jaga flash news

Sunday 3 May 2020

வேள்ளரிக்காய்


தசை முதல் எலும்பு வரை வலுவடைய செய்யும் வெள்ளரிக்காய் தண்ணீரின் அசர வைக்கும் ஏழு நன்மைகள்!!!!


health benefits of cucumber water in tamilகோடை காலத்தில் நம்மை புத்துணர்ச்சி ஆக்க ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் தண்ணீரை விட வேற என்ன வேண்டும்…. அப்படின்னா என்னன்னு யோசிக்கிறீர்களா…??? வெள்ளரிக்காயை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஊற வைத்து கிடைக்கும் தண்ணீர் தான் வெள்ளரிக்காய் தண்ணீர். இப்போது அதன் பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வெள்ளரிக்காய் தண்ணீருக்கு உண்டு. வெள்ளரிக்காயில் உள்ள பயன்கள் அத்தனையும் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு வெள்ளரிக்காய் தண்ணீர் தான் சிறந்த வழி. 

வெள்ளரிக்காயில் வைட்டமின் C, வைட்டமின் A, மாங்கனீஸ், மாலிப்டினம் மற்றும் பல ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. நமக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. இப்போது வெள்ளரிக்காய் தண்ணீர் நம் உடலுக்கு ஆற்றும் நன்மைகளை பார்க்கலாம்.

1.உடல் எடை குறைப்பு:

வெள்ளரிக்காய் தண்ணீரில் குறைவான அளவு கலோரிகளும் அதிக அளவில் நார்ச்சத்தும் உள்ளது. உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதனை உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனை அருந்திய பிறகு வயிறு நிரம்பியது போல ஒரு உணர்வை கொடுத்து பசியை தூண்டாது.

2. புற்றுநோய்:

ஆன்டி ஆக்ஸின்டுகளை தவிர்த்து வெள்ளரிக்காயில் குர்குபிடேசின் என்ற பொருளும், லிக்னன்ஸ் என்ற ஊட்டச்சத்தும் உள்ளது. இவை புற்றுநோய் வராமல் தடுப்பதில் பெரிதும் உதவுகிறது. மேலும் வெள்ளரிக்காயில் உள்ள டையட்டரி ஃபிளவனாய்டான ஃபிசடின், பிராஸ்டேட் புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கிறது.

3. உயர் இரத்த அழுத்தம்:

கிட்னியில் தேங்கி உள்ள சோடியம் அளவை சீராக வைக்க உதவும் பொட்டாசியம் வெள்ளரிக்காயில் உள்ளது. நம் உணவில் அதிகமான சோடியம் இருக்கும் பட்சத்தில் அது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் தண்ணீர் எடுத்து கொள்ளுதல் நல்லது.

4. நீர்ச்சத்து:

நம் உடலானது சரியான வகையில் இயங்க முக்கியமாக தேவைப்படுவது தண்ணீர். ஒரு நாளைக்கு குறைந்தது எட்டில் இருந்து பத்து டம்ளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வெள்ளரிக்காய் தண்ணீர் குடிக்கும் போது நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதோடு சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்கும்.

5. எலும்பு ஆரோக்கியம்:

வெள்ளரிக்காயில் வைட்டமின் K எக்கச்சக்கமாக உள்ளது. எலும்புகள் மற்றும் திசுக்களை வலிமையாக வைக்க உடலுக்கு தேவையான புரதச்சத்தை உற்பத்தி செய்ய வைட்டமின் K தேவைப்படுகிறது. 

6. தசைகள்:

தசைகளின் திசுக்களை ஆரோக்கியமான முறையில் வைத்து கொள்ள உதவும் பொட்டாசியம் வெள்ளரிக்காயில் உள்ளது. உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் தண்ணீர் குடிப்பது தசைகளுக்கு மிகவும் நல்லது. 

7. சரும பாதுகாப்பு:

வெள்ளரிக்காயில் வைட்டமின் B5 அதிகமாக உள்ளதால் சருமத்திற்கு இது மிகவும் நல்லது. பருக்கள் ஏற்படாமல் தடுக்கும். தினமும் வெள்ளரிக்காய் தண்ணீர் குடித்து வந்தால் சருமம் உள்ளிருந்து வெளியே ஆரோக்கியமாக இருக்கும்.


No comments:

Post a Comment