனதுடையவர், அடிமைச் சிந்தனை அதிகமிருக்கும். மந்த சுபாவம் உடையவர். ஏழில் இருப்பதால் சனியின் தீயப்பார்வை இலக்கினத்தின் மேல் விழுவதால் இருவருக்கும் வாழ்க்கை சோபிக்காது.
ஏழில் இராகு இருப்பதால் வாய்க்கும் வாழ்க்கைத் துணைவர் எதையும் பெரிதுபடுத்துபவராகவும், அடங்காத தனத்தை அதிகம் கொண்டவராகவும் இருப்பார். இராகு என்பது நிழலைக் குறிக்கும் கிரகமானதால், அது எங்கே படிகிறதோ, அந்த இடம் இருண்டதாகவே போய்விடும். அதனால் தான் ஏழில் இராகு, கேதுவிருக்க களத்திரத் தோஷம் எனப்படுகிறது.
ஏழில் கேது இருக்க, வாய்க்கும் மனைவி ஞானமிக்கவராக இருப்பார். எதிர்மறை சிந்தனை அதிகமிருக்கும். கணவனோ, மனைவியோ இருவருக்கும் ஒத்துப் போகாது. குடும்பவாழ்வுக்கான இணைவை விரும்பாதவர். பிரிவினை எண்ணம் உடையவர்,

No comments:

Post a Comment