jaga flash news

Tuesday 23 May 2017

முக்தி!!!

முக்தி!!!
----------------
முக்தி, மோக்ஷம் என்னும் வடமொழி சொல்லின் பொருளாவது, “விடுதலை, பூரண சுதந்திரம்” என்பதாகும். இங்கு நம் எதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று சிந்தித்தால், நம் மனதிலிருந்துதான் தாம் விடுதலை அடைய வேண்டும்.
மோக்ஷத்தின் எதிர்மறை “பந்தம்” அதாவது பற்றுதல் ஆகும்.
பந்தம் நீங்கினால் மோக்ஷம்!!!
இங்கு நாம் “பற்று” என்ற சொல்லை தவறாகவே புரிந்துள்ளோம். முதலில் அதிலிருந்து தெளிவடைய வேண்டும். உலகை சார்ந்த நம் பெற்றோரோ, மனைவி மக்களை, வீடோ, நண்பர்களோ............ இவை எதுவுமே பற்றே அல்ல. உண்மையில் அனைத்தும் அந்த முழுமையின் அங்கங்களே. இங்கு “என் மனைவி! என் மகன்! என்னால்தான் இவர்கள் உயிர் வாழ்கிறாரகள்! என் வீடு! நானே அதற்கு பொறுப்பு!!!................. என்ற “எனது” என்னும் மனதின் பிடிப்பே பற்று ஆகும். மனதில் பிடிப்பிலாமல் ஒன்று அல்ல பத்து மனைவி, நூறு பிள்ளைகள் இருந்தாலும் அது பற்றே ஆகாது!!!
மனதில் பற்று இல்லை என்பதற்காக ஒருவன் அனைத்தையும் துறந்துவிடுவான் என்று ஆகாது. இருக்கும்போது அவற்றுடன் இருப்பான், பொருட்கள் இல்லாதபோது அவற்றை சிந்தியான்.
1.வருவதை மனதில் எந்தவித விருப்போ வெறுப்போ இன்றி முழுமையாக ஏற்றுக்கொள்வதும்,
2.நம்மிடம் உள்ளவற்றிற்கு நாம்தான் பொறுப்பு, அவை என்னுடையவை என்ற எனது இல்லாமல்,
3.வந்தவை நம்மை விட்டு நீங்கும்போது போகிறதே, போய்விட்டதே என்ற தளர்ச்சி இல்லாமல் இருப்பதே மனதின் பிடியில் இருந்து விடுபட்டதன் அறிகுறி.
திரை அரங்கில், திரயின்மேல் காட்சிகள் நகர்ந்தாலும் அக்காட்சிகளால் திரைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாததுபோல, எது நடந்தாலும், எதனாலும் மனம் பாதிக்கபடாமல் இருப்பதே ஜீவன் முக்த நிலை ஆகும்!!!

No comments:

Post a Comment