jaga flash news

Tuesday 23 May 2017

அக்ஷய திருதியை!!

அக்ஷய திருதியை!!
(செய்யக் கூடாதவை, செய்ய வேண்டியவை)
-------------------------------
இனிய காலை வணக்கம் நண்பர்களே. இன்றைய நாள் இனியதாகுக.
இன்று அக்ஷய திருதியை. அதாவது சித்திரைமாதம் அமாவாசை சென்ற மூன்றாம் நாள். இன்று பலரும் தங்கம், வெள்ளி,..... வாங்குவத்தின் மும்முரமாக இறங்கியிருப்பீர்கள். ஆனால் அவ்வாறு வாங்குவது, உங்களுக்கு எதிர்பலனையே அளிக்கும் என்பதனை அறிவீர்களா நீங்கள்!!!
அக்ஷய திருதியை ஒரு அற்புதமான முகூர்த நாள், அன்று தங்கம் வாங்கினால் வருடம் முழுதும் செல்வம் செழிக்கும் என்று வியாபார உக்தியால் பலர் கூறுவதைக்கேட்டு இன்று நம் மக்கள் ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் அக்ஷய திருதியை முகூர்த நாள் கிடையாது. இன்று அருமையான "புண்ய கால தினம்"
புண்ய காலம் என்றால் என்ன?
கிரகண புண்ய காலம், மாதப்பிறப்பு புண்ய காலம் போன்று, நம் மூதாதையரை முன்னிறுத்தி, பித்ரு கார்யங்கள் செய்வதனால் நமக்கும் நம் சந்ததியருக்கும், நன்மை பல சேரும் நாள் புண்ய காலம் ஆகும்.
புண்ய கால தினங்களில் பொருட்கள் வாங்குவதோ விற்பதோ கூடவே கூடாது. அன்றைய தினம் முழுவதுமே முன்னோர் வழிபாட்டிற்கும், ஆலயம் தொழுதல், வழிபாடு செய்தல், முயன்ற அளவிற்கு இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்தல் முதலிய தெய்வீக சிந்தனையில் திளைக்கவேண்டிய புண்ணிய நாள் இன்று. ஆனால், விளம்பரதாரர்கள் கூறுவதைப்போல தங்கம் வாங்கினால், செல்வத்திற்கு பதிலாக தோஷமே வந்து நம்மை சேரும்.
புண்ய காலங்களில் வழிபாட்டைக்காடிலும் தானம் சிறந்த பலனை தரும். உப்பு, சர்கரை, அரிசி, மல்லிகைப்பூ போன்ற வெள்ளை நிரப்பொருட்களை தானம் செய்வது மிகவும் உயர்வு.
ஏழைகளுக்கும், முதியவருக்கும், குழந்தைகளுக்கும், வரியவருக்கும் அன்னதானம் செய்வது பல யாகங்களை நிகழ்த்தியதற்கு சமமாகும்.
நம் தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகவே மக்களுக்கு நீர்மோர், நீர், முதலிய தாகசாந்திக்கு உதவினால் அனைத்து தெய்வங்களும் வரங்களை உங்கள் இல்லம் தேடிவந்து அருளுவர்.
இது சத்தியம்!!!

1 comment: