jaga flash news

Wednesday, 14 October 2020

சுதர்ஸன ஹோமம்

சுதர்ஸன ஹோமம்.


ஐந்தவ பாரதீய சனாதான தர்ம விஸ்வாசத்தின்படி, குடும்பங்களில், ப்ரேத உபாதைகள், சத்ருதோஷைம், குடும்ப ஐஸ்வர்யம் போன்றவற்றிற்காக ஹைந்தவ ஆச்சாரங்கள் ப்ரகாரம், நடத்தப்படும் ஒரு ஹோமம் தான்,
சுதர்ஸன ஹோமம்.

விஷ்ணு பகவானை சங்கல்பா மூர்த்தியாக சங்கல்பித்து நடத்தப்படும் ஒரு ஹோமம் இது.

ஸுதர்ஸன மந்திரங்கள் ஆயிரம், பதினாயிரம் தவணைகள் சொல்லி செய்யப்படுகின்றது,

சுதர்ஸன சக்கரத்தை களம் வரைந்து அதன்நடுவே ஹோமகுண்டலம் நிர்மாணித்து ஹோமம் நடத்தப்படுகின்றது.

ஹோம குண்டல அக்னியில், எள்ளு, அக்ஷதம், பஞ்சகவ்யம், கடுகு , நெய், பால்பாயாஸம் போன்ற திரவியங்கள் தான் ஹோமத்தில் உபயோகப்படுத்துகின்றது.
பூஜா விதி பிரகாரம் மற்ற வஸ்துக்களையும் சேர்த்து கொள்ளப்படுகின்றது.
தோஷ சாந்திக்கு வேண்டி மகா சுதர்ஸன யந்த்ர தாரணவும் அப்போது நடத்தபடும்.

ஏகதேஸம் இரண்டு அல்லது மூன்றுமணிநேரம் நடத்தப்படும், ஹோமம் நடத்தி முடிந்தபின்னே சுதர்ஸன களத்தின் வெளியே பூசணிக்காய் முறித்து குருதி தர்ப்பணம் கொடுக்கப்படவேண்டும்.

தொடர்ந்து பூஜா சுதர்ஸன மந்திரங்கள் ஆவாஹித்து, ஆவாஹித்து, விஷ்ணு பகவானின் சுதர்ஸன சக்தியை தண்ணீரில் ஒழுக்கி களைந்து ஹோமம் அவஸானிக்கப்படும்.

சுதர்ஸன சக்கரம் என்பது விஷ்ணுபகவான் வலதுகையில் எப்போதுமே சுற்றி கொண்டிருக்கும் ஒரு ஆயுதம்.
சுதர்ஸனம் என்கிற பெயரை நன்கு பிரித்து பார்த்தாலே அதனின் அர்த்தம் வெளிபடும். 

சுதர்ஸனம் என்றால் ஆயிரம் பலம் கூடிய திருஷ்டி என்று அர்த்தம். மனுஷ்யன்மார்களுக்கு, சத்ரு உபாதைகள், நீங்கவும்.. காரியதடைகள் நீங்கவும், ஐஸ்வர்யங்கள் அபிவிருத்திக்கவும் விஷ்ணுபகவான் வலதுகையிலுள்ள, ஆயிரம் ஆரங்கள் கூடிய அதாவது ஆயிரம் பற்கள் கொண்ட சுதர்ஸன சக்கரத்தின் திருஷ்டியானது மேற்சொன்ன நமதுதோஷங்களை நீக்கியும், ஐஸ்வர்யங்களும்., சம்பத்துகளும் தந்து ரக்ஷிக்கின்றது. 

உத்திஷ்ட பல ப்ராப்திக்கு வேண்டியும் குடும்ப ஐஸ்வர்யங்கள்., சத்ரு உபாதைகள், போன்றவற்றை நீக்க சுதர்ஸன சக்கரத்தையும், அதை கரத்தில் தாங்கியுள்ள விஷ்ணுபகவான் அனுக்ரகத்தையும் பெற சுதர்ஸனமஹா  மந்திரம் சொல்வது சிறப்பான ஒன்று. 

ஜாதகத்தில் வியாழகிரகம் அனிஷ்டகக்ஷேத்ரங்களில் ( 6., 8 12) பாவகங்களில் மறைந்திருந்தால் ஜாதகர்களுக்கு தெய்வாதீன அனுக்ரகம் குறைவாக உள்ளது என்றும், அதனால் காரியதடைகள், குடும்ங்களில் சந்தோஷம் இல்லாய்மை போன்றவை ஏற்படும்,
அப்போது குடும்ப பவனத்தில்  சுதர்ஸன ஹோமம் நடத்தினால் வியாழ தோஷங்கள் நீங்கும்.
இவ்வாறு மஹா சுதர்ஸன ஹோமம் செய்யமுடியாதவர்கள் வியாழக்கிழமை தோறும் மஹாசுதர்ஸன மந்திர மந்திரம்.
புருஷன்மார்கள் மட்டுமே சொல்லவேண்டும். ஸ்த்ரீமார்கள் சொல்லக்கூடாத மூலமந்திரம் என்கிற விவஸ்தையும் உண்டு.
நித்யமும் 108 தடவை சுதர்ஸன மகாமந்திரம் பாராயணம் செய்யலாம்.
108 முறை பாராயணம் செய்யமுடியாதவர்கள், அதன் பாதி 54 முறையும் சொல்லலாம்.

காலையில் சூரியோதயத்தில் ஜலஸ்நானம் செய்து நெற்றியில் குறி சார்த்தி பலகையில் அமர்ந்து சொல்லவேண்டும். தரையில் அமர்ந்து சொல்லகூடாது.

கல்பாந்தர்க்க ப்ரகாஸம்,
திரி புவன மகிலம் தேஜஸா புரயந்தம்,
ரக்தாக்ஷம் விம்ஸ கேஸம்,
ரிபு குல பயாபம்பீ மதம் ப்ரஷ்டாட்ட காஸம்,
சக்கரம் சங்கம் கதாப்தஜே,
புது தர மூஸலம் சாப 
பாஸாங்குசான் ஸைய்ர்,
பிப்ராணம் தோர்பிராத்யம் மனஸி,
முரரீ பும்பவனயே சக்ர ஸம்ஜந்தம் ;

பொருள் ;

கல்பாந்த சூரியனை போல அதி பிரகாசமுள்ளவரே,
சுய தேஜஸும் சக்தியும் கொண்டு மூன்று லோகத்தையும் பிரகாசிப்பவரே,
சிவந்த நிறம் கொண்ட கண்களை உடையவரே!
பிங்கள நிறம் கொண்ட தலைமுடி கொண்டவரே!
சத்ருக்களுக்கு பயங்கரமானவரே!

சங்கும், சக்கரமும், கதாயுதமும், தாமரைப்பூவூம், பெரிய இரும்பு உலக்கையும், வில்லும், கயறும், கட்டையும், கைகளில் தரித்துள்ளவரே!

அதி மூர்த்தி நீயல்லவோ!
சக்கரம் கூடிய சூரிய ப்ரகாஸம் கூடிய சங்குசக்ரதாரீ அல்லவோ!
நின்னை மஹாசுதர்ஸன ஹோமம் செய்தும், மந்திரங்கள் சொல்லியும் வணங்கி வருகின்றேன்.

ஸுதர்ஸன மந்திரம்.
..........,...........
ஓம் கிலிம் கிருஷ்ண கோவிந்தாய கோ பீஜன வல்லபாய பராய பரம் புருஷாய பரமாத்மனே பர கர்ம்மா,
மந்திர யந்த்ரௌஷதாஸ்த்ர ஸஸ்த்ராணி,
ஸங்கர ஸங்கர பகவதே ம்ருத்யோர்த்,
மோர்ச்சய மோசய,
ஓம் நமோ பகவதே மஹா சுதர்ஸனாய,
தீப்தே ஜ்யாலா பரீதாய,
ஸர்வதிக்ஷோபணகராய ப்ரம்மணே,
பர ம்ஜோதிஷே ஹும் ஹட் ஸாகா :

No comments:

Post a Comment