jaga flash news

Sunday, 11 October 2020

மாதுளை இலையின் மருத்துவ பயன்கள்

மாதுளை இலையின் மருத்துவ பயன்கள்

◆காது வலியால் அவதிப்படுபவர்கள் மாதுளை இலைகளை நன்கு கழுவி கடுகு சேர்த்து அரைத்து சாற்றை வலி இருக்கும் காதில் சில துளிகள் விடவும். காது வலி மாயமாக மறைந்திடும்.

◆சீரான செரிமான செயலிற்கு மாதுளை இலை மிகவும் உதவக்கூடியவை.
வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவராக இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.
அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் செரிமானத்தை சீராக்கி, உடலுக்கு தேவையான ஆற்றவை வழங்கிடுகிறது. மேலும், வயிற்று போக்கு, அஜீரண கோளாறையும் நீக்கிடுகிறது.

◆மாதுளை இலைகளால் செய்யப்பட்ட மாத்திரை உள்ளிட்ட பிற மருந்துகளையும் நீங்கள் உட்கொள்ளலாம். வயிற்றுபோக்கால் அவதிப்படுபவர்கள் மாதுளை இலை சாற்றை குடித்தால் உடனே நின்றுவிடும். அதற்கு, மாதுறை இலை சாற்றுடன், சிறிது மாதுளை ஜூஸையும் சேர்த்து குடிக்கவும்.

◆ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மாதுளை இலையில் நிறைந்துள்ளது. அவை வாயில் காணப்படும் பாக்டீரியாக்களை அழித்துவிடக்கூடியது.

◆வாய் புண் பிரச்சனை என்பது மிகவும் கடினமான ஒன்று. அதற்கு, மாதுளை இலைகளால் செய்யப்பட்ட ஜூஸை குடித்து வர வாய் புண் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடலாம்.

◆பரு மற்றும் கொப்பளம் போன்றவற்றை உடனே போக்குவதற்கு மாதுளை இலைகளை பயன்படுத்தலாம்.

◆பரு இருக்கும் இடத்தில் மாதுளை இலை பேஸ்டை தொடரந்து தடவி வரவும். இப்படி செய்ய இருந்த இடம் தெரியாமல் பரு மறைந்திடும்.

◆மாதுளை ஜூஸை சிறந்த டோனராக கூட பயன்படுகிறது. அவை சரும துளைகளை அடைத்து, சருமத்தை ஜொலிக்க செய்திடும்.

◆சளி பிடித்திருக்கும் வேளையில் மாதுளை இலையை பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும்.
அதற்கு மாதுளை இலைகளை பயன்படுத்தி டீ போட்டு குடிக்க வேண்டும். சிறிது மாதுளை இலைகளை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
அதனை கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, இறக்கி குடிக்கவும். தினமும் 2 முறை இதனை குடித்து வந்தால், தொற்று கிருமிகள் நீங்கி, சளி, இருமல் தொல்லை நீங்கி விடும்.

No comments:

Post a Comment