jaga flash news

Saturday, 3 October 2020

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள் பற்றிய பகிர்வுகள்

*பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள் பற்றிய பகிர்வுகள் :*

முன்னோர்கள் செய்த பாவங்கலால் அவர்களது வம்சா வழியினர் துன்பவங்களை அனுபவிக்கிறனர். அவர்களுக்கு சில எளிய சாப நிவர்த்தி முறைகள் உள்ளது. இந்த பரிகார நிவர்த்தி முறைகளை செய்தாலே போதும் முனோர்களின் சாபத்தில் இருந்து நாம் விடு பட முடியும்.

  வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை, முன்னோர்கள் இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை அழைத்து முறைப்படி செய்து பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும். அப்படி செய்ய தவறிவிட்டால் நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினருக்கு ஏற்பட்டு விடுகிறது. 
 
*பரிகாரங்கள்*

     அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி வெல்லம், எள்ளு இவற்றை கலந்து கொடுக்க வேண்டும். இப்படி செய்துவந்தால் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையும். அதே போல், அவர்களின் நினைவு நாளான்று முறைப்படி தர்ப்பணம் முதலியவற்றை செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.
 
     பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் லட்சுமி நரசிம்மர் படம் முன், பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலை வேளைகளில் நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
 
    அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால் அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்ல் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
 
     மேற் குறிப்பிட்டுள்ள நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது புன்னிய நதிகலுக்கு சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகும்.

*🤘ஓம் நமசிவாய🙏*
________________________

No comments:

Post a Comment