jaga flash news

Friday, 26 May 2017

மொபைலுக்கும் IMEI எண் பார்க்க

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவ
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet!

எமனை விரட்டும் நமசிவாய மந்திரம்

எமனை விரட்டும் நமசிவாய மந்திரம்
நாம் அடிக்கடி நமசிவாய மந்திரத்தைக் கூறவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். அதாவது மழலைகளுக்கு நமசிவாய என்ற பெயரைச் சூட்டி அப்பெயரை உச்சரிப்பதன் மூலம் நம்மையறியாமல் சிவ மந்திரத்தை உச்சரிக்கச் செய்து சிவனருள் கிடைக்க வழி செய்தனர்.
நமசிவாய எனும் அருமந்திரம் ஓதினால் எவ்வித உடற்பிணியும் வராது என்ற பொருளில் சேக்கிழார் கூறியுள்ளார். உறக்கத்திலும், உறக்கமில்லா நிலையிலும், நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு எமனும் அஞ்சுவான். ஐந்தெழுத்து மந்திரம் எமனையே அஞ்சும் அளவிற்கு உதைத்துவிடும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

எலி, பல்லி, கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி விரட்டி முயற்சித்துத் தோற்றுப்போனவரா நீங்கள்?...


அதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். அவற்றை விரட்ட விலையுயர்ந்த பொருட்களைத் தான் வாங்கி வைக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. நம்முடைய வீட்டில் உள்ள ஒரு சில பொருள்களைக் கொண்டு அவற்றை மிக எளிதாக விரட்ட முடியும்.

Ads by ZINC

எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்கவே பிடிக்காது. அதனால் எலி அடிக்கடி சுற்றும் இடங்களில் புதினா இலைகளைக் கசக்கிப் போடுங்கள். அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வையுங்கள். அதற்குப் பிறகு எலி உங்கள் வீட்டில் அண்டவே அண்டாது.

வீட்டுச் சுவரை பல்லிகள் ஆக்கிரமித்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கும். வீட்டின் மூலையில் ஆங்காங்கே முட்டையின் ஓடுகளை வையுங்கள். பல்லிகள் ஓடிவிடும்.

சில வீடுகளில் ஈக்கள் மிக அதிகமாக மொய்க்கும். அப்படி இருந்தால் துளசிச் செடியை வீட்டின் ஜன்னல்களுக்கு வெளியே வைத்து வளருங்கள். லாவண்டர் ஆயில், லெமன் ஆயில் ஆகியவற்றை நீரில் கலக்கியோ அல்லது அப்படியேவோ தெளித்து விடலாம்.

இது எல்லாவற்றையும் விட இந்த கொசுத்தொல்லை தான் தாங்கவே முடியாத ஒன்றாக இருக்கும். கொசுவை விரட்ட சிறந்த வழி வேப்பிலை தான். கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது. காய்ந்த வேப்பிலைகளை எரித்து வீடு முழுவதும் புகை போட்டால் கொசுக்கள் அழிந்துவிடும்.

கரப்பான் பூச்சி பார்ப்பதற்கே அருவருப்பான ஒன்று. அதுவும் அப்படியொன்று வீட்டுக்குள் வந்தால்?... கொஞ்சம் எரிச்சலாகத் தான் இருக்கும். கரப்பான் பூச்சி அடிக்கடி வரும் இடங்களில் சிறிதளவு மிளகுதூள், வெங்காயப்பேஸ்ட், பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது தண்ணீரில் கலந்து தெளித்துவிடலாம்.

மூட்டைப்பூச்சி பெரும்பாலும் தலையணை உறை, கெட்டில் மெத்தைகளில் அதிகம் இருக்கும். வெங்காயச்சாறினை தெளித்துவிட்டால் போதும். அந்த வாசத்துக்கே மூட்டைப்பூச்சி அண்டாது. 

Tuesday, 23 May 2017

வாழ்க்கை வாழ்வதற்கே!!!

வாழ்க்கை வாழ்வதற்கே!!!
-------------------------------
நாம் அனைவருமே எதிர்காலத்தை எதிர்நோக்கி, எதோ ஒரு இலக்கை முன்வைத்து வாழ்ந்துவருகிறோம். நம் கவனம் முழுவதும் அந்த இலக்கிலேயே உள்ளது. விழித்தாலும், உண்டாலும், உடுத்தினாலும், உறங்கினாலும்...... அந்த இலக்கிலேயே நம் முழுகவனமும் உள்ளது. இது சரியா??? சற்றே சிந்தியுங்கள்!!!
வாழ்க்கை என்றால் என்ன??
வாழ்க்கை என்பது மாண்டுபோன இறந்தகாலமும் அல்ல, கேள்விக்குறியான எதிர்காலமும் அல்ல.
இங்கு, இப்போது நம்மிடம் இருக்கும் நிகழ்கணமே "வாழ்க்கை" எனப்படுவது.
நாம் இக்கணத்திலிருந்து அடுத்த கணத்திற்கு செல்வோமோ இல்லையோ? ஆனால் நம் நிகழ்கணம் சத்தியம்!!!
கடந்தகால நினைவிற்கும் செல்லாமல், எதிர்கால கற்பனைக்கும் ஏங்காமல், நிகழ்கணத்தில் வாழ்வதே "வாழ்க்கை" எனப்படும்.
இப்பொழுது சொல்லுங்கள், நாம் வாழ்கிறோமா??
கட்டாயம் இல்லை. எப்பொழுது நம் மனம், கடந்தகால நினைவிற்கும் செல்லாமல், எதிர்கால கற்பனைக்கும் ஏங்காமல், நிகழ்கணத்தில் வாழத்துவங்குகிறதோ அக்கணமே நாம் வாழத்துவங்கி உள்ளோம் என்று பொருள்!!!

அஷ்டாவக்ர கீதையும் பகவத்கீதையும்!!!

அஷ்டாவக்ர கீதையும் பகவத்கீதையும்!!!
(மோக்ஷ சாஸ்திரமும் தர்ம சாஸ்திரமும்)
---------------------------------------------------
கீதை என்றவுடனேயே நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய பகவத் கீதை தான்!! ஆனால் கீதைகள் எண்ணற்றவை. மகாபாரதத்திலேயே “அணுகீதா, உத்தவகீதா, மங்கிகீதா.....” உள்ளிட்ட கீதைகள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஏனைய புராணங்களில் “சிவகீதை, ரிபுகீதை, கணேசகீதை, அவதூதகீதை, குருகீதை.........” முதலான கீதைகள் உள்ளன.
“கீதா/கீதை” என்னும் சொல்லின் பொருள் “உபதேசிக்கப்பட்ட, வகுக்கப்பட்ட” என்று கொள்ளலாம். ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்ததால் அது “பகவத் கீதை” ஆனது. சிவபெருமான் அம்பிகைக்கு உபதேசித்ததால் அது “சிவகீதை” என்றானது. அதேபோன்றே மகரிஷிகளுள் சிறந்தவரும், மகா ஞானியுமான அஷ்டாவக்ரர் ஜனகமகாராஜனுக்கு உபதேசித்த இந்நூல் “அஷ்டாவக்ர கீதை” என்றானது.
ஆதிசங்கர பகவத்பாதர் பத்து உபநிஷத்துகளுக்கும், வியாசர் அருளிய பிரம்மசூத்திரதிர்க்கும், ஸ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதைக்கும் மிகவும் தெளிவாக, விரிவாக விளக்கவுரை எழுதியுள்ளார். இந்த “பத்து உபநிஷத், பிரம்மசூத்ரம், பகவத்கீதை “ இந்த மூன்றையும் ஆன்றோர் “பிரஸ்தான த்ரயம்” என்று அழைப்பர். அதாவது “உண்மைக்கான மூன்று” என்று பொருள். இந்த பிரஸ்தான த்ரயம் நம்மை வேதாந்தத்தின் நுழைவாயிலுக்கு அழைத்துச்செல்லும்.
சங்கரபகவத்பாதர் குறிப்பாக இவைகளை தேர்ந்தெடுக்க அவசியம் என்ன?
பகவத் கீதையானது ஒருவனுக்கு “விவேகத்தை” அளிக்கவல்லது. அதாவது எந்த பாதையை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும் என்னும் முதல் முடிவை எடுக்கசெய்வது. அழியும் உலக இச்சையை ஒழித்து, தர்மத்தின்வழியில் நம்மை நடக்கசெய்வது. வியாச பகவானது பிரம்மசூத்திரங்கள் நமக்கு “வைராக்யத்தை” அளிக்கவல்லது. வைராக்கியம் என்றால் விடாப்பிடியான முயற்சி, பிடிவாதம் என்று தவறாக நாம் புரிந்துள்ளோம், “வி+ராக: = வைராக்யம்” அதாவது எதன்மீதும் ஆசை அல்லது பற்றுதல் அற்ற நிலை வைராக்யம் ஆகும். பிரம்மசூத்திரங்கள் பிரம்மத்தின் நிலையை உணர்த்தி உலக இச்சைகளை விலக்க உதவும். முடிந்த சத்தியத்தை உபநிஷத்துகளில் இருந்து பெற்று, எப்பொழுதும் நாம் நம் சுயவடிவாம் பிரம்மமாக நிற்போம்!!!
இந்த நூல்களை ஞானவானான ஒரு குருவின் துணையில்லாமல் படிக்கக்கூடாது என்பது விதி. ஆதிசங்கரர் முதன்மை படுத்தியதால் பகவத்கீதைக்கு இன்றவிலான ஒரு பிரபலம் கிட்டியது.
அனைத்து நூல்களுக்குமே “அதிகாரி” என்று ஆன்றோர் வகுப்பார். அதாவது “யார் இந்த நூலை கற்க தகுதியானவர்?” என்று வகுப்பார். நாம் பகவத் கீதை யாருக்கு எங்கே உபதேசிக்கப்பது என்று பார்த்தல், “பாசத்தால் மதிமயங்கி, தன் கடமையை மறந்து, துறவு செல்வேன்” என்று மனம் தளர்ந்த அரசனான அர்ஜுனனுக்கு மற்றொரு அரசனான ஸ்ரீகிருஷ்ணர் உபதேசிப்பது. இந்த பகவத்கீதை மிகவும் இலக்கண நடையும், கவித்துவமும் நிறைந்தது. தளர்ந்த மனமுடைய ஒருவனை வீறுகொண்டு நிமிரச்செய்வது. கடமைக்கு முக்கியத்துவம் அளித்து பகவான் அளித்த மகத்தான சாஸ்திரமே பகவத் கீதை. ஆங்காங்கே மோக்ஷ மார்கத்தை கூறுவதாயினும், பகவத்கீதை மோக்ஷ சாஸ்திரம் அன்று. அது ஒரு தர்ம சாஸ்திரம்.
உலகமே பகவத்கீதையை புகழ்ந்து கூர, நீ மட்டும் பகவத்கீதை மோக்ஷ சாஸ்திரம் அன்று. அது ஒரு தர்ம சாஸ்திரம் என்று கூறுமளவிற்கு பெரியவனோ? என்ற ஐயம் உங்கள் மனதில் எழுவது தெரிகிறது. அனைத்து காலகட்டத்திலும் தர்மம் அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் முடிந்த ஞானம் கோடியில் ஒருவராலேயே ஏற்கப்படும். உலகம் முழுவதும் இன்று பகவத்கீதை கொடிகட்டி பரப்பதிலிருந்தே நாம் அது ஒரு தர்ம சாஸ்திரம் என்ற முடிவிற்கு வரலாம்.
தர்ம சாஸ்திரம் என்றால் என்ன??
நீ இவ்வாறுதான் வாழவேண்டும். இந்த வழியில்தான் நடக்கவேண்டும். இப்படித்தான் செய்தாகவேண்டும். இவ்வாருசெய்தால்தான் உனக்கு நன்மை,.... என்று மக்களின் மனங்களை நல்வழிப்படுத்துவதே தர்ம சாஸ்திரங்களின் நோக்கமாகும். பகவத்கீதையும் இதைத்தானே விழைகிறது, “கடமையைசெய்! பலனை எதிர்பாராதே. அனைத்தையும் என்னிடம் விட்டுவிடு! நான் பார்த்துக்கொள்கிறேன். கடமையில் இருந்து தவறாதே!! கடமை! கடமை!! கடமை!!!........” என்ற தர்ம சிந்தனைதான் பகவத்கீதை மக்களுக்குள் விதைக்கிறது. நம் மனம் பண்பட தர்ம சாஸ்திரங்கள் தேவை. ஆனால் அதயும்தாண்டி அவைகளால் நம்மை மோக்ஷதிற்க்கு வழிகாட்ட இயலாது.
ஆனால், மோக்ஷ சாஸ்திரங்களின் நோக்கம் ஒருவனை தர்மத்தையும் தாண்டச்செய்து, தர்ம அதர்மம் என்ற நினளைகளை கடக்கசெய்வதுதான். நீ கட்டற்றவன், மாசற்றவன், வினையற்றவன், பற்றற்றவன், பணியற்றவன், முழுமையே நீ!!! என்று இரண்டுகளை நீக்கி ஒருமையாம் நம் சுயத்தை நமக்கு காண்பிப்பதே மோக்ஷ சாஸ்திரங்கள்.
“பற்றற்றுப் பணியற்று மாசற்ற சுயம் பிரகாசனே நீ. (மற்றும்) சமாதி பழகுகிறாயே அதுவே நின் பந்தம்”
“மேனியால் எதனையுந் தொடாமலே தொன்றுதொட்டு உலகு தாங்கும் எனக்கு நிகர் சமர்த்தனெவன்? நானே நான்! என்னை வணங்குகுறேன்.”
முதலான உண்மை உரைகளால் கர்ஜிக்கிறார் அஷ்டாவக்ரர்.
அதுமட்டுமின்றி பகவத்கீதையை நம் விருப்பத்திற்கு, நம் மனதிற்கு ஏற்ற விளக்கங்கள் தரலாம். யார்வேண்டுமானாலும் பகவத்கீதைக்கு எளிதாக பொருள் கூற முடியும். ஏனெனில் அதுஒரு தர்ம சாஸ்திரம் ஆதலால். தர்மத்தை யார்வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஞானத்தை யாராலும் கூற இயலாது. "பிரம்மமே தான்" என்று உறுதிகொண்ட ஞானையத்தவிர!!!
பகவத்கீதைக்கு இத்துணை உரைகள் இருப்பினும், அஷ்டாவக்கிர கீதைக்கு ஒரு விளக்கவுரை கூட இல்லாதது ஆச்சரியம்!!! ஏனெனில், தர்மம் மனிதனின் மனதில் இருந்து உதிப்பவை. ஆகவே யாவராலும் இலகுவாக பொருள் கூற இயலும். ஆனால் ஞானம் என்பது மனதை கடந்தது. மனம் இறக்கும் தருணத்தில் பிறப்பது. அவ்வாறிருக்க மனத்தால் எவ்வாறு பொருள்கூற இயலும்???
வேதத்தை உலகிற்கு அளித்த வியாசரின் தவப்புதல்வன் சுகமுனிவர். ஆன்ம விசாரத்தில் அவருக்கு பெரும் சந்தேகம். தந்தையின் பதில்கள் திருப்பதி அளிக்காததால், வியாசர் ராஜரிஷியான ஜனகரிடம் சென்று வினவுவாயாக என்று சுகரை மிதிலைக்கு அனுப்பினார். ஜனகரிடம் வினவி அனைத்து சந்தேகங்களும் தீர்ந்து பிராமரிஷியாக வலம்வந்தார் சுகப்பிரம்ம ரிஷி!!!
உலகமே ஞானவான் என்று போற்றும் பல ரிஷிகளும் தங்கள் சந்தேகங்களை தீர்க்க அரசனான ஜனகனை நாடுவார்கலாம்.
ஆனால் ஜனகருக்கு இந்த உயர்ந்த நிலையை அளித்தவர் “அஷ்டாவக்கிரர்” ஆவார்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரன் போன்ற ஓரிரண்டு சீடர்களுக்கு இந்த “மகாகீதை” எனப்படும் “அஷ்டாவக்கிர கீதையை” மிகவும் இரகசியமாக உபதேசித்துள்ளார். பகவான் ஸ்ரீரமணர் “அஷ்டாவக்கிர கீதைக்கு ஈடிணை வேறு ஏதும் இல்லவே இல்லை” என்கிறார்.
Image may contain: 1 person

உஞ்சவிருத்தி பிராமணர்!!!

உஞ்சவிருத்தி பிராமணர்!!!
---------------------------
இப்பொழுது உங்களுக்கு வயது 50 இருந்தால் "உஞ்சவிருத்தி பிராமணர்" என்னும் சொல் உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கும்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரையில் சில குடும்பங்கள் உஞ்சவிருத்தி செய்துதான் தங்கள் வாழ்கையை நடத்தினர்.
உஞ்சவிருத்தி என்றால் என்ன?
உஞ்சவிருத்தி இருவகைப்படும்.
1)யாரிடமும் யாசகம் கேட்காமல் அறுவடை முடிந்ததும் அங்கு சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை பொருகிவந்து அரிசியாக்கி ஜீவனம் நடத்தும் முறை ஒன்று.
2)மற்றொன்று, தலையில் தலைபாகை கட்டிக்கொண்டு தோளில் ஒரு பித்தளைசொம்பில் கயிறுகட்டி தொங்கியபடி,ஒருகையில் சப்பலாகட்டையும் மறுகையில் தம்புராவும் மீட்டியபடி "கிருஷ்ண ராமா கோவிந்தா, ஹரே! ராம கிருஷ்ணா கோவிந்தா" என்றபடி பஜனைசெய்துவரும் பிராமணரின் பாதங்களைக்கழுவி தத்தம் இல்லம்மும் அவரது உஞ்சவிருத்தி பாத்திரத்தில் அரிசிமணி இடுவர்.
இதுவே உஞ்சவிருத்தி என்னும் உன்னதமான முறை.உஞ்சவிருத்தி பிராமணர்கள் வேறு எந்த தொழிலோ,வைதீக,ப்ரோகித கர்மங்களிலோ ஈடுபடமாட்டார்கள்.யாரிடமும் பணம் யாசிக்கமாட்டர்கள்.தெருக்களில் எதேர்ச்சையாக நாமசங்கீர்த்தனம் செய்தவாறு செல்வர். விருப்பட்டவர்கள் அரிசிமணி இடுவர்.கொடு என்றும் அவர்கள் யாரிடமும் கேட்கமாட்டார்கள். அவர்களது பத்திரம் நிரம்பியதும் இல்லம் திரும்புவர்.அதிகமாகவும் பெறமாட்டார்கள்.அரசி கிடைக்கவில்லை என்றால் அன்றையநாள் முழுதும் குடும்பத்துடன் பட்டினி தான்.அவர்களுக்கு தெரிந்து பகவானும் பகவான் நாம சந்கீர்தனமும்தான்.
ஏன் அவர்கள் உழைத்து உனக்கூடாத?என்று கேட்கலாம்.
வேதம் பார்பனர்களுக்கு விதித்துள்ள தர்மம் உழைக்க அல்ல.வேதம் கற்கவும் கற்பிக்கவும்,யாசகம் செய்யவும் யாசகமாக பெற்ற பொருள் அதிகமாக இருந்தால் தானம் செய்யவுமே.ஆனால் இன்று உண்மையான பார்பனர்களை காண்பது பகீரத பிரயதனாமாக உள்ளது.
பலகோடி ஜென்மங்களில் செய்த புண்ணிய பலனாகத்தான் ஒருவன் உஞ்சவிருத்தி பிராமணனாக உருவாக முடியும்.
இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் உஞ்சவிருத்தி செய்தேதான் தன் வாழ்வை பக்திபூர்வமாக நடத்தினார்.
உஞ்சவிருத்தி பிராமணர்களில் வாழ்கை:-
*தினமும் பிரம்மமுகூர்த்தத்தில் தூக்கம் விழித்து,நீராடி சந்தியாவந்தனம்,அக்னிஹோத்ரம் முதலிய நித்யகர்மங்களை செய்வர்.
*பூசை முடித்து உஞ்சவிருத்தி செய்ய செல்வர்.மதியம் திரும்பி கிடைத்த பொருட்களை சமைத்து இறைவனுக்கு படைத்தது உண்பர்.
*ஏகாதசி முழு பட்டினி இருப்பார்.
*அதிகமாக எப்பொருளையும் சேர்க்கமாட்டார்.
*தங்களுக்கென சொந்தமாக காணிநிலம் கூட வைதிக்கொள்ள மாட்டார்.ஊரால் தர்ம சிந்தனையுடன் தரும் வீட்டில் தங்கள் காலம் இருக்கும்வரை வசிப்பர்.
*பணமோ,பொருளோ யாரிடமும் யாசகம் பெறமாட்டார்.
*பொருள்,பணம் ஈட்டும் நோக்குடன் எச்செயலையும் செய்ய மாட்டார்.
*தாங்கள் வாழும் வாழ்க்கை இறைவனுக்காக மட்டுமே வாழ்வார்.

குழந்தைகள்:

குழந்தைகள்:
உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. 
அவர்கள், வாழ்கை தனக்கென்று வேண்டிய குழந்தைகள்.
அவர்கள் உங்கள்மூலமாக வந்திருக்கிறார்கள்: உங்களிடமிருந்து அல்ல.
அவர்கள் உங்களுடன் இருந்தாலும், உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.
உங்கள் அன்பை அவர்களுக்கத் தரலாம், "உங்கள் எண்ணங்களை அல்ல".
அவர்களுக்கென்று தனி சிந்தனைகள் உண்டு.
அவர்களின் உடல்களுக்குதான் நீங்கள் பாதுகாப்பு தரமுடியும். ஆன்மாக்களுக்கல்ல.
அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை, அங்கே நீங்கள் செல்ல முடியாது, உங்கள் கனவிலும் கூட.
அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம், ஆனால், அவர்களை உங்களைப்போல் ஆக்கி விடாதீர்கள்.
வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது; நேற்றுடன் ஒத்துப்போகாது.
நீங்கள் விலகல். உங்களிடமிருந்து எய்யப்பட்ட உயிருள்ள அம்புகளே குழந்தைகள்.
எல்லையின்மை என்னும் பாதையில், ஒரு குறியிடத்தை வில்லாளி காண்கிறான். உங்களை அவன் வளைக்கின்றான் அவன் சக்தியால், அவன் அம்பு நெடுந்தூரம் விரைந்து செல்ல.
வில்லாளியின் கரங்களில் உங்கள் வளைவு, மகிழ்ச்சிக்காக இருக்கட்டும்.
அவன், பாய்ந்துசெல்லும் அம்பை மட்டும் நேசிப்பதில்லை, நிலையாக நிற்கும் வில்லையும்தான் நேசிக்கிறான்

முக்தி!!!

முக்தி!!!
----------------
முக்தி, மோக்ஷம் என்னும் வடமொழி சொல்லின் பொருளாவது, “விடுதலை, பூரண சுதந்திரம்” என்பதாகும். இங்கு நம் எதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று சிந்தித்தால், நம் மனதிலிருந்துதான் தாம் விடுதலை அடைய வேண்டும்.
மோக்ஷத்தின் எதிர்மறை “பந்தம்” அதாவது பற்றுதல் ஆகும்.
பந்தம் நீங்கினால் மோக்ஷம்!!!
இங்கு நாம் “பற்று” என்ற சொல்லை தவறாகவே புரிந்துள்ளோம். முதலில் அதிலிருந்து தெளிவடைய வேண்டும். உலகை சார்ந்த நம் பெற்றோரோ, மனைவி மக்களை, வீடோ, நண்பர்களோ............ இவை எதுவுமே பற்றே அல்ல. உண்மையில் அனைத்தும் அந்த முழுமையின் அங்கங்களே. இங்கு “என் மனைவி! என் மகன்! என்னால்தான் இவர்கள் உயிர் வாழ்கிறாரகள்! என் வீடு! நானே அதற்கு பொறுப்பு!!!................. என்ற “எனது” என்னும் மனதின் பிடிப்பே பற்று ஆகும். மனதில் பிடிப்பிலாமல் ஒன்று அல்ல பத்து மனைவி, நூறு பிள்ளைகள் இருந்தாலும் அது பற்றே ஆகாது!!!
மனதில் பற்று இல்லை என்பதற்காக ஒருவன் அனைத்தையும் துறந்துவிடுவான் என்று ஆகாது. இருக்கும்போது அவற்றுடன் இருப்பான், பொருட்கள் இல்லாதபோது அவற்றை சிந்தியான்.
1.வருவதை மனதில் எந்தவித விருப்போ வெறுப்போ இன்றி முழுமையாக ஏற்றுக்கொள்வதும்,
2.நம்மிடம் உள்ளவற்றிற்கு நாம்தான் பொறுப்பு, அவை என்னுடையவை என்ற எனது இல்லாமல்,
3.வந்தவை நம்மை விட்டு நீங்கும்போது போகிறதே, போய்விட்டதே என்ற தளர்ச்சி இல்லாமல் இருப்பதே மனதின் பிடியில் இருந்து விடுபட்டதன் அறிகுறி.
திரை அரங்கில், திரயின்மேல் காட்சிகள் நகர்ந்தாலும் அக்காட்சிகளால் திரைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாததுபோல, எது நடந்தாலும், எதனாலும் மனம் பாதிக்கபடாமல் இருப்பதே ஜீவன் முக்த நிலை ஆகும்!!!

மனம் அடங்க மூன்று வழி!!!

மனம் அடங்க மூன்று வழி!!!
(பக்தி, யோகம், ஞானம்)
---------------------------------------------
சனாதன தர்மமான நம் ஹிந்து மார்கம் ஏனோ தானோ என்று வடிவமைக்கப்பட்டது அன்று. மனிதனின் பிரச்சனைகளை நன்கு ஆராய்ந்து, அணைத்து துன்பங்களுக்கும் "மனம்" ஒன்றே காரணம் என்று உணர்ந்த ரிஷிகள், மனதை நாசம் செய்ய நமக்கு தந்த எண்ணற்ற பயிற்சி முறைகளின் வாழ்வியல் நன்னெறியே ஹிந்து மார்கம் ஆகும்.
"மனம் என்னும் மாடடங்கில் தாண்டவகோனே,
முக்தி வாய்த்ததென்று என்னிடடா தாண்டவக்கோனே"
என்று பாடுகிறார் ஒரு சித்தர்.
மனதை கட்டுப்படுத்து. அதன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடு என்று எல்லோரும் கூறுகிறார்கள் சரி. அந்த பாழாய்ப்போன மனதைதான் கட்டுப்படுத்துவது எப்படி?
முதலில் மனம் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும்.
கடல் அலைகள் போல ஓயாது உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் பற்பல எழுகின்றன. அந்த எண்ணங்களின் கூட்டே மனம். மனம் என்றோர் பொருள் இல்லை. எண்ணங்களே மனம். எண்ணங்களை கட்டுப்படுத்துவேதே மனதை கட்டுப்படுத்துவது.
மனிதனின் மனோபாவத்திற்கு ஏற்ப நம் ரிஷிகள் எண்ணங்களை கட்டுப்படுத்த. நமக்கு முன்று மார்கங்களை வழங்கியுள்ளனர். அவை பக்தி, யோகம், ஞானம் என்பவையே.
*பக்தி மார்கம்:-
பக்தி என்பது இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுவது. பிறந்து சில மாதங்களே ஆன ஒரு சிசு எப்படி அனைத்திற்கும் தன் தாயையே எதிர்நோக்கி இருக்குமோ, இறைவனை மட்டுமே அனைத்திற்கும் ஒரே ஆதரவாக கொண்டு வாழ்வை நடத்துவதே பக்தி. அனைத்தையும் இறைவனாக பார்பதுவே பக்தி. அனைத்தும் இறைவன் ஆதலால், பக்தன் யார்மீதும் கோபப்படவோ பொறாமை கொள்ளவோ மாட்டான். மரணம் முதற்கொண்டு எதைக்கண்டும் அஞ்சமாட்டான். தன் வாழ்வை தீர்மானிப்பது இறைவன் ஆதலால், தன் எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்கவோ, முடிவெடுக்கவோ மாட்டான். இவ்வாறு தன்னை முழுமையாக இறைவனுக்கே ஒப்புவிக்கும் பக்தனை "சரனாகதான்" என்பார்கள். இவ்வாறு சரணாகதி மூலம் இறைவனுடன் தன்னை ஐக்கியப்படுத்தினால் சின்தனைகள் ஒழிந்து, மனம் அழிந்து முக்தி பெறலாம்.
*யோகம்:-
"யோகம் என்பது இடைவிடாத முயற்சியின் மூலம் மனதின் எண்ணங்களை கட்டுப்படுத்துவது" என்று பதஞ்சலி மகரிஷி கூறுகிறார்.
இடைவிடா முயற்சியின் மூலம் சிந்தனை அலைகளை கட்டுப்படுத்த முனைவிர்களே யோகிகள். வாசி, குண்டலினி, க்ரியா,............... போன்ற எண்ணற்ற கடுமையான பயிற்சிகளால் பாடுபட்டு மனதின் எண்ணங்களை காடுப்படுதி மனதை வென்ற யோகிகளை "சமாதி நிஷ்டர்கள்" என்பார்கள். அவ்வாறு கடுமையான பல பயிற்சிகள் செய்து, யோகம் பயின்று, மனதை அடக்கி, சமாதி ஸ்திதியை அடைந்தாலும் முக்தி பெறலாம். (சமாதி என்பது மண்ணுக்குள் போட்டு உடலை புதைப்பது அல்ல. எண்ணங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து, மனம் சும்மா இருக்கும் நிலையே சமாதி நிலை ஆகும்)
*ஞானம்:-
கூர்ந்த அறிவால் பிரபஞ்சத்தை நோக்கி சத்தியம் ஏது? அசத்தியம் ஏது? என்று ஆராய்ந்து, இருப்பது அனைத்துமே பிரம்மம் தான். பிரம்மத்தை தவிர்த்து இரண்டாவது ஒன்று சிறிதும் இல்லை. என்று நன்கு தேர்ந்து, எக்கணமும் விழிப்பாக இருந்து மனம் சிந்திக்காதபடி கணத்திற்கு கணம் கவனமாக வாழ்ந்து மனதை அடக்கியவர்களை "ஞானிகள்" என்பார்கள். இவ்வாறு ஆழ்ந்த விசாரனயினாலும், கவனமாய் இருந்து மனம் சிந்திக்காமல் பார்துக்கொல்வதாலும் முக்தி அடையலாம்.
பக்தியின் மூலம் இறைவனுக்கு சரணாகதி செய்வதாலும், யோகம் பயின்று சமாதி நிலை அடைவதாலும், ஞானத்தினால் விழிப்பாய் இருப்பதாலும் மனதை நசித்து முக்தி அடையலாம்.
இளகிய மனம் உடையவருக்கு பக்தியும். விடாமுயற்சி உடைய மனம் கொண்டவருக்கு யோகமும், அறிவுக்கூர்மை உடையவருக்கு ஞான மார்க்கமும் பொருந்தும்.

அக்ஷய திருதியை!!

அக்ஷய திருதியை!!
(செய்யக் கூடாதவை, செய்ய வேண்டியவை)
-------------------------------
இனிய காலை வணக்கம் நண்பர்களே. இன்றைய நாள் இனியதாகுக.
இன்று அக்ஷய திருதியை. அதாவது சித்திரைமாதம் அமாவாசை சென்ற மூன்றாம் நாள். இன்று பலரும் தங்கம், வெள்ளி,..... வாங்குவத்தின் மும்முரமாக இறங்கியிருப்பீர்கள். ஆனால் அவ்வாறு வாங்குவது, உங்களுக்கு எதிர்பலனையே அளிக்கும் என்பதனை அறிவீர்களா நீங்கள்!!!
அக்ஷய திருதியை ஒரு அற்புதமான முகூர்த நாள், அன்று தங்கம் வாங்கினால் வருடம் முழுதும் செல்வம் செழிக்கும் என்று வியாபார உக்தியால் பலர் கூறுவதைக்கேட்டு இன்று நம் மக்கள் ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் அக்ஷய திருதியை முகூர்த நாள் கிடையாது. இன்று அருமையான "புண்ய கால தினம்"
புண்ய காலம் என்றால் என்ன?
கிரகண புண்ய காலம், மாதப்பிறப்பு புண்ய காலம் போன்று, நம் மூதாதையரை முன்னிறுத்தி, பித்ரு கார்யங்கள் செய்வதனால் நமக்கும் நம் சந்ததியருக்கும், நன்மை பல சேரும் நாள் புண்ய காலம் ஆகும்.
புண்ய கால தினங்களில் பொருட்கள் வாங்குவதோ விற்பதோ கூடவே கூடாது. அன்றைய தினம் முழுவதுமே முன்னோர் வழிபாட்டிற்கும், ஆலயம் தொழுதல், வழிபாடு செய்தல், முயன்ற அளவிற்கு இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்தல் முதலிய தெய்வீக சிந்தனையில் திளைக்கவேண்டிய புண்ணிய நாள் இன்று. ஆனால், விளம்பரதாரர்கள் கூறுவதைப்போல தங்கம் வாங்கினால், செல்வத்திற்கு பதிலாக தோஷமே வந்து நம்மை சேரும்.
புண்ய காலங்களில் வழிபாட்டைக்காடிலும் தானம் சிறந்த பலனை தரும். உப்பு, சர்கரை, அரிசி, மல்லிகைப்பூ போன்ற வெள்ளை நிரப்பொருட்களை தானம் செய்வது மிகவும் உயர்வு.
ஏழைகளுக்கும், முதியவருக்கும், குழந்தைகளுக்கும், வரியவருக்கும் அன்னதானம் செய்வது பல யாகங்களை நிகழ்த்தியதற்கு சமமாகும்.
நம் தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகவே மக்களுக்கு நீர்மோர், நீர், முதலிய தாகசாந்திக்கு உதவினால் அனைத்து தெய்வங்களும் வரங்களை உங்கள் இல்லம் தேடிவந்து அருளுவர்.
இது சத்தியம்!!!

விதி

விதி என்பது நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டது. பல சந்தர்பங்களில், பல நிகழ்வுகள் ஏன் நடந்து? எதற்கு நடந்தது? என்று குழம்பி நிற்கும் வேலையில், அந்த நிகழ்விற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லவேண்டும் என்பதற்காக நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான் விதி என்பது. 
உதாரணமாக, ஒருவன் மிகவும் பணக்காரனாக இருப்பான். ஏனோ தெரியாது திடீரென அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்துவிடுவான். அவன் "ஏன் நான் இந்த கேவலமான நிலைக்கு வந்தேன்?" என்று அந்த கீழ்நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் துன்பப்படும் நேரத்தில், அவனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, "இது உன் பூர்வகர்மா. உன் விதி இதை நீ அனுபவித்துத்தான் ஆகவேண்டும்." என்று கூருன்போது அவன் மனம் அந்த நிலையை ஏற்றுக்கொண்டு இனிவரும் வாழ்கையை வாழ தயாராகலாம் என்னும் உக்திக்காக உருவாக்கப்படதே "விதி" என்னும் கோட்பாடு. சரி விதி உண்மையாக இருக்கட்டும். நம் பிறவி விதியின்படி அமைவதாக வைத்துக்கொண்டால், இந்த பிறவி சென்ற பிறவியின் விதி. அப்படி எடுத்த அனந்த பிறவிகளும் அதன் முன்பிறவியின் விதி. இப்படி போக அனைவருக்கும் முதல் பிறவி என்ற ஒன்று இருக்கவேண்டும். அப்பொழுது அந்த முதல் பிறவி எந்த விதியக்கொண்டு நிர்ணயிக்கப்பட்டது????
மலர்கள் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக மலர்கின்றன.
மரங்கள் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக வளர்கின்றன.
கடல் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக அலைகளை எழுப்புகின்றது.
கனிகள் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக பழுக்கின்றன.
சூரியன் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக ஜொலிக்கின்றது.
பிரபஞ்ஜம் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக இயங்குகின்றது..........................
அதே போலத்தான் மனிதனின் வாழ்வில் நிகழும் அனைத்து செயல்களும் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக நடக்கின்றது. எதேர்ச்சையாக பிறந்து, எதேர்ச்சையாக வளர்ந்து, எதேர்ச்சையாக இறக்கப்போகின்றோம்!!!
அவ்வாறு எதேர்ச்சையாக நடப்பதை நம் மனம் ஏற்க மறுக்கும்போது விதி, பிராரப்தம், கர்மா, இறைவன் செயல், ஊழ்வினை........... போன்றவை உருவாகின்றது.
இறைவன் சாக்ஷிமாத்திரன் ஆவான். அவன் எந்த செயலையும் செய்வதில்லை. அவன் எந்த நிகழ்விற்கும் பொருப்பாகமாட்டான். ஆனால் அவன் இன்றி இங்கு ஒரு செயலும் நிகழாது. அவனே நிகழ்த்துபவன், நிகழ்வு, அனுபவிப்பவன். அனைத்தும் அவனே. அந்த பிரபஞ்ச சக்தியை தவிர்த்து இங்கு வேறு எதுவுமே இல்லை. நீங்களும் நானும் கூட அந்த பிரபஞ்ஜசக்தியின் அங்கங்களே. நம் இருப்பு என்பது நம் கற்பனையே.!!!
இதை ஏற்க முடியாமல் உங்கள் மனம் இதை மறுக்கலாம். ஆனால் இதுவே எதார்த்த சத்தியமாகும்!!!

ருத்திராட்சத்தை யார் அணியலாம்? எப்போது அணியவேண்டும்?



ருத்திராட்சத்தை யார் அணியலாம்? எப்போது அணியவேண்டும்?

ருத்திராட்சம்! சிவபக்தர்கள், சிவனடியார்கள் தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவச்சின்னம். இது, கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி என்றும் அழைக்கப்படுகிறது. ருத்திரன் என்பது சிவபெருமானையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும் சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே 'ருத்திராட்சம்'.
பகவானின் வலக்கண்ணிலிருந்து 12 மஞ்சள் நிற ருத்திராட்சங்களும், இடக்கண்ணிலிருந்து 16 வெண்ணிற ருத்திராட்சங்களும், நெற்றிக் கண்ணிலிருந்து 10 கருமை நிற ருத்திராட்சங்களும் தோன்றின.
ருத்திராட்சத்தின் மேன்மையையும், அணிவதால் நாம் அடையும் நன்மைகளையும் பற்றி வேதவிற்பன்னர் சுந்தரேஷசர்மாவிடம் கேட்ட போது, அவர் கூறிய தகவல்களின் தொகுப்பு இது.
ருத்திராட்சம் உருவான வரலாறு:
தாரகாஷன், வித்யுன்மாலி, கமராஷன் என்னும் மூன்று அசுரர்கள் சிவபெருமானை வேண்டி, கடுமையான தவம் புரிந்தனர். தவத்தில் மனம்குளிர்ந்த இறைவன் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் ஆன மூன்று கோபுரங்களைத் தந்தருளினார். இந்தக் கோபுரங்களின் மூலமாகப் பறந்து செல்லும் சக்தியும், பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆற்றலும் அசுரர்களுக்குக் கிட்டியது.
இதனால் அசுரர் மூவருக்கும் ஆணவம் தலைக்கேறியது. மூவுலகத்தையும் வென்று தேவர்களையும் துன்பப்படுத்தினர். அசுரர்களின் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் அசுரர்களை அழித்துக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார்.
தேவர்களுக்குச் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பதற்காக, சிவபெருமான் தன்னால் வரம் அருளப்பட்ட அசுரர் மூவரையும் தன் நெற்றிக்கண்ணால் அழித்தார்.
அந்நேரத்தில் அவர் மனம் இளகி அவரது கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. அந்தக் கண்ணீரே 'ருத்திராட்சம்' ஆனது.
யார் யார் ருத்திராட்சம் அணியலாம்?
ஆண், பெண் பேதமின்றி யாரும் அணியலாம். வயது வரம்பும் கிடையாது. ஆனால், ருத்திராட்சம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
ருத்திராட்சம் அணியவேண்டிய காலங்கள்:
கடவுளுக்குப் பூஜை செய்யும்போது அணியலாம். பிறருக்கு கல்வி அளிக்கும்போது அணியலாம். புனித நதிகளில் குளிக்கும்போது, பிதுர் தர்ப்பணம் செய்யும்போது, வீட்டில் நடைபெறும் சுப நிகழ்வுகளின்போது அணியலாம். எந்தவொரு செயலையும் ருத்திராட்சம் அணிந்து செய்யும் போது நமக்கு இறைவனின் அனுகூலம் கிடைப்பதால், நிச்சயம் வெற்றி கிட்டும்.
ருத்திராட்சம் அணியும் முன்பாக பின்பற்றவேண்டிய நடைமுறை:
ஒருவார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ருத்திராட்சத்தை ஊறவைக்கவேண்டும்.
பின்னர் நீரால் சுத்தப்படுத்தி, ஈரம் காய்ந்த பின்னர் திருநீறில் ஒருநாள் முழுவதும் வைத்திருக்கவேண்டும்.
அடுத்ததாக, பச்சைப் பசும்பாலில் கழுவவேண்டும், பின்பு மீண்டும் நீரால் தூய்மை படுத்தவேண்டும்.
தூய்மையான ருத்திராட்சத்தை பூஜை செய்து, மந்திரம் ஜபித்து அணியவேண்டும்.
ருத்திராட்சம் அணிவதால், உண்டாகும் பொதுவான நன்மைகள்:
புண்ணிய நதிகளில் நீராடிய நன்மை கிட்டும்.
தீய சக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
மோட்சத்தை அருளும் சக்தியை வழங்கும்.
லட்சுமி கடாட்சம் கிட்டும்.
புத்திரப் பாக்கியம் உண்டாகும்.
ருத்திராட்சத்தைப் பார்ப்பது மகா புண்ணியம். தொட்டால் கோடி புண்ணியம். அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியமாகும்.
நம் உடல் பிணிகளைப் போக்கக் கூடியது.
108 ருத்திராட்சம் கொண்ட மாலையை அணிந்தால், 'அசுவமேத யாகம்' செய்த புண்ணியம் உண்டாகும். பாவங்களிலிருந்து விடுதலை கிட்டும்.
ஒன்று முதல் பதினான்கு முகங்கள் கொண்ட ருத்திராட்சம் உண்டு. ருத்திராட்சங்களின் முகங்களைப் பொறுத்து நமக்கு கிடைக்கும் நன்மைகளும் மாறுபடும்.
பெரும்பாலும், இருமுகம், ஐந்துமுகம், 11 முகம், 14 முகமே சிவனடியார்களால் போற்றப்படுகிறது. சிவனடியார்களின் அறிவுரை மற்றும் ஆசீர்வாதத்துடன் ருத்திராட்சம் அணிவது சிறப்பு.
பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு நாள்களில் ருத்திராட்சம் அணியக் கூடாது.
ருத்திராட்ச மரம்
ருத்திராட்ச மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள்:
திருவலஞ்சுழி
அச்சுதமங்கலம்
தாராசுரம்
எத்தனை பெரிய கோடீஸ்வரர்கள் ஆனாலும், இறுதியில் வருவது ஈஸ்வரனின் திருவடிகளுக்குத்தான். 'ருத்திராட்சம்' எப்போதும் நம்மை இறைவனுக்கு அருகிலிருப்பது போல் உணர வைக்கும்.

நமசிவய எனும்அஞ்செழுத்து மந்திரம் !

நமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல !
இது ஒரு சித்தர்களின் பரிபாஷை !
பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்
இது குறித்து திருமூலர் விளக்குகிறார்
அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்
அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே
1) முதல் வரி :அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
ந் என்ற எழுத்தால் மண்ணை படைத்தனன்
ம என்ற எழுத்தால் நீர்
சி என்ற எழுத்தால் நெருப்பு
வ என்ற எழுத்தால் காற்று
ய என்ற எழுத்தால் ஆகாயம் என ஐந்து பூதங்களை படைத்தனன்
2) அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்
நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்து நான்கு இலட்சம் உருவ பேதங்களாய்ப் பிறவிகள் மருவி எவ்வழியும் அஞ்செழுத்தால்தொடர்ந்த பெருகி யிருக்கின்றன
வித்து, வேர்வை, முட்டை, கருப்பை என்னும் இந்த நான்கும் பிறவிக்கு மூல கிளைகளாக வந்துள்ளன .
அஞ்செழுத்தால் 84 லட்சம் யோனி பேதங்களையும் இப்புவனத்தில்
படைத்தனன்
ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் .. தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்
சென்மித்து உழலத் திரோதித்து .. வெந்நிரய ...... 8
என்கிறது ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய 'திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா'
ந் என்ற எழுத்தால் எலும்பு ,நரம்பு தசையால் ஆன உடல் படைத்தனன்
ம என்ற எழுத்தால் நீர் ரத்தம் இவைகளை படைத்தனன்
சி என்ற எழுத்தால் நெருப்பு உடலின் சூட்டையும் படைத்தனன்
வ என்ற எழுத்தால் காற்று சுவாசம் எனும் சரம் கொண்டு சரீரம் படைத்தனன்
ய என்ற எழுத்தால் ஆகாயம் கொண்டு அறிவு மனம்என படைத்தனன்
3) அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்
இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பதற்காக
ந் பிரமன் ஆக்கள்
ம் திருமால் காத்தல்
சி ருத்திரன் அழித்தல்
வ மகேஸ்வரன் மறைத்தல்
ய சதாசிவன் அருளல்
இந்த ஐவரின் உருவால் அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்
4) எல்லா உயிர்களுக்கும் உயர்வாக படைக்கப் பெற்ற மனித உடலுக்குள்
ஐந்து ஆதாரங்களிலும் ஐந்துவகை தொழில் செய்யும் தெய்வங்களை நிலைபெற செய்து ,அவர்களுக்கு மேலே உச்சிக்குழிமுதல் உண்ணாக்கு வரை நீண்டுள்ள
பிரம்மரந்திரம் எனும் நுண்ணிய துவாரத்துக்குள் நெற்றி நாடு நிலையில் மனிதனின் சூக்ஷும சரீரத்தை துரியம் என்ற நிலையில் வைத்து ,அதற்க்கு மேலே துரியாதீதம் என்ற நிலையில் ஜீவ சொரூபமாக பரம் பொருள் அமர்ந்து
( அற ஆழியின் நடுவில் சுடராக , ஜோதியாக ) இரு நாசிகள் வழியே சுவாசத்தை
இழுத்தும் ,விடுத்தும் உடலைஇயக்க செய்து வருகிறது .
ந் சுவாதிஷ்டானம் பிரமன் ஆக்கள்
 ம் மணிபூரகம் திருமால் காத்தல்
சி அனாகதம் ருத்திரன் அழித்தல்
வ விசுக்தி மகேஸ்வரன் மறைத்தல்
ய ஆக்ஞை ஆசதாசிவன் அருளல்
மூலாதாரத்தின் அட்சரம் ஓம் அதன் அதிபதி விநாயகர்
எனவே அது இதில் சேர்க்கப்படவில்லை
இவ்வாறு அஞ்செழுத்தால் இந்த பிரபஞ்சமும் ,மனிதனும் இயங்கும் விதத்தை
நான்கு வரிகளில் நயமாக திருமூலர் விளக்குகிறார் .

*எந்த எந்த சுகத்தை யார் யார்



*1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*
*2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்*
*3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு*
*4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*
*5 தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்*
*6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*
*7 இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*
*8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்*
*9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு*
*14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*
*10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்*
*11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்*
*12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை*
*13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்*
*14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது*
*15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்*
*16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்*
*17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்*
*18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்*
*19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்*
*20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்*
*21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*
*22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார். saispiritualcenter.org*
*23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்*
*24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்*
*25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்*
*26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்*
*27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்*
*28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்*
*29 ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.*
*30 இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.*
*எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்*

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

தெய்வம்

தெய்வம்
கடவுளுக்குக் கற்பிக்கப்பட்ட உருவங்களைத் தெய்வம் என்கிறோம்.
தெய்வம் என்னும் சொல் 'தெய்' என்னும் உரையசைக் கிளவியிலிருந்து தோன்றியது.
அண்டவெளியில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒன்றோடொன்று உரசித் தேய்வதில் உயிரோட்ட ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தேய்தலில் பிறக்கும் ஆற்றலைத் தேய்வு < தேய்வம் < தெய்வம் என்றனர்.

கடவுள்

கடவுள்
கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச் சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர். வேறு சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை இறைவன் அல்லது ஆண்டவன் எனவும் அழைக்கிறார்கள்.

*பிரதோஷ விரத மகிமை- தோன்றிய வரலாறு*

*பிரதோஷ விரத மகிமை- தோன்றிய வரலாறு*
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.
*பிரதோஷம் பிறந்த கதை!*
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.
இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.
எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.
அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.
ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.
அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.
இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.
இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.
வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.
இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.
அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.
எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.
நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.
மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.
அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.
இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.
அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.
ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.
அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.
பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.
மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!
இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!
இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியை "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.
மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.
பிரதோஷ வகைகள்
நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.
பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.
மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.
மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.
பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.
பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும்
நெய் - முக்தி பேறு கிடைக்கும்
பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை
அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.விரதமிருப்போர் மேற்படி பிரதட்சனத்தை பின்பற்றலாம்.ஆனால் பூஜை நேரங்களில் வழிபடுவோரை இடையூறு செய்யும் வகையிலோ, பூஜை, உற்சவங்களை புறக்கணித்தோ இவ்வாறு வழிபாடு செய்யலாகாது.

இருபெருந் தெய்வம்

இருபெருந் தெய்வம்
பலராமன், திருமால்
பால்நிறத் தெய்வம் பலராமன், நீலநிறத் தெய்வம் திருமால் ஆகிய இருவரையும் இருபெருந் தெய்வங்கள் எனக் குறிப்பிட்டு சோழமன்னன் ஒருவனையும் பாண்டிய மன்னன் ஒருனையும் அந்த இருபெருந் தெய்வங்கள் போல விளங்கியதாக ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
சிவன், திருமால்
அந்தி வானமும் கடலும் சிவப்பும், நீல நிறமும் கொண்டு விளங்கியது இது சிவபெருமானும் திருமாலும் ஒருங்கு இருப்பது போல் தோற்றமளிப்பதாக ஒரு பாடல் குறிப்பிடுகிறது.[2]
அம்மையப்பர் தோற்றத்தை நற்றிணைப் பாடல் ஒன்று இருபெருந் தெய்வம் எனக் குறிப்பிடுகிறது.

’நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை எப்படி அறிவது ?

’நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை எப்படி அறிவது ?
சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.
‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்?
குருவுடம் சிஷ்யன் .,
கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.
குரு எதுவும் சொல்லாமல்,
அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.
பாடம் ஆரம்பித்த குரு,
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.
அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
சிஷ்யன் .,
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..
” பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..
“நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்
“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…”
“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.
குரு தொடர்ந்தார்,
‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.
புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.
இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.
இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.
ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும்,
சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் .

குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?

குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?
நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

முக்தி என்றால் என்ன?

முக்தி என்றால் என்ன?
பிறப்பு-இறப்பு மீண்டும் பிறப்பு என்ற
சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம பதத்தை அடைவதே
முக்தி எனப்படும். எண்ணிலடங்கா
முற்பிறவிகளில் செயல் செய்த
சேர்த்துவைத்திருக்கும் மிக அதிக அளவிலான
சஞ்சித கர்மங்கள் தீருவதற்குள்
ஒவ்வொரு பிறவியிலும் அதன் அளவை
எஞ்சியுள்ள ஆகாமி கர்மங்கள் மூலம்
அதிகரித்து வருகிறோம். எனவே கர்ம பலன்கள்
தீர்ந்து நாம் முக்தி அடைவது என்பது நமது
முயற்சியில்லாமல் தானாக நடை
பெறாது.
பரமனை தெரிந்து கொள்வதால்
மட்டுமே நாம் முக்தியடைய முடியும்.
எப்பொழுது ஞானம் அடைகிறோமோ
அப்பொழுது நாம் சேர்த்து வைத்துள்ள
மொத்த சஞ்சிதகர்மமும் ஆகாமி
கர்மமும் அழிந்து விடும் என்று வேதம் கூறுகிறது.
மேலும் பரமனை பற்றிய ஞானத்தை அடைந்தவுடன்
புதிதாக ஆகாமி கர்மம் சேராது.
எஞ்சியிருப்பது ப்ராரப்த கர்மம் மட்டுமே. எனவே
பரமன் யார் என்ற ஞானம் அடைந்தபின் நம்
வாழ்வு ப்ராரப்த கர்மத்தின்
கட்டுப்பாட்டின்படி நடந்து அது தீர்ந்தவுடன்
மீண்டும் பிறவா நிலையை அடைந்து விடுவோம்.

செல்வம் குறைவதின் அறிகுறிகள்.

செல்வம் குறைவதின் அறிகுறிகள்.
1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
3. தலைமுடி தரையில் உலாவருவது.
4. ஒற்றடைகள் சேருவது.
5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.
6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.
6. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
7. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
8. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.
சுவற்றில் ஈரம் தங்குவது.
9. செல் (கரையான்) சேருவது.
9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
9. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.
10. உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.
11. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
13. மெல்லிசை கேட்காமல்
சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.
14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.
இவற்றை தவிர்த்து, வளமுடன் வாழ்க வளர்க

ஆன்மீகத்திற்கும் உங்கள் மதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை!!!

ஆன்மீகத்திற்கும் உங்கள் மதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை!!!
--------------------------------------
ஆன்மிகம் என்றாலே அது எதோ ஒரு இந்து மத சம்பிரதாயம் என்ற தோற்றம் இன்றைய சூழலில் உள்ளது. ஆனால் நீங்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் உங்களின் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லவே இல்லை.
முதலில் ஆன்மிகம் என்றால் என்ன? என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
ஆன்மா என்றால் “நான்” (அ) “தான்” என்று பொருள். அவ்வளவே. இதைத்தவிர்த்து வேறு எந்த திவ்விய பொருளும் ஆன்மா என்னும் வார்த்தைக்கு கிடையாது. “தன்னைக் குறிக்கும் சொல்லே ஆன்மா/ஆத்மா” ஆகும். தன்னை அறியும் கலையே ஆன்மிகம் ஆகும். ஆன்மிகம் என்பது உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு கலை. அளப்பரிய அக்கலையை எவ்வாறு ஒரு மத ஜாடியில் அடைப்பது??!!!
ஆன்மிகத்தின் நோக்கம் என்ன??
மனிதனை, தான் வாழும் வாழ்கையை சிறப்பாக, முழுமையாக, அமைதியாக வாழ உதவும் கலையே ஆன்மிகம் ஆகும். மனம் இறக்கும் கலையே ஆன்மிகம் ஆகும். மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும், பிரச்சனைகளுக்கும், துயரங்களுக்கும் அவனவன் மனமே காரணம். மனம் அற்றுப்போனால் அங்கு ஆனந்தம், அமைதி மட்டுமே எஞ்சி நிற்கும்.
ஆன்மிகம் என்பது காவி கட்டுவதோ, காட்டிற்கு ஓடுவதோ, பாலை வீணே கல்லிற்கு ஊற்றுவதோ, இறைவன் அளித்த அருமை பரிசாம் மனித உடலை வருத்தி யாத்திரை செய்வதோ, செப்பிடு வித்தை காட்டுவதோ, ஆண்டவரை வானத்தில் இருந்து இறக்குவதோ.................. அல்ல. இவைகளால் உங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
பக்தியோ, ஞானமோ, யோகமோ, வேறு எதுவோ எந்த உக்தியை கையாளுவதால் உங்கள் மனம் அற்றுப்போகிறதோ, அதுவே ஆன்மிகம்!!!
மனம் இறக்கும் கலையே ஆன்மிகம். வேறு எதுவுமே அல்ல.

மனதை ஆளத்தெரியாதவன் மனிதனா?

மனதை ஆளத்தெரியாதவன் மனிதனா?
மனித மனமானது கோடான கோடி கைகளை உடையது. கண் எதை பார்க்கிறதோ,
எதை நினைக்கிறதோ அதை ஓர் கையில் பிடித்துக்கொண்டு காலம் முழுவதும் உன்னுடன் தொடர்கிறது. இப்படியாக பலகோடி கைகள். இவை என்றுமே மாறாத நினைவாக இருக்கிறது.
மனமானது ஆசை எனும் குதிரையில் சவாரி செய்கிறது. அந்த குதிரையோ கடிவாளம் கட்டாத குதிரையாக இருக்கிறது.
இந்த மனமானது எதை பார்க்கிறதோ,
எதை நேசிக்கிறதோ அதுவாக மாறுகிறது. காலப்போக்கில் பிரம்மாண்டமாக உருவெடுக்கிறது.
அது நன்மையாக இருப்பினும் சரி, தீமையாக இருப்பினும் சரி.
இதற்கு நன்மை தீமை தெரியாது.
அதற்கு கடிவாளம் இடாவிட்டால் மனுவாகிய நீ ஈசன் ஆக முடியாது. உனது மனதை நன்மையின் பாதையில் செலுத்தினால் பிழைப்பாய்.
நண்மை என்பதற்கு உதாரனம் இறைவன் மட்டுமே. நீ ஒருவருக்கு செய்யும் உபகாரமோ தான தர்மமோ நன்மை இல்லை.
உன்னை படைத்த இறைவனை நினைப்பதுவே நன்மை. அதுவே புன்னியம், அதுவே முக்தியை தரும்.
ஆசை எனும் மோகத்தில் அனைவரும் அலைகின்றனர் அல்லும் பகலும்.
உன் மோகமானது எதை பற்றுகிறதோ அதுவாக நீ ஆகிறாய்.
அழியும் பொருளாபரணங்கள் மீது அழியாத பற்றை வைத்தால் அழிந்தே போவாய்.
நாட்டையே அடக்கியாளும் மன்னனாக இருந்தாலும் ஆசையை வெல்ல முடியாது...
ஆனால் இந்த ஆசையை நன்மையின் பாதையில் செலுத்தி, சிந்தையில் சிவனை வைத்திட்டால் ஜீவனே சிவமாகும்.
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்கவேண்டாம் என்றும்
மனம் சித்தம்
புத்தியுடன்
ஆங்காரமும் அடக்கி
மெளனத்தில் மோனம்
கொண்டேன் சிவனே ஐயா என்றும்
மனதற்ற நிலையை பரிசுத்தம் துரியாதீத நிலை என்றும்
சத்திய வேதத்தில்
மனம் திரும்புங்கள்
பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது என்றும்
மனமே முருகனின் மயில்வாகனம் அதாவது கயிலாயம் வைகுண்டம் பிரம்மலோகம் போன்ற அதிமகோன்னத நிலைகளுக்கு சென்று வரும் வாகனம் என்றும்
கோயிலாவதேதடா
குளங்களாவதேதடா
கோயிலும் மனத்துளே
குளங்களும் மனத்துளே எனறும்
திருக்குறளில்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற என்றும்
கீதையில்
உன் மனத்திடை எம்மையே வை
எம்மையே குருவாகக் கொள். இதுசெய்யின் எம்மையே வந்தடைவாய் இது மெய்யே என்றும்
முன்வந்த அருளாளர்கள் மனுக்குலம் உய்ய மெய்வழியினை காட்டி தந்துள்ளனர்.

அஷ்டமி, நவமி திதி

அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது, தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.
✬ அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.
✬ தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார்.
✬ #ஸ்ரீபைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் #தேய்பிறை_அஷ்டமியில்#பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
✬ இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.
✬ ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளை வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
✬ நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால் அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.
✬ நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.
✬ தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.
✬ இவர்களே செல்வத்துக்கு அதிபதி.
மஹா விஷ்ணு, மஹாலட்சுமி, குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.
✬ ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும். அவ்வாறு ஜபித்தால், பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் ஐதீகம்.
✵ வர வேண்டிய பணம் வந்துவிடும்.
✵ தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
✵ வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
✵ சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
✵ வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும் தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
✵ அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
✵ பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.