jaga flash news

Saturday 10 December 2016

பசு வழிபாடு:

நமது சகல பாவங்களும் நீங்கிடவும்,ஈரேழு பதினான்கு லோகங்களில் உள்ள தெய்வங்களையும் தரிசித்த புண்ணியமும் கிடைக்க செய்யும் பசு வழிபாடு:
பசு பிரசவிக்கும்போது கன்றின் தலைதான் முதலில்வெளிவரும்.இந்த நிலையில் பசுவை பார்க்கும் போது இரண்டு தலைகள் கொண்ட பசுவை பார்ப்பது போன்று இருக்கும்.பசு இப்படி காட்சி தருவதை "உபயதோமுகி" தரிசனம் என்பர்.
இந்த உபயதோமுகி தரிசனம் கிடைப்பது பெரும் புண்ணியம்.இந்த தருணத்தில் பசுவை வலம்வந்து வணங்கினால் நமது சகல பாவங்களும் நீங்குவதுடன்,ஈரேழு பதினான்கு லோகங்களில் உள்ள சகல தெய்வங்களையும் தரிசித்த புண்ணியம் கிட்டும்.
நெற்றியில் குங்குமப்பொட்டு அளவுக்கு சுழி உள்ள பசுக்கள் வீட்டில் இருப்பது பெரும்பாக்கியம்.அந்த வீட்டில் திருமணம்,பிரசவம் போன்ற சுப காரியங்கள் அடிக்கடி நடைபெறும்.
ஆடி மாதத்தில் ரோகினி நட்சத்திர நாளில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் பசுக்களில் சிவப்பு நிற பசு ஒன்று ஓடி வந்து முதலாவதாக தொழுவத்தில் நுழைந்தால் அந்த வருடம் அதிக மழை பொழியும் என்பது ஐதீகம்
பசுமாட்டை விற்பதாக இருந்தால் கட்டி இருக்கும் தாம்பு கயிறுடன் கொடுக்க கூடாது.கயிறை நாம் வைத்து கொண்டு பசுவை மட்டுமே கொடுக்க வேண்டும்.அப்படி செய்தால்தான் உடனடியாக வேறு பசுக்கள் நம்இல்லம் வந்து சேரும

1 comment: