jaga flash news

Saturday, 5 December 2015

அசம்பாவிதம் மற்றும் இயற்கை பேரிடருக்கான முக்கிய கிரக அமைப்புகள்:

அசம்பாவிதம் மற்றும் இயற்கை பேரிடருக்கான முக்கிய கிரக அமைப்புகள்:
1 சனி பகை, நீச்சம், வக்கிரம் பெற்று, செவ்வாய் திரிகோணத்தில் ஆதாவது ஒரே திசையில் இருத்தல்.
2. சனி செவ்வாய் சேர்க்கை.
3. சனி செவ்வாய் பரிவர்த்தனை.
4. சனி செவ்வாய் சார பரிவர்த்தனை.
5. சனி செவ்வாய் சமசப்த பார்வை
6. செவ்வாய் சூரியனால் அஸ்தமிக்கப்பட்டு சனி பார்வை அல்லது சேர்க்கை பெறல்.
7. சனியோ அல்லது செவ்வாயோ வேறு ராசியில் இருந்து பரிவர்த்தனை பெற்று ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வது.
இன்னும் பல கிரக அமைப்புகள் உள்ளன. அவற்றுள் இவை முக்கியமானவை. மேற்கூறிய அமைப்புகளில் கேது சமந்தபட மக்கள் காயமுறுவதலும் பாதிக்கப்படுதலும். ராகு சமந்தப்பட மக்களின் கூட்டு மரணமும் உண்டாகும்.
இங்கு சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரம் கொண்டு இயற்கை சீற்றம் நடக்க இருக்கும் நாட்களையும், லக்னம் கொண்டு இடம் மற்றும் நேரத்தை அறியலாம்.
சனி செவ்வாய் தொடர்பு பெறும் ராசிகள் கொண்டு இயற்கை பேரிடர் நடைபெறும் பகுதிகளை அறியலாம்.
மேலும் காலதேச வர்த்தமானத்தை கருத்தில் கொண்டறிய கணிப்புகள் சாத்தியமாகும்.
இதுவரை நடந்த தீவிரவாதிகள் தாக்குதல், நிலநடுக்கம், வெள்ளம் போர் இவற்றை இக்கிரகநிலைகள் சமந்தப்பட்டிருப்பதை அறியலாம் .

No comments:

Post a Comment