jaga flash news

Monday 7 December 2015

பற்று-பந்தம்

பற்று-பந்தம், ஆன்மீகத்திற்கு தடையா??
------------------------------------
பற்று என்பதும் பந்தம் என்பதும் இரண்டுமே ஒரே பொருள்தரும் சொற்கள்தான். கட்டாயம் பற்று என்பது ஆன்மீகத்திற்கு தடைதான். முதலில் பற்று என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள்.
ஆன்மீக சாதகர்கள் பலரும் குடும்பம், பிள்ளை, நண்பர், சுற்றம், உறவு...... முதலியவையே பற்று. இவற்றை அனைத்தையும் விளக்கி எதோ பரதேசியைப்போல, அனாதயைப்போல திரிவது பற்று அற்ற நிலை என்று தவறாக புரிந்துள்ளனர்.
உங்கள் குழந்தை உங்கள்முன்னால் உள்ளது. அதை தூக்கி மடியில்வைத்து கொஞ்சுங்கள், உச்சிமுகருங்கள், விளையாடுங்கள் அது கட்டாயம் பற்றே அல்ல. நீங்கள் அலுவகத்திற்கு சென்ற பிறகும், உங்கள் முன் இல்லாத, எங்கேயோ இருக்கும் அந்த குழந்தையை, நினைத்து நினைத்து மனதில் கற்பனைசந்தோசம் அடைகிறீர்களே இதற்குப்பெயர்தான் பற்று என்பது.
அதாவது உங்கள் முன்னாள் "நிஜத்தில்" எது இருந்தாலும் அதில் உறவாடுவது பற்று அல்லவே அல்ல. உங்கள் முன், இப்போது இல்லாத எதோ ஒன்றை மனத்தால், சிந்தனையால் கற்பனை செய்வதுவே பந்தம், பற்று எனப்படும்.
உங்கள் முன் சுவையும் மனமும் மிக்க தின்பண்டம் உள்ளது. அதை ரசித்து, ருசித்து, தின்பதால் உங்களுக்கு பற்று என்று ஆகாது. ஆனால் அதே பண்டத்தை நினைத்து அது இல்லாதபோது, கற்பனையில் அதற்காக ஏங்கினால் அதுதான் பற்று.
உங்கள் உறவினர்களிடம் அன்பாக, பாசமாக அவர்களை உபசரிப்பதால் உங்களுக்கு பற்று உண்டாகாது. அவர்கள் உங்களருகில் இல்லாதபோது அவர்களை நினைத்து அவர்களுக்காக ஏங்கினால் அதுதான் பற்று.
பட்டாடை உடுத்துவதாலும், தங்க வைர ஆபரங்களை அணிவதாலும் உங்களுக்கு பற்று வராது. ஆனால் அவைகள் உள்களிடம் இல்லாதபோது உடுத்த பருத்திதுணி மட்டுமே இருந்து, நீங்கள் பட்டாடைக்கு ஏங்கினால்தான் நீங்கள் பற்று உடையவர் ஆவீர்கள்.
ஒரு உதாரணம்:- காதலனும் காதலியும் களவுமணம் புரிந்து யாரும் அறியாதவண்ணம் தனிமையில் சந்திக்கின்றனர். இப்போது அவர்கள் விளையாடினாலும், சரசம்செய்தாலும், கிரீடைசெய்தாலும் அது பற்றோ பந்தமோ ஆகாது.
சாமம் கடந்ததும் அவர்கள், அவரவர் வீடு திருன்பினர். இப்போது அவர்கள் இருவருமே நிகழ்ந்த நிகழ்வுகளை எண்ணி எண்ணி கற்பனை சுவையில் மிதப்பார். இதுதான் பற்று. இந்த கற்பனை சுவைதான் தவிர்கப்டவேண்டிய பற்று..
நாம் ஒதுக்கவேண்டியது உலகை அல்ல. நம் கற்பனைகளை. கற்பனை என்பது கடந்தகால ஏக்கங்களோ, அல்லது எதிர்கால பயமோ இருந்தால்தான் வரும். நிகழ்கனத்தில் நாம் வாழ்ந்துவந்தோமே அனால் கற்பனை சிறிதும் இராது. கற்பனையில் சதா வாழ்வதால் வாழ்கையில் ஒன்றும் மாறப்போவது இல்லை. ஆனால் வாழ்க்கையே பறிபோய்விடும். வாழ்க்கை என்பது கடந்தகாலமோ, எதிகாலமோ இல்லை. ஏனெனில் இவையிரண்டும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நிகழ்கனம் ஒன்றே வாழ்கையாகும். கனத்திற்கு கனம் வாழ்வதே ஆன்மிகம் ஆகும்.

1 comment: