jaga flash news

Tuesday 9 May 2017

சித்ரா பௌர்ணமி, சித்ர குப்தரைப் பிரார்த்திப்பதால் அவர் நம் பாவங்களைப் பொருத்தருள்வார்

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி கூடிய நாளே சித்ரா பௌர்ணமி. பௌர்ணமி தினங்களிலேயே, இந்த சித்ரா பௌர்ணமிக்குத்தான் சிறப்பு அதிகம். சித்ரா பௌர்ணமி தினம் எமதர்மராஜன் சபையில் நம் பாவ புண்ணியக் கணக்கை எழுதும் கணக்கரான, சித்ரகுப்தன் அவதரித்த நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர், சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை, நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம்.
சித்ரா பௌர்ணமி நாளான நாளை சித்ரகுப்தரை வழிப்படுவதன் மூலம் நம் பாவ கணக்குகளை சிறிது குறைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணியங்கள் அனைத்தும் சித்ரகுப்தரால் எழுதப்படுகிறது என்கிறார்கள். எனவே சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தரை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சித்ரா பௌர்ணமி அன்று காலை விரதத்தை தொடங்கி '#சித்ரகுப்தாய_நம" என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்.
சித்ரகுப்தன் பிறந்தவுடன் பசு மாண்டு போனதால், சித்ரா புத்ர விரதம் இருப்பவர்கள் பசுவின் பாலையும், அந்தப்பாலில் இருந்து பெறப்படும் உணவு வகைகளையும் சேர்க்கக் கூடாது.
சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு, குடும்ப பிரச்சனைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.
சித்ர குப்தரைப் பிரார்த்திப்பதால் அவர் நம் பாவங்களைப் பொருத்தருள்வார்.
ஒவ்வொரு வருடத்தின் முதலாவது பௌர்ணமியன்று செய்யப்படும் இந்த வழிபாட்டின் மானசீகமான பலன், இந்த பூவுலகில் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் இடைவிடாமல் கண்காணிக்கும் ஒரு மேலான சக்தி இருக்கிறது என்பதை நமக்கு நினைவு ட்டுவதாகும்.
சித்ரகுப்தருக்கு தமிழகத்தில் இரண்டு இடங்களில் கோவில்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் தனிக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல தேனி மாவட்டம், போடி அருகில் ஒரு கோவில் உள்ளது.
சித்ரா பௌர்ணமியன்று மாலையில் ஒருமுறை ஸ்நானம் செய்து, இறைவனுக்கு படையல் செய்து பூஜித்து, சித்ரகுப்தனை மனதில் எண்ணி, 'நாங்கள் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்" என்று பிரார்த்திப்பது முற்காலத் தமிழர் மரபு.
சித்ரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.
சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து ஒரு பேப்பரில் 'சித்ர குப்தன் படியளப்பு" என்று எழுதி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment